டிக்கெட் விலையை குறைக்காத விஜய்.. அரசியலுக்கு வந்து என்ன பண்ண போறாரு.. கே. ராஜன் விளாசல்!

சென்னை: நடிகர் விஜய் தளபதி 68 படத்தை முடித்து விட்டு முழு நேர அரசியல்வாதியாக மாறப் போவதாக கடந்த சில நாட்களாக ஹெவியான பேச்சு அடிபட்டு வருகிறது. சமூக வலைதளங்களை தாண்டி சினிமாவில் இருக்கும் பிரபலங்களே இதுபற்றி வெளிப்படையாக பேச ஆரம்பித்துள்ளனர்.

இந்நிலையில், 'கடத்தல்' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய தயாரிப்பாளர் கே. ராஜன் நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்து சீண்டியுள்ளார்.

இயக்குநர் பேரரசு பேசும் போது மாரி செல்வராஜ் இயக்கிய மாமன்னன் படம் பற்றியும் அந்த விழாவில் பேசிய வீடியோக்கள் தீயாக பரவி வருகின்றன.

 Producer K Rajan slams Actor Vijay for ticket price hiking and his political entry

அரசியலுக்கு வருகிறாரா விஜய்: நடிகர் விஜய் தளபதி 68 படத்தை முடித்து விட்டு 3 ஆண்டுகள் சினிமாவுக்கு பிரேக் விட்டு விட்டு அரசியலில் ஒரு கை பார்த்து விடலாம் என்கிற மனநிலையுடன் களம் காண போவதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.

நடிகர் விஜய்யின் அரசியல் வருகை அரசியல் வட்டாரத்திலும் சினிமா வட்டாரத்திலும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. ஆனால், இதுதொடர்பாக இன்னமும் நடிகர் விஜய் அறிவிக்காத நிலையிலும், நெருங்கிய வட்டாரங்கள் கண்டிப்பாக அவர் அரசியலுக்கு வருவார் எனக் கூறி வருகின்றனர்.

டிக்கெட் விலை எகிறப்போகுது: நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது குறித்த பரபரப்பான தகவல்கள் ஒரு பக்கம் ஓடிக் கொண்டிருக்க தியேட்டர்களில் சினிமா படங்களின் டிக்கெட் விலையை அதிரடியாக உயர்த்த தியேட்டர் அதிபர்கள் முதலமைச்சருக்கு கோரிக்கை வைத்துள்ளது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

ஏற்கனவே டிக்கெட் கட்டணம் 120 ரூபாயில் இருந்து 200 ரூபாய்க்கு மேல் உள்ள நிலையில், பாப்கார்ன் விலை முதல் பார்க்கிங் கட்டணம் வரை ஒரு நபர் தியேட்டருக்கு சென்று படத்தை பார்த்து விட்டு வர 500 முதல் 700 ரூபாய் ஆகிறது என்றும் ஒரு குடும்பம் படத்துக்கு சென்று வந்தால் 2000 ரூபாய் ஆகிவிடுகிறது என புலம்பி வரும் நிலையில், 400 ரூபாய்க்கு மேல் டிக்கெட் விலையை அதிகரித்தால் தியேட்டருக்கே ரசிகர்கள் வரமாட்டார்கள் என்கின்றனர்.

விஜயை சீண்டிய கே. ராஜன்: இந்நிலையில், சமீபத்தில் காத்தவராயன், காந்தர்வன் படங்களை இயக்கிய இயக்குநர் சலங்கை துரை இயக்கத்தில் உருவாகி உள்ள 'கடத்தல்' படத்தின் பிரஸ்மீட் நடைபெற்றது.

அதில், கலந்து கொண்டு பேசிய தயாரிப்பாளர் கே. ராஜன் நடிகர் விஜய் அரசியலுக்கு வரப் போவதாக சொல்கின்றனர். ஆனால், அவர் படத்தின் டிக்கெட் விலையே 1000 ரூபாய்க்கு முதல் நாளன்று விற்கப்படுகிறது. மேலும், சினிமா டிக்கெட்டுகளின் விலை கடுமையாக உயரப்போவதையாவது அவர் தடுப்பாரா? இளம் வயசு தானே ஆகுது விஜய்க்கு இன்னும் கொஞ்சம் காலம் நடிக்கலாமே? அவர் அரசியலுக்கு வந்தால் ஏற்பதும் ஏற்காததும் மக்கள் கையில் தான் உள்ளது என நடிகர் விஜய்யை தயாரிப்பாளர் கே. ராஜன் சீண்டிப் பேசியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X