இப்டி படம் எடுத்ததுக்கு 'வேற' தொழில் செய்யலாம்.. 90 எம்எல் இயக்குநரை அசிங்கமாக திட்டிய தயாரிப்பாளர்

தயாரிப்பாளர் கே.ராஜன், 90 எம் எல் பட இயக்குநரை காட்டமாக திட்டியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை: தமிழ் சமூகத்தின் கலாச்சாரத்தை சீரழிப்பது போன்று படம் எடுத்த இயக்குநர், இப்படி ஒரு மட்டமான படம் எடுப்பதற்குப் பதில், தனது பிழைப்பிற்கு வேறு ஏதாவது தொழில் பண்ணி சம்பாதிக்கலாம் என 90 எம் எல் பட இயக்குநரை கடுமையாக விமர்சித்துள்ளார் பிரபல தயாரிப்பாளர் கே.ராஜன்.

ஸ்ரீபெருமாள் சாமி பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பாக தயாரிப்பாளர் சி.பெருமாள் தயாரித்துள்ள படம் 'ஒற்றாடல். விகாஷ், முத்துராமன் என இரண்டு நாயகர்கள் நடித்துள்ள இப்படத்தில் டெல்லி ஷா என்பவர் நாயகியாக நடித்துள்ளார். நடிகர் 'நிழல்கள்' ரவி முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

கே.எஸ்.மணிகண்டன் இயக்கும் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.

நம்பிக்கை:

நம்பிக்கை:

அதில் கலந்து கொண்டு பேசிய பிரபல தயாரிப்பாளர் கே.ராஜன், "இந்தப் படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல் காட்சிகளைப் பார்த்தேன். படத்தை சிறப்பாக உருவாக்கியிருக்கிறார்கள் எனத் தெரிகிறது. நிச்சயம் இப்படம் வெற்றியடையும் என நம்புகிறேன்.

எல்.கே.ஜி. படம்:

எல்.கே.ஜி. படம்:

சமீப காலமாக நல்ல படங்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. நல்லபடியாக ஓடுகின்றன. ‘எல்.கே.ஜி.' படம்கூட தற்போது வரை நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது. அந்தப் படத்தை இயக்கிய இயக்குநர் கே.ஆர்.பிரபு என்னுடைய மகன்தான்.

வைராக்கியம்:

வைராக்கியம்:

கடந்த 10 வருடமாக வீட்டுக்கே வராமல், என்னுடன் பேசாமல் இருக்கிறான். திரையுலகத்தில் ஜெயித்த பின்னாடிதான் வீட்டுக்கு வருவேன்னு வைராக்கியமாக இருக்கிறான். என்னுடைய பணம் வேண்டாம் என உறுதியாக இருந்து இன்று ஜெயித்துள்ளான்.

காட்டமான விமர்சனம்:

காட்டமான விமர்சனம்:

இப்போது ஒரு படம் புதுசாக வந்திருக்கிறது, ‘90 எம்.எல்' என. அதென்ன ‘90' என்று தெரியவில்லை. படம் அத்தனை கர்மமா இருக்கு. தமிழ்ச் சமூகத்தை.. நம்முடைய பழக்க வழக்கத்தை, பண்பாட்டை, கலாச்சாரத்தை சீரழிப்பது போன்று இப்படம் இருக்கிறது. இப்படி படம் எடுத்து சம்பாதிப்பதற்கு பதில், அந்த இயக்குநர் வேறு தொழில் பண்ணிப் பிழைக்கலாம்" என இவ்வாறு காட்டமாக அவர் பேசினார்.

ஓவியா படம்:

ஓவியா படம்:

ஓவியா நடித்துள்ள 90 எம் எல் படத்தை அனிதா உதீப் என்ற பெண் இயக்குநர் இயக்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் காட்சிகள் அதிக ஆபாசமாக இருப்பதாக கடுமையான விமர்சனங்கள் உள்ள நிலையில், பிரபல தயாரிப்பாளர் கே.ராஜன், பொது நிகழ்ச்சியில் இப்படி வெளிப்படையாக அசிங்கமாக திட்டியிருப்பது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X