Vijay - கேடு கெட்டவர்களில் கேவலமானவன்தான் கெட்ட வார்த்தை பேசுவான்.. விஜய்யை விளாசிய தயாரிப்பாளர்

சென்னை: Leo (லியோ) லியோ படத்தில் கெட்ட வார்த்தை பேசியதற்காக விஜய்யை தயாரிப்பாளர் கே.ராஜன் கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

விஜய் நடித்திருக்கும் லியோ திரைப்படம் இன்னும் 8 நாட்களில் ரிலீஸாகவிருக்கிறது. படத்தின் ரிலீஸ் நாளை திருவிழா போல் கொண்டாட அவரது ரசிகர்கள் தயார் நிலையில் இருக்கிறார்கள். கடந்த ஐந்தாம் தேதி படத்தின் ட்ரெய்லர் வெளியானது. இன்று மாலை 6 மணிக்கு மூன்றாவது சிங்கிள் வெளியாகவிருக்கிறது. படத்தின் ப்ரீ புக்கிங் 14ஆம் தேதியிலிருந்து தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Producer K.Rajan Criticized Vijay For Leo Trailer Bad Word Issue

விமர்சனம்: லியோ படத்தின் ட்ரெய்லரை ரசிகர்கள் கொண்டாடினாலும் மறுபக்கம் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. அதாவது விஜய் போன்ற ஒரு பெரிய ஹீரோ பொறுப்பே இல்லாமல் ஏன் கெட்ட வார்த்தை பேசுகிறார். இவரா தமிழ்நாட்டை ஆள ஆசைப்படுகிறார் என்று தொடர்ந்து கூறுகின்றனர். ஆனால் விஜய்யோ எதற்கும் ரியாக்‌ஷன் செய்யாமல் அமைதியாக இருக்கிறார்.

ராஜன் பேச்சு: இந்நிலையில் தயாரிப்பாளர் கே.ராஜன் பட விழா ஒன்றில் பேசுகையில், " ஒருகாலத்தில் சினிமா நாகரீகத்துக்காக, சமூகத்துக்காக படம் எடுத்தார்கள். இப்போது 10 சதவீதம் பேர் பணத்துக்காக படம் எடுக்கிறார்கள். 90 சதவீதம் பேர் திரையுலகத்துக்காக படம் எடுக்கிறார்கள். கேடு கெட்டவர்களில் கேவலமானவந்தான் கெட்ட வார்த்தை பேசுவான். சில வார்த்தைகள் இப்போதெல்லாம் வழக்கொழிந்து போய்விட்டது. ஆனால் அது சினிமாவில் மீண்டும் வருகிறது.

கேடுகெட்ட கேவலமான வார்த்தை: அதை பெரிய ஹீரோ சொல்லும்போது அது மக்களுக்கு எளிதாக கொண்டு போய் சேரும். இளைஞர்கள் நம்பிக்கொண்டிருக்கிற அதுவும் தலைவனாக வரப்போகிறவர் என்று நினைக்கும் ஒருவர் இப்படி பேசலாமா. அது எப்படி சரியாக வரும். லோகேஷ் கனகராஜ் அருமையான இயக்குநர். அந்த தம்பி இன்னும் வளர வேண்டும் என்று வாழ்த்துகிறேன். ஆனால் இப்படி கேடுகெட்ட கேவலமான வார்த்தை வைத்தால் வாழ்க்கை சரி இருக்காது.

இந்த வேலை வேண்டாம்: இது தமிழ்நாடு தயவு செய்து இந்த வேலையெல்லாம் வேண்டாம். சிலர் சொல்கிறார்கள். இதெல்லாம் நடைமுறையில் பேசுவதுதானே என்று. எத்தனை பேர் நடைமுறையில் இப்படி பேசுகிறார்கள். ஏதோ 4 பேர் பேசுவதை 4 கோடி மக்கள் கேட்கும்படி சொல்வியா. வீடுனு ஒன்னு இருந்தால் அதில் பாத்ரூம் என்று ஏன் தனியாக கட்டுகிறார்கள். சமையல் ரூமிலேயே வைத்துக்கொள்ள வேண்டியதுதானே.

Producer K.Rajan Criticized Vijay For Leo Trailer Bad Word Issue

தவறான வழிகாட்டுதல்: எங்கே எது இருக்கணுமோ அங்கே அது இருக்கணும்: எங்கே எது இருக்கணுமோ அங்கே அது இருக்கணும் என்பதுபோல் எங்கே எதை பேச வேண்டுமோ அங்கே அதை பேச வேண்டும். அதிலும் பேச்சை குறைத்து தவறுகளை தவிர்த்தால் மற்றவர்களால் பாராட்டப்படுவார்கள்.கோடி கோடியாக சம்பளம் வாங்கிக்கொண்டு கெட்ட வார்த்தையை பேசலாமா. அது இளைஞர்களுக்கு தவறான வழிகாட்டுதலை கொடுக்கும்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X