விஜய்யின் பிகில் இந்தப் படத்தோட காப்பியா... அட்லீயை வறுத்தெடுத்த தயாரிப்பாளர் கே ராஜன்!

சென்னை: ஆர்யா, நயன் நடித்த ராஜா ராணி திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அட்லீ.

விஜய் நடித்த தெறி, மெர்சல், பிகில் என அடுத்தடுத்து சூப்பர் ஹிட் படங்களை இயக்கி மாஸ் காட்டினார்.

தற்போது கோலிவுட்டில் இருந்து பாலிவுட் சென்ற அட்லீ, ஷாருக்கான் நடிப்பில் ஜவான் படத்தை இயக்கி வருகிறார்.

இந்நிலையில், அட்லீ மீது தயாரிப்பாளர் கே ராஜன் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து கடுமையாக விமர்சித்துள்ளார்.

 கோலிவுட் டூ பாலிவுட்

கோலிவுட் டூ பாலிவுட்

ஆர்யா - நயன்தாரா நடித்த ராஜா ராணி திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அட்லீ. மணிரத்னத்தின் மெளன ராகம் படத்தை லேசாக பட்டி டிங்கரிங் பார்த்து ராஜா ராணியை இயக்கியுள்ளார் என விமர்சனங்கள் வெளியாகின. ஆனாலும் அதனையெல்லாம் கண்டுகொள்ளாத அட்லீ, விஜய் நடிப்பில் தெறி, மெர்சல், பிகில் என அடுத்தடுத்து சூப்பர் ஹிட் படங்களை இயக்கினார். இதுவும் பழைய படங்களின் லேட்டஸ்ட் வெர்ஷன் என விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில், தற்போது கோலிவுட்டில் இருந்து பாலிவு சென்ற அட்லீ ஷாருக்கான் நடிக்கும் ஜவான் படத்தை இயக்கி வருகிறார்.

 விளாசிய கே ராஜன்

விளாசிய கே ராஜன்

ஏற்கனவே அட்லீயின் திரைப்படங்களை ரசிகர்கள் அதிகம் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், தயாரிப்பாளர் கே ராஜனும் கடுமையான விமர்சனங்களை முன் வைத்துள்ளார். முக்கியமாக விஜய்யின் பிகில், ஷாருக்கான் நடிப்பில் இந்தியில் ஹிட் அடித்த சக் தே இந்தியா படத்தின் காப்பி என ரோஸ்ட் செய்துள்ளார். 2007ம் ஆண்டு ரிலீஸான சக் தே இந்தியா மகளிர் ஹாக்கி விளையாட்டுப் பின்னணியில் உருவானது. ஆனால் அட்லீ அதனை ஃபுட்பாலாக மாற்றி பிகில் படத்தை இயக்கிவிட்டார் எனக் கூறியுள்ளார்.

 தயாரிப்பாளர் வேதனை

தயாரிப்பாளர் வேதனை

மேலும், ஏஜிஎஸ் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனம் என்பதால் பிகில் படத்தை எப்படியோ சமாளித்து விட்டார்கள். ஆனால் சாதாரண தயாரிப்பாளர்களால் இது முடியுமா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். அதுமட்டும் இல்லாமல் பல இயக்குநர்கள் அவுட்டோர் ஷூட்டிங் செல்லும்போது கமிஷன் வாங்குவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். திரையுலகில் நடக்கும் சமீபத்திய பிரச்சினைகளையும் அதன் பின்னணி பற்றியும் காரசாரமாக விமர்சித்து வருகிறார் கே ராஜன். அந்த வரிசையில் இப்போது அட்லீயை சின்னாபின்னமாக்கிவிட்டார் என ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

 ஜவான் அப்டேட்

ஜவான் அப்டேட்

அட்லீ தற்போது ஷாருக்கான் நடிக்கும் ஜவான் படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் ஷூட்டிங்கை இன்னும் முடிக்காமல் அட்லீ தண்ணி காட்டி வருவதால் அட்லீ மீது கோபத்தில் உள்ளாராம் ஷாருக்கான். இந்தப் படத்தில் நயன்தாரா, தீபிகா படுகோனே, விஜய் சேதுபதி, ப்ரியாமணி, யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். ஜூன் 2ம் தேதி ஜவான் ரிலீசாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 இறுதிக்கட்ட படப்பிடிப்பு

இறுதிக்கட்ட படப்பிடிப்பு

இதனால் ஜவான் படத்தின் ஷூட்டிங்கை சீக்கிரமாக முடிக்க வேண்டும் என அட்லீக்கு ஆர்டர் போட்டுள்ளாராம் ஷாருக். ஏற்கனவே பட்ஜெட்டில் பதம் பார்த்த அட்லீ, இப்போது ஷூட்டிங் தேதியிலும் சொதப்பிவிட்டதாக சொல்லப்படுகிறது. மேலும், ஜவான் ஷூட்டிங் முடிந்ததுமே உடனடியாக ஃபர்ஸ்ட் சிங்கிள் அல்லது டீசரை வெளியிட உள்ளதாம் படக்குழு. இதனிடையே ஜவான் திரைப்படமும் பழைய தமிழ்ப் படத்தின் காப்பி தான் என தகவல் வெளியாகியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X