இயக்குநராகும் விஜய் மகன்..தமிழ் சினிமாவில் நெப்போடிசம்.. தயாரிப்பாளர் கே ராஜன் பேட்டி!

சென்னை: நடிகர் விஜய்யின் மகன் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாவது குறித்து தயாரிப்பாளர் கே ராஜன் பேட்டி அளித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத நடிகராக விஜய் திகழ்ந்து வருகிறார். கோடான கோடி நெஞ்சில் குடியிருக்கும் தளபதி விஜய்யின் அரசியல் வருகையை தமிழ் மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Producer K Rajan interview about vijay son jason sanjay

நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தைத் தொடங்கி, மக்களுக்கு பல தொண்டு நிறுவனத்தை செய்து வருகின்றனர்.

விஜய் மகன் ஜேசன் சஞ்சய்: நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், லைகா நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாக இருக்கிறார். இதை லைகா நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் நடிகர் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா தான் இந்த படத்திற்கு பிஆர்ஓவாக செயல்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தயாரிப்பாளர் கே ராஜன் பேட்டி: இந்நிலையில்,தயாரிப்பாளரான கே ராஜன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், விஜய் மகன் இயக்குநராக வருவது மகிழ்ச்சியான செய்தி தான். அவர் லண்டனில் சினிமா தொடர்பாக படித்து இருக்கிறார். 18 வயதில் இயக்குநராக உள்ளார். இது நல்ல விஷயம் தான் தப்பே இல்லை.

அப்பாவால் விஜய் நடிகரானார்: அரசியலில் தான் வாரிசு வந்தால் திட்டுறீங்க, சினிமாவில் வாரிசு வருவதில் எந்த தப்பும் இல்லை, கலையுலகத்திற்கு யார் வேண்டுமானாலும் வரட்டும். விஜய் தனது அப்பாவால் நடிகரானார். ஆரம்பத்தில் அவர் நடித்த இரண்டு படங்களும் தோல்வி அடைந்தன அப்போது, பீக்கில் இருந்த விஜயகாந்துடன் செந்தூரப்பாண்டி படத்தில் அவரின் தம்பியாக நடித்து விஜய் பிரபலமானார்.

நம்பர் ஒன் நடிகர்: அப்போதும் கூட அவருக்கு ஹீரோவாக வாய்ப்பு கிடைக்கவில்லை, பின் பல தயாரிப்பாளர்களிடம் சென்று பேசி தான், எஸ் ஏ சந்திர சேகர் தன் மகனை பெரிய நடிகராக்கினார். அந்த இயக்குநரின் வாரிசு தான் இப்போது தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகராக இருக்கிறார். இப்போது விஜய் தன் மகனை இயக்குநராக உள்ளார்.

Producer K Rajan interview about vijay son jason sanjay

வாழ்த்துகிறேன்: விஜய்யால் அவரது மகன் இயக்குநர் ஆனாலும், நல்ல கதைகளையும், நல்ல ஹீரோவையும் வைத்து படத்தை எடுக்க வேண்டும். மக்களுக்கு பிடித்தது போல ஆறு சுவை உணவை சமைத்து மக்களுக்கு விருந்து வைக்க வேண்டும் அப்போது தான் மக்கள் அவர்களை கொண்டாடுவார்கள். அதேபோல விஜய் மகன் வெற்றி பெற்று பெரிய ஆளாக வரவேண்டும் என்று வாழ்த்துகிறேன் என்றார்.

தமிழ் சினிமாவில் நெப்போடிசம்: இப்படி விஜய் மகனுக்கு வாழ்த்துக்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில், இணையத்தில் அவருக்கு எதிராக கருத்து பரவி வருகிறது. திறமை இருந்தும் எத்தனையோ இயக்குனர்கள் வாய்ப்பு கிடைக்காமல் சுற்றிக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால், முதல் படத்திலேயே லைக்கா நிறுவனத்தில் விஜய் மகனுக்கு எப்படி வாய்ப்பு கிடைத்தது. அவர் யாரிடம் துணை இயக்குனராக பணியாற்றினார் ? எத்தனை கம்பெனிக்கு ஏறி இறங்கினார்? தமிழ் சினிமாவிலும் நெப்போடிசம் தலைக்காட்டத் தொடங்கிவிட்டது என்று கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X