மட்ட பாடலில் கட்சி கொடி கலர்.. கொள்கை பரப்பு செயலாளரா த்ரிஷா? கே ராஜன் விளாசல்!

சென்னை: ஏஜிஎஸ் தயாரிப்பில் தளபதி வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் 5ம் தேதி கோட் திரைப்படம் வெளியானது. படம் வெளியாகி 11 நாட்களான நிலையில் இதுவரை உலக அளவில் 380 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பேசிய தயாரிப்பாளர் கே ராஜன், கோட் படம் நஷ்டமும் இல்ல லாபமும் இல்லை என்றார்.

கோட் படம் நான்கு நாளில் நல்ல வசூல் அதற்கு காரணம், விஜய் கட்சியை தொடங்கியது, விஜய் சினிமாவை விட்டு விலகப்போகிறார் என்பதால், மக்கள் அதிக அளவில் தியேட்டருக்கு வந்து படத்தை பார்த்தனர். நாலு நாளில் 288 கோடியை வசூலித்தது. ஆனால், திங்கள் செவ்வாயில் அப்படியே குறைந்துவிட்டதால், கோட் படத்தை செலவு செய்து எடுத்த அளவிற்கு தயாரிப்பாளருக்கு லாபம் கிடைக்குமா என்றால், கிடைக்காது. அதே நேரம் பெரிய அளவில் நஷ்டம் இல்லை. ஐந்தாம் நாள், ஆறாம் நாள் நன்றாக ஓடி இருந்தால் மிகப்பெரிய வசூலை பெற்றபடமாக கோட் இருந்து இருக்கும்.

k rajan goat vijay

தயாரிப்பாளர் பேட்டி: அதேபோல கோட் படத்தில் அவருக்கு பேரு காந்தி என்று வைத்து இருக்கிறார். அந்த பெயரை வைத்துக்கொண்டு தண்ணி அடிப்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதை அவர் செய்து இருக்காமல் இருக்கலாம். அதே போல, படத்தில் சிகரெட் பிடிக்காதீர்கள் என்று சொன்னாலும், விஜய் அதை ஏற்றுக்கொள்ளவில்லை தொடர்ந்து செய்து கொண்டு தான் இருக்கிறார்.

கட்சி கொடி கலர்: அதே போல, கோட் படத்தில் வரும் மட்ட பாடலில் த்ரிஷாவிற்கு மஞ்சள் புடவை, சிவப்பு துண்டு என கொடியின் கலரை ஏற்கனவே த்ரிஷாவிற்கு கட்டிவிட்டுவிட்டார். த்ரிஷாவை கொள்கை பரப்பு செயலாளராக ஆக்குவார் போல, அதனால் தான் த்ரிஷா ஆக்டிவாக இருப்பதாக கேள்விபட்டேன். அது என்ன என்பது போகப் போகத்தான் தெரியும். ஆனால், விஜய்யின் கட்சிக் கொடி கலரை த்ரிஷா மூலமாகத்தான் முதலில் அறிமுகப்படுத்தினார், அதன் பிறகு தான் கொடியை அறிமுகப்படுத்தினார். ஆனால் படத்தில் கேப்டன் வரும் காட்சியை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருந்தது. அதற்கான கேப்டனின் ரசிகர்கள் எல்லாம் இவரின் ரசிகர்களாகிவிட மாட்டார்கள்.

பின்னடைவாக மாறிவிடும்: 200 கோடி சம்பளம் வாங்கும் விஜய், அதை விட்டுவிட்டு மக்களுக்காக அரசியலுக்கு வருகிறேன் என்று சொன்னது எல்லாம் ரொம்ப நல்ல விஷயம் தான். ஆனால், அவர் மக்களுக்காக என்ன செய்யப்போகிறார் என்று தெரியவில்லை. இன்னமும் ரசிகர்களுடனும், தொண்டர்களுடனும் இணையவில்லை. துபாயில் இருந்து பவுன்சர்களை கொண்டுவந்து நிற்க வைக்கிறார். இதனால் யாரும் அவரை நெருங்கமுடியாத நிலையில் உள்ளது. இதுவே அவருக்கு பெரிய பின்னடைவாக மாறிவிடும் என்று தயாரிப்பாளர் கே ராஜன் அந்த பேட்டியில் பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X