அடிச்சு சொல்றேன்..விஜய் அரசியல்ல படுதோல்வி அடைவார்.. தயாரிப்பாளர் கே.ராஜன் பரபரப்பு பேட்டி

சென்னை: நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது குறித்து தயாரிப்பாளர் கே.ராஜன் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.

நடிகர் விஜய் அரசியலில் நுழைய உள்ளது தான் தற்போது தமிழ்நாட்டில் ஹாட் டாப்பிக் ஆக உள்ளது. அவர் எப்போது அரசியல் அறிவிப்பை வெளியிடுவார் என அவரது ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

விஜய் அரசியலில் நுழைவது குறித்து வெளியிடாவிட்டாலும், அதற்கான பணிகளை சைலண்டாக செய்துகொண்டு தான் இருக்கிறார்.

Producer K. Rajan interview about Vijay entering politics

சரியான நேரம்: இந்நிலையில் தயாரிப்பாளர் விஜய் அரசியலுக்கு வருவது குறித்து யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், விஜய் அரசியலுக்கு வருவதற்கு இதுதான் சரியான நேரம், படங்கள் சரிய ஆரம்பித்து விட்டால் அரசியல் எடுபடாது. இப்போது அவர் ஒரு முதல் தர ஹீரோவாக இருப்பதால் இந்த நேரம் தான் அவருக்கு சரியான நேரம். கடந்த சில ஆண்டுகளாக ரஜினிபோல அரசியலுக்கு வரேன், வரேன் என்று ஒளிந்துக்கொண்டே இருந்தார். ஆனால், இந்த ஒருமாத காலமாக அவர் அரசியலுக்கு வருவது பக்காவாக தெரிந்து விட்டது.

படுதோல்வி அடைவார்: ஆனால், ஆண்டுக்கு ஒரு படமாவது அவர் நடித்துவிட வேண்டும், அவருக்கு இருக்கும் இமேஜை படம் தான், அந்த படத்தில் நடித்துக்கொண்டு தான் அவர் அரசியலில் இறங்க வேண்டும் படத்தை ஒதுக்கிவைத்து விட்டு அரசியலில் இறங்கினால் படுதோல்வி அடைவார். ஏன் என்றால், அரசியல்வாதிக்கு என்று தனி குணம் இருக்கிறது அது எதுவுமே விஜய்க்கு இல்லை.

அன்பு அதிகரிக்கும்: விஜய்யை அப்பா அரசியலில் நிறுத்த வேண்டும் என்று பல ஆண்டுக்கு முன்பே முடிவு செய்துவிட்டார். இதனால், அப்பாவுக்கும் மகனுக்கும் பிரச்சனை ஏற்பட்டு நீதிமன்றம் வரை சென்றது பஞ்சாயத்து. ஆனால், இப்போது புஸ்ஸி ஆனந்தை தந்தை ஸ்தானத்தில் வைத்து அரசியலில் நுழைவதற்கான வேலைகளை செய்து வருகிறார். இந்த நேரத்தில் தனது தந்தையுடன் இணைந்தால் இன்னும் இளைஞர்களுக்கு அவர் மீது அன்பு அதிகரிக்கும்.

Producer K. Rajan interview about Vijay entering politics

அந்த குணம் விஜய்யிடம் இல்லை: விஜய் அரசியல் கட்சி ஆரம்பிப்பதில் எந்த தவறும் இல்லை, யாரும் கட்சி ஆரம்பிக்கக்கூடாது என்று சொல்லவில்லை. அரசியலுக்கு என்று சில குணம் உண்டு, கலைஞர், ஜெயலலிதா, எம்ஜிஆர் போன்றவர்களுக்கு எத்தனை ஏவுகணைகள் வந்தாலும் தாங்குவார்கள். அந்த குணம் இவரிடம் இல்லை அந்த குணத்தை அவர் தயாரிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

முதலில் விஜய் தெரிந்து கொள்ளவேண்டும்: தொடர்ந்து பேசிய கே ராஜன், 234 தொகுகளில் இருந்து மாணவர்களை தேர்ந்து எடுத்தது அரசியல், ஆனால், மாணவர்களை உற்சாகப்படுத்தியது நல்ல விஷயம். அதே போல, இரவு பாடசாலை தொடங்குவது நல்ல விஷயம், ஆனால், காமராஜர் பிறந்த நாளை தேர்வு செய்தது அரசியல். மேலும், அம்பேத்கர், பெரியார், காமராஜரை பற்றி படியுங்கள் என்று சொன்னதை வரவேற்கிறேன். ஆனால், முதலில் நீங்கள் இவர்களை பற்றி படித்து தெரிந்து கொள்ளுங்கள் என்று விஜய் அரசியலுக்கு வருவது குறித்து தயாரிப்பாளர் கே ராஜா பரபரப்பான பேட்டி அளித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X