twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அஜித், விஜய்க்கு இது ஒரு பாடம்...ஹீரோக்கள் தான் டைரக்டரை தேர்வு செய்கிறார்கள்...கே.ராஜன் ஆவேசம்

    |

    சென்னை : அஜித்துக்கு ஒரு விவேகம், விஜய்க்கு ஒரு பீஸ்ட், இங்கு ஹீரோக்கள் தான் டைரக்டரை தேர்வு செய்கிறார்கள். இது மாறணும் என தயாரிப்பாளர் கே.ராஜன் டாப் ஹீரோக்கள் மற்றும் அவர்களின் படங்கள் பற்றி பேசி உள்ள வீடியோ செம டிரெண்டாகி வருகிறது.

    விஜய்யின் பீஸ்ட் படம் ரசிகர்கள், விமர்சகர்கள் உள்ளிட்டோர் பல்வேறு கருத்துக்களை கூறி வரும் நிலையில் பீஸ்ட் படம் பற்றியும், பெரிய நடிகர்களின் படங்கள் தோல்வி அடைவது பற்றியும் ஆவேசமாக பேசி பேட்டி அளித்துள்ளார் தயாரிப்பாளர் கே.ராஜன். பீஸ்ட் படம் தோல்வி அடைந்ததற்கு யார் காரணம் என்பதை இவர் வெளிப்படையாக பேசி உள்ளார்.

    4 நாட்களில் ரூ.550 கோடி வசூல்... மிரட்டலான வசூலில் கேஜிஎப் 2 படம் 4 நாட்களில் ரூ.550 கோடி வசூல்... மிரட்டலான வசூலில் கேஜிஎப் 2 படம்

    ஹீரோக்களின் டாமினேஷன்

    ஹீரோக்களின் டாமினேஷன்

    கே.ராஜன் தனது பேட்டியில், பெரிய ஹீரோக்களின் படங்கள் பாழா போவதற்கு காரணம், ஹீரோக்களின் டாமினேஷன் தான். ஹீரோக்கள் தான் டைரக்டரை தேர்வு செய்கிறார்கள். தயாரிப்பாளர், டைரக்டரை முடிவு செய்வதில்லை. தயாரிப்பாளர் கதையை முடிவு செய்து, டைரக்டரை முடிவு செய்து, திரைக்கதையை உருவாக்கி, இந்த கதைக்கு யார் சரியாக இருப்பார்கள் என சொல்பவரல்ல தற்போதைய ஹீரோ. ஹீரோக்கள் சொல்வதை தான் தயாரிப்பாளர்கள் கேட்க வேண்டி உள்ளது.

    விஜய்யின் தேர்வு தான் நெல்சன்

    விஜய்யின் தேர்வு தான் நெல்சன்

    இந்த ஹீரோவுக்கு என்ன கதை என்பது தான் தற்போதைய நிலைமை. விஜய் முன்னாலேயே கேட்டு வச்சு தான் பீஸ்ட் படத்திற்கும் சொல்லி இருக்கிறார். விஜய் அடையாளம் காட்டி வந்தவர் தான் நெல்சன். அறிவுபூர்வமாகவும், டெக்னிக்கல் ரீதியாக தெரிந்த நிறைய டைரக்டர்கள் வருகிறார்கள். நெல்சனையே எடுத்துக் கொண்டால் கோலமாவு கோகிலா படம் பிரமாதம்.டாக்டர் படத்திலாவது ஒரு ஹீரோ இருந்தார். கோலமாவு கோகிலா படத்தில் யார் ஹீரோ. பெரிய ஹீரோ யாரும் இல்லை. ஹீரோயின் நயன்தாரா தான் இருந்தார். ஆனால் கதை இருந்தது. மிக அழகாக காமெடியாக செய்திருந்தார்.

