அஜித் அரசியலுக்கு கட்டுப்பட மாட்டார்.. அவரோட குறை.. என்ன தயாரிப்பாளர் கே ராஜன் இப்படி சொல்லிட்டாரு!

சென்னை: நடிகர் அஜித்தின் விடாமுயற்சி படம் இன்னும் சில தினங்களில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இந்த படத்தில் அஜித்துடன் திரிஷா, அர்ஜுன், ஆரவ் என அடுத்தடுத்த என முன்னணி நடிகர்கள் இணைந்துள்ள நிலையில் இந்த படத்தை மகிழ் திருமேனி இயக்கியுள்ளார். இந்தப்படம் அதிரடி ஆக்ஷன் படம் இல்லை என்றும் ஒரு சாமானிய மனிதன் தன்னுடைய உலகத்தை காப்பாற்றுவதற்கான போராட்டம் தான் படத்தின் கதைக்களம் என்றும் இயக்குநர் மகிழ் திருமேனி தன்னுடைய பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.

இந்தப் படத்தின் அடுத்தடுத்த பிமோஷன்களில் மகிழ் திருமேனி ஈடுபட்டுள்ளார். சமீபத்தில் நடிகர் அஜித்திற்கு பத்ம பூஷன் விருது அளிக்கப்பட்டுள்ளது. இதில் அரசியல் உள்ளதாக நடிகர் பார்த்திபன் உள்ளிட்ட பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பிரபல தயாரிப்பாளர் கே ராஜன் அஜித் குறித்த தன்னுடைய பகிர்வுகளை பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.

ajithkumar vidaamuyarchi movie k rajan

நடிகர் அஜித்குமார்: நடிகர் அஜித்குமார்: நடிகர் அஜித்குமாரின் விடாமுயற்சி படம் இன்னும் சில தினங்களில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இதற்கான ப்ரீ புக்கிங்குகள் துவங்கப்பட்டுள்ள நிலையில் பல இடங்களில் படத்தை புக் செய்வதற்கான ரசிகர்களின் ஆர்வம் மிகப்பெரிய அளவில் காணப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்களை படக்குழுவினர் முடுக்கி விட்டுள்ளனர். படத்தின் ரிலீசுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் தற்போது இந்த படத்தின் புதிய போஸ்டரை லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதனிடையே அடுத்தடுத்த பிரமோஷன்களில் தொடர்ந்து படத்தின் இயக்குநர் மகிழ் திருமேனி ஈடுபட்டு வருகிறார்.

மகிழ் திருமேனி இன்டர்வியூ: படம் குறித்தும் தன்னடைய முந்தைய பிராஜெக்ட்கள் மற்றும் அடுத்ததாக தான் யோசித்து வைத்துள்ள ஸ்கிரிப்டுகள் உள்ளிட்ட பல விஷயங்களை அவர் தன்னுடைய பேட்டிகளில் பகிர்ந்து வருகிறார். விடாமுயற்சி படத்தில் அஜித்துடன் தான் இணைந்து செயல்பட்ட விதம் குறித்தும் அஜித்தின் குணம் குறித்தும், பல விஷயங்களை உற்சாகத்துடன் பகிர்ந்துள்ளார் மகிழ் திருமேனி. அந்த வகையில் விடாமுயற்சி படம் சாமானிய மனிதனின் கதை என்றும் அதிரடி ஆக்சன் போன்ற விஷயங்கள் இந்த படத்தில் இல்லாமல் இயல்பான கதைக்களத்தில் படம் அமைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அஜித் அரசியலுக்கு கட்டுப்பட மாட்டார்: நடுத்தர வயதில் உள்ள ஒரு மனிதன் தன்னுடைய உலகத்தை காப்பாற்றுவதற்காக நடத்தும் போராட்டம் தான் விடாமுயற்சி படத்தின் கதை என்றும் அவர் கூறியுள்ளார். இந்நிலையில் அஜித் குறித்து பிரபல தயாரிப்பாளர் கே ராஜனும் தன்னுடைய பகிர்வுகளை பேட்டியொன்றில் கூறியுள்ளார். அஜித்திற்கு பத்ம பூஷன் விருது கிடைத்தது குறித்து வரவேற்பு தெரிவித்துள்ள ராஜன், அரசியல் காரணங்களுக்காக இந்த விருது கொடுக்கப்பட்டதா என்று தனக்கு தெரியாது என்றும் ஆனால் அஜித் அதற்கெல்லாம் கட்டுப்பட மாட்டார் என்றும் கூறியுள்ளார். விருது கொடுக்கப்பட்டதற்கு நன்றி தெரிவித்தது அவரது பண்பாடு என்றும் கே ராஜன் குறிப்பிட்டுள்ளார்.

அஜித்தின் ஒரே குறை: ஆனால் அதற்காக அவர் ஒரு கட்சிக்கு சப்போர்ட் செய்வார் என்று சொல்வதை நிச்சயம் நம்ப வேண்டாம் என்றும் கே ராஜன் தெரிவித்துள்ளார். மேலும் அஜித் ரசிகர்களை சந்தித்தாலே அவரது புகழ் நிலைத்து நிற்கும் என்று கூறியுள்ள ராஜன், அஜித் ரசிகர்களை சந்திக்க மாட்டார், அது ஒன்றுதான் அவரிடம் குறை என்றும் இதை செய்தாலே அவரது படங்கள் நன்றாக ஓடும் என்றும் தெரிவித்துள்ளார். இதை தவிர்த்து மற்றபடி அஜித் மிகச்சிறந்த மனிதர் என்றும் பாராட்டு தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X