தயாரிப்பாளர்கள் எல்லாம் நடுத்தெருவில் நிக்கிறாங்க.. ஹன்சிகாவுக்கு பில்டப் எதுக்கு? கே.ராஜன் கேள்வி!
சென்னை: கோலிவுட் உலகில் தற்போது தயாரிப்பாளர்களுக்கும் நடிகர்களுக்குமான பிரச்னை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. ஒரு கட்டம் வரை பொறுமையாக இருந்த தயாரிப்பாளர்கள் சங்கம், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் தீர்மானங்கள் நிறைவேற்றி வெளியிட்டிருந்தனர். இதனை சற்றும் எதிர்பார்க்காத நடிகர் சங்கம் இந்த பிரச்னையை தீர்ப்பது தொடர்பாக முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றது. இந்நிலையில் தயாரிப்பாளார் கே. ராஜன், நடிகை ஹன்சிகா மோத்வானி குறித்து பேசியது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
முன்னதாக, தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் வெளியிடப்பட்ட தீர்மானத்தில், " தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைமையில் தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்க நிர்வாகிகள், தமிழ்நாடு திரையரங்க மல்டிபிளக்ஸ் உரிமையாளர் சங்க நிர்வாகிகள், தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க நிர்வாகிகள், கலந்து கொண்ட கூட்டு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகி 8 வாரங்களுக்கு பிறகு OTT தளங்களில் வெளியிட வேண்டும் என்று கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்றைய காலகட்டத்தில் ஒரு சில நடிகர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் ஏற்கனவே அட்வான்ஸ் பெற்ற தயாரிப்பு நிறுவனத்தின் திரைப்படங்களுக்கு பணி புரியாமல் புதிதாக வரும் திரைப்பட நிறுவனங்களுக்கு சென்று விடுகிறார்கள். இதனால் ஏற்கனவே அட்வான்ஸ் கொடுத்துள்ள தயாரிப்பாளர்கள் பெரும் பொருளாதார இழப்பை சந்திக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

தனுஷ்: ஆகையால், இனிவரும் காலங்களில் எந்த ஒரு நடிகர், நடிகை மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தயாரிப்பாளர்களிடம் அட்வான்ஸ் பெற்று இருந்தால் அந்த திரைப்படத்தை முடித்துக் கொடுத்துவிட்டு, அடுத்த திரைப்படங்களின் பணிகளுக்கு செல்ல வேண்டும் என்று கூட்டத்தில் பேசி முடிக்கப்பட்டது. நடிகர் தனுஷ் அவர்கள் பல தயாரிப்பாளர்களிடம் முன்பணம் பெற்றிருக்கும் சூழ்நிலையில் இனிவரும் காலங்களில் தயாரிப்பாளர்கள், நடிகர் தனுஷ் நடிக்கும் புதிய திரைப்படங்களின் பணிகளை துவங்குவதற்கு முன்பாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தை கலந்தாலோசிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் முன் வைக்கப்பட்டது.

தீவிரவாதிகளா?: இந்நிலையில் தனியார் யூட்டூப் சேனலுக்கு பேட்டி கொடுத்த தயாரிப்பாளர் ராஜன், நடிகை ஹன்சிகா மோத்வானி குறித்து பேசியுள்ளார். அதில், மும்பையில் உள்ள ஹன்சிகா மோத்வானி, மும்பையில் உள்ள வீட்டில் இருந்து ஏர்போர்ட்டிற்கு வருவதற்கு பவுன்சர்ஸ் வேணுமாம். ஏர்போர்ட்டில் இருந்து சூட்டிங் ஸ்பாட்டிற்கு வருவதற்கு பவுன்சர்ஸ் வேண்டுமாம். இது இல்லாமல் படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு ஹன்சிகாவுடன் ஏழு உதவியாளர்கள் வேணுமாம். அவங்களுக்கு எதற்காக இத்தனை பவுன்சர்கள்? நடிகர் நடிகைகள் என்ன பெரிய தீவிரவாதியா? இதில் அந்த பவுண்சர்களுக்கு தயாரிப்பாளர்கள்தான் சம்பளம் கொடுக்க வேண்டுமாம். என்ன இதெல்லாம்? இது போன்ற விஷயங்களை நடிகர் சங்கமே தட்டிக்கேட்கவேண்டும்.

நடிகர் சங்கம்: தான் அழைத்து வரும் பவுன்சர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு வாங்குகிற சம்பளத்தில் இருந்து நடிகர், நடிகைகளே கொடுக்க வேண்டும். பவுன்சர்ஸ் , உதவியாளர்கள் என தன்னுடன் அழைத்து வருகிறவர்களுக்கெல்லாம் தயாரிப்பாளர்கள்தான் சம்பளம் கொடுக்க வேண்டுமென்றால் தயாரிப்பாளர்களின் நிலைமை என்ன ஆவது? முதலில் நடிகர் சங்கம் இது போன்ற விஷயங்களைத் தட்டிக் கேட்க வேண்டும்.


Click it and Unblock the Notifications











