த்ரிஷா ரொம்பவே திமிர் பிடித்தவர்.. நடிக்க கத்துக்கல.. சம்பளம் மட்டும் ஏறுது.. விளாசிய தயாரிப்பாளர்!
சென்னை: நடிகை த்ரிஷா ரொம்பவே திமிர் பிடித்தவர் என பிரபல தயாரிப்பாளர் விமர்சித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை த்ரிஷா. 1999ஆம் ஆண்டு மிஸ் சென்னையாக தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து சினிமாவில் நடிக்க தொடங்கினார் த்ரிஷா.
ஜோடி படத்தில் சிறு கேரக்டரில் நடித்தார் த்ரிஷா. அதன் பிறகு ரஜினிக்காந்த், கமல் ஹாசன், அஜித், விஜய், தனுஷ். விஜய் சேதுபதி என முன்னணி நடிகர்கள் பலருடனும் ஜோடியாக நடித்துள்ளார்.

சொதப்பிய பரமபத விளையாட்டு
கடைசியாக கடந்த ஆண்டு த்ரிஷா நடிப்பில் பரமபத விளையாட்டு என்ற படம் ரிலீஸ் ஆனது. இந்தப் படம் ஓடிடி தளத்தில் வெளியானது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது இந்த படம். ஆனால் அந்தப் படம் பெரிதாக கை கொடுக்கவில்லை. நெகட்டிவான விமர்சனங்களே கிடைத்தன.

கார்த்திக் டயல் செய்த எண்
அதன் பிறகு கவுதம் மேனன் இயக்கத்தில் கார்த்திக் டயல் செய்த எண் என்ற குறும் படத்தில் நடித்தார். விண்ணைத்தாண்டி வருவாயா 2 படத்தின் முன்னோட்டமாக இந்த குறும்படம் தயாரிக்கப்பட்டது. இந்தக் குறும்படம் திருமணத்திற்கு மீறிய உறவுகளையும் கள்ளக்காதலையும் ஆதரிக்கிறதா என ரசிகர்கள் கழுவி ஊற்றினர். இருந்தப் போதும் சிம்பு மற்றும் த்ரிஷாவின் ரசிகர்கள் இந்த குறும்படத்தை கொண்டாடினர்.

பொன்னியின் செல்வன் - முக்கிய கதாப்பாத்திரம்
நடிகை த்ரிஷா தற்போது பொன்னியின் செல்வன் பார்ட் 1, பொன்னியின் செல்வன் பார்ட் 2, கர்ஜனை, ராங்கி,சதுரங்க வேட்டை 2, ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதேபோல் ராம் என்ற மலையாள படத்திலும் நடித்து வருகிறார் நடிகை த்ரிஷா. பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் த்ரிஷா.

த்ரிஷ பட விளம்பரங்களுக்கு வருவதில்லை
இந்நிலையில் நடிகை த்ரிஷாவை பிரபல தயாரிப்பாளரான கே ராஜன் கடுமையாக விமர்சித்துள்ளார். தயாரிப்பாளரும் நடிகருமான கே.ராஜன் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் நடிகை த்ரிஷா தான் நடித்த திரைப்பட விளம்பரங்களுக்கு வருகை தருவதில்லை, இதனால் தயாரிப்பாளர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள் என விளாசினார்.
Recommended Video

த்ரிஷா மிகவும் திமிர் பிடித்தவர்
மேலும் நடிகை த்ரிஷா மிகவும் திமிர் பிடித்தவர். இத்தனை வருஷம் ஆகியும் த்ரிஷா தனது நடிப்புத் திறனை எந்த வகையிலும் வளர்த்துக்கொள்ளவில்லை. அனால் அவரின் சம்பளம் மட்டும் ஏறிக்கொண்டே இருக்கிறது. அவர் நடித்த திரைப்படங்களின் விளம்பரத்துக்கு வருமாறு தயாரிப்பாளர் சங்கம் வாயிலாக அழைப்பு விடுத்தால், திரிஷாவின் தாயார் எங்களை மிரட்டுகிறார் என்கிறார்.

அடாவடியாக பதில் சொல்கிறார்
எங்களால் உங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க முடியாது என்று அடாவடியாக பதில் சொல்கிறார் த்ரிஷாவின் தாயார். சில நேரங்களில் நடிகை திரிஷா ஒப்புக் கொண்டாலும் அவரின் குடும்பத்தார் தயாரிப்பாளர்களுக்கு ஒத்துழைப்புத் தர மறுக்கிறார்கள்.. இவ்வாறு தயாரிப்பாளர் கே ராஜன் தெரிவித்துள்ளார். இது நடிகை திரிஷா ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











