6 கோடி சம்பளம் எதுக்கு?... நயன்தாராவை வம்புக்கு இழுத்த தயாரிப்பாளர் !
சென்னை : மெய்ப்பட செய் திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழாவில் பேசிய தயாரிப்பாளர் கே ராஜன், நயன்தாராவை கடுமையாக விமர்சித்து பேசினார்.
எஸ்.ஆர்.ஹர்ஷித் பிக்சர்ஸ் சார்பில் பி.ஆர்.தமிழ் செல்வம் தயாரித்துள்ள படம் மெய்ப்பட செய்.
ஆதவ் பாலாஜி நாயகனாகவும், மதுநிக்கா நாயகியாகவும் நடித்துள்ள இந்தப் படத்தை வேலன் இயக்கியுள்ளார். படத்தின் அனைத்துப் பணிகளும் முடிந்து, ரிலீஸ் வேலைகள் நடந்து வருகின்றன.

மெய்ப்பட செய்
மெய்ப்பட செய் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய தயாரிப்பாளர் கே ராஜன், பேச வரும் போதே தொகுப்பாளினியை கிண்டலடித்துக்கொண்ட பேசத் தொடங்கினார். மெய்ப்பட செய் படக்குழு என்னை வெச்சு செய்துவிட்டது என்றார். எந்த ஒரு பெண்ணையும் விருப்பம் இல்லாமல் ஒருவர் பலாத்காரம் செய்தால் அவனை மெய்யெல்லாம் செய் அவனை குத்தி குத்தி கிழி என்பதே மெய்ப்பட செய் படத்தின் கருத்து இப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் என்றார்.

வீண் செலவு செய்யாதீர்கள்
இப்போது சினிமாவில் அதிக சம்பளம் வாங்கியும், தேவையில்லாத அளவுக்கு செலவு செய்தும் சினிமாவை கெடுத்து வருகிறார்கள். திறமையானவர்களை நான் குறைசொல்ல மாட்டேன். தயாரிப்பாளர் பாதிக்காத வகையில் நியாயமான சம்பளத்தை கேளுங்கள். வெற்றியில் எப்படி நடிகர்களுக்கு பங்கு இருக்கிறதோ, அதே போல தோல்வியிலும் பங்கு எடுத்துக் கொள்ளுங்கள் அப்போது தான் தமிழ் சினிமா நன்றாக இருக்கும் என்றார்.

தெலுங்கு நடிகர்களை போல
தெலுங்கு நடிகர் பிரபாஸ், ராம்சரண் போன்ற தெலுங்கு பிரபலங்கள் தோல்வியில் பங்குகொள்கின்றனர். தமிழ்நாட்டில் அப்படி இல்லை. நடிகர்கள் 100 கோடி வாங்கினால், எப்படி படம் எடுப்பது? நடிகர்கள் போனி கபூருக்கும், தெலுங்கு தயாரிப்பாளருக்கும் படம் கொடுக்கின்றனர். கஷ்டப்படும் தமிழ்த் தயாரிப்பாளர்களைக் கண்டுகொள்வதில்லை என்றார்.

6 கோடி சம்பளம் எதுக்கு
இப்போதெல்லாம் நாயகிகள் பாடல் வெளியீட்டு விழாவுக்கு வருவதில்லை. நயன்தாரா, பாடல் வெளியீட்டுக்கு வருவதில்லை. அவர்கள் வந்து படம் ஓடாவிட்டால், அவர்களுக்குக் கெட்ட பெயராம். அதற்காகவா 6 கோடி சம்பளம் கொடுக்கிறோம். நடிகர், நடிகையரைத்தான் எல்லோரும் பார்க்கிறார்கள். அவர்கள்தான் படத்தை ஓடவைக்க வேண்டும். கதாநாயகர்களுக்குச் செலவு செய்வதற்கு பதில், கதைக்குச் செலவழிக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் கே ராஜன் நயன்தாராவை வம்பு இழுத்து பேசினார்.


Click it and Unblock the Notifications