    துப்பாக்கி விளையாடினால் உருப்படாது

    துப்பாக்கி விளையாடினால் உருப்படாது

    அஜித்திற்கு ஒரு விவேகம், விஜய்க்கு ஒரு பீஸ்ட். துப்பாக்கி தான் விளையாடி. நடிப்பை காட்டவேயில்லை. பீஸ்ட் படத்தில் கவச உடை அணிந்திருந்தவர்கள் எல்லாம் சாகிறார்கள். ஆனால் சாதாரண சட்டை அணிந்த இவர் மட்டும் நூறு குண்டுகளிடம் இருந்து தப்பிக்கிறார். படம் தோல்வி அடைவதற்கு யார் காரணம். விஜய்யா காரணம். டைரக்டர், அந்த கதையை விஜய்யை மனதில் பண்ணினது தான் இதற்கு காரணம். ஒரு படம் வெற்றி பெறுவதற்கும், தோல்வி அடைவதற்கும் டைரக்டர் தான் காரணம்.

    நடிகர்கள் சம்பளத்தை குறைக்கனும்

    நடிகர்கள் சம்பளத்தை குறைக்கனும்

    பீஸ்ட் படத்தை100 சதவீதம் எதிர்பார்த்து போனேன். ஆனால் 60 சதவீதம் தான் இருந்தது என ரசிகர் ஒருவரே சொல்கிறார். ஆனால் மக்களுக்கு 40 சதவீதம் தான். ஹீரோ ஒரு ஆள் தான் வீரரா. மக்களை எப்படி ஏமாத்துறாங்க. ஹீரோவை பூஸ்ட் பண்ணுவதற்காக பொய் எல்லாம் காட்டாதீர்கள். ஹீரோக்களின் சம்பளம் குறைய வேண்டும். ஹீரோக்களுக்கு 30 சதவீதத்திற்குள் தான் சம்பளம் இருக்க வேண்டும். ஒரு படம் நஷ்டமடைந்தால் அவர்களுக்கு இன்னொரு படம் இப்போதெல்லாம் யாரும் கொடுப்பதில்லை. பழைய ஹீரோக்களிடம் இருந்த மனிதாபிமானம் இப்போது ஒருவரிடம் கூட இல்லை.

    கேஜிஎஃப் 2 தரமான படம்

    கேஜிஎஃப் 2 தரமான படம்

    ஒரு தமிழனாக தமிழ் சினிமா, பீஸ்ட் படம் வெற்றி பெற வேண்டும் என நினைத்து அதற்கு ஆதரவாக கருத்துக்கள் கூறினேன். பீஸ்ட் ரிலீசிற்கு முன்பே விவேகம் படத்தை உதாரணம் காட்டி, துப்பாக்கி விளையாடினாலே அந்த படம் உருப்படாது. அதை தமிழ் மக்கள் விரும்புவதில்லை என சொன்னேன். ஆனால் கேஜிஎஃப் 2 கன்னட படம் தான் டப்பிங் படம் தான். ஆனால் தரமான படம். அனைவரையும் கவர்ந்திருக்கிறது. நல்ல படங்களை ஒப்புக் கொள்ள வேண்டும். அது எந்த மொழி படம் என்பது முக்கியமில்லை.

    இளையராஜாவுக்கு இன்கம்டேக்ஸ் பிரச்சனையா

    இளையராஜாவுக்கு இன்கம்டேக்ஸ் பிரச்சனையா

    இளையராஜா, பிரதமர் மோடியையும் அம்பேத்காரையும் ஒப்பிட்டு பேசி உள்ளதற்கு இன்கம்டேக்ஸ் பிரச்சனை ஏதாவது வந்திருக்கோ என்னவோ தெரியல. எப்படி அம்பேத்காரை மோடியுடன் ஒப்பிட முடியும். அவர் பேசியது மிகப் பெரிய தவறு. இப்போது ஏதாவது இன்கம்டேக்ஸ் பிரச்சனை இருக்கா அல்லது இனி ஏதும் வரக் கூடாது என சொன்னாரா தெரியவில்லை. நான் மோடியை குறை சொல்லவில்லை. இப்போது மோடியையும், அம்பேத்காரையும் ஒப்பிட்டு தற்போது பேச வேண்டிய அவசியம் என்ன. இது வரை. இவ்வளவு பெரிய கெட்ட பேரு இப்போது தேவையா. இசைக்கு காப்பி ரைட்ஸ் பிரச்சனை எழுப்பியது சரியல்ல பேசினாரா என்றார்.

    English summary
    In his recent interview Producer K.Rajan spoke about Beast movie. He openly talked about the reason of Beast movie failure. He urged to reduce actors salary. Meanwhile K.Rajan praised KGF chapter 2 movie and said it was a quality movie.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X