தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்தை எச்சரித்த பிரபல தயாரிப்பாளர்.. பலருடன் தொடர்பு என பகீர் பேச்சு!

சென்னை: தனுஷ் ஒரு மனுஷனா?.. ஐஸ்வர்யா ஒரு பொம்பளையா? என தயாரிப்பாளர் கே. ராஜன் பேசியிருப்பது சர்ச்சையை கிளப்பி உள்ளது. ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவை நடிகர் தனுஷ் காதலித்து திருமணம் செய்துக் கொண்டு இரு ஆண் குழந்தைகளை பெற்றுள்ளார்.

பல வருடங்கள் இருவரும் இணைந்து வாழ்ந்து வந்த நிலையில், திடீரென கடந்த 2022ம் ஆண்டு இருவரும் பிரிவதாக அறிவித்தனர். இருவரும் இணைந்து வாழ வேண்டும் என பிரபலங்கள் பலரும் கோரிக்கை வைத்த நிலையில், தற்போது இருவரும் விவாகரத்து வேண்டி நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.

Producer K Rajan says Dhanush and Aishwarya Rajinikanth s divorce sets the wrong example

இருவரும் இனிமேல் சேர்ந்து வாழ முடியாது என்கிற முடிவை எடுத்து நிரந்தரமாக பிரிய முடிவு செய்தது மிகப்பெரிய தவறு என தயாரிப்பாளர் கே. ராஜன் பல குற்றச்சாட்டுகளை அடுக்கி பேசியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர்கள் தெய்வம் கிடையாது: ரஜினிகாந்த், அஜித் குமார் உள்ளிட்ட முன்னணி நடிகர்களே சினிமாவை எல்லாம் பிறகு பார்த்துக் கொள்ளலாம். முதலில் உங்கள் குடும்பத்தை பாருங்க என வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் இருவரும் இப்போதும் தங்கள் குடும்பத்தை நல்லபடியாக பார்த்து வருகின்றனர். நடிகர்கள் நடித்த படங்கள் பிடித்திருந்தால் ஒரு நாள் போய் பாருங்கள். அவர்கள் மீது பைத்தியமாக வேண்டாம். உங்கள் குடும்பத்தை முதலில் பாருங்கள் என தனது பேச்சை ஆரம்பித்த கே. ராஜன் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் விவாகரத்து விஷயத்தை கையில் எடுத்து பேசியுள்ளார்.

பல பெண்களோடு வாழ்க்கை எதுக்கு?: நடிகர் தனுஷ் ஒளிவு மறைவின்றி நேரடியாகவே கேட்கிறேன். பல பெண்களோடு அப்படி என்ன வாழ்க்கை வாழ வேண்டும் உனக்கு என கே. ராஜன் நடிகர் தனுஷ் மீது பகிரங்க குற்றச்சாட்டை முன் வைத்து பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கே. ராஜன் இப்படி பரபரப்பை கிளப்பி உள்ளார்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கு எச்சரிக்கை: தனுஷ் ஒரு மனுஷனா?.. ஐஸ்வர்யா ஒரு பொம்பளையா? என பலர் பேசும் அளவுக்கு வாழலாமா? உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு நீங்கள் இருவரும் விவாகரத்து முடிவை விடுத்து ஒன்றாக இணைந்து வாழுங்கள். தனுஷை பல ரசிகர்கள் பின் தொடர்கின்றனர். அவர் இப்படியெல்லாம் செய்வது நல்லதா? என கேட்டு விளாசி உள்ளார்.

கொந்தளித்த ரசிகர்கள்: கே. ராஜன் தனுஷ் மீது அபாண்டமான குற்றச்சாட்டுகளை ஆதாரமில்லாமல் எப்படி எழுப்பி பேசலாம் என தனுஷ் ரசிகர்கள் கே. ராஜனின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். அடுத்தவர் குடும்ப வாழ்க்கையில் தேவையில்லாமல் மூக்கை நுழைக்கக் கூடாது என ராஜனுக்கு ரசிகர்கள் டோஸ் விட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X