தனுஷூக்கும் சுசித்ராவிற்கும் நல்ல பழக்கம்.. அவர் அந்த விஷயத்தில் வீக்? வெளுத்துவிட்ட தயாரிப்பாளர்!
சென்னை: பிரபல பாடகி சுசித்ரா, தனது முன்னாள் கணவர் கார்த்திக் குமார் மற்றும் நடிகர் தனுஷ் குறித்து அவதூறாக பல கருத்துக்களை தொடர்ச்சியாக வெளியிட்டு வந்தார். சினிமா வட்டாரத்தில் பெரும் புயலை கிளப்பிய இந்த விவகாரம் குறித்து தயாரிப்பாளர் கே ராஜன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், தனுஷ் குறித்து பல செய்திகள் கிசுகிசுக்கப்படும் நிலையில், சுசித்ராவும் இப்படி சொல்வதால், தனுஷ் அந்த விஷயத்தில் வீக்கானவராக இருப்பார் என்று தோன்றுகிறது என்றார்.
மேலும், ஐஸ்வர்யா ஒரு கெட்ட அம்மா, அவரோடு தனுசை ஒப்பிடும் போது அவர் சிறந்த அப்பா. ஒரு அம்மாவாக தன்னை மட்டுமே பிரோமோஷன் செய்தார் ஐஸ்வர்யா. அந்த தம்பதியினர் ஒருவரையொருவர் ஏமாற்றியிருக்கிறார்கள். இருவரும் டேட்டிங் செய்யும் நபர்களோடு வெளிப்படையாக ஹோட்டலுக்கு செல்வது போன்ற செயல்களில் ஈடுபட்டார்கள் என்றார். இதுமட்டுமில்லாமல் விஜய், அஜித், கமல், ஷாருக்கான் என அனைவர் குறித்தும் பேசி இருந்தார்.

தனுஷூடன் நெருக்கம்: இதுகுறித்து தயாரிப்பாளர் கே ராஜன் அளித்துள்ள பேட்டியில், பாடகி சுசித்ராவை இந்த பேட்டிக்கு முன் யாருக்காவது தெரியுமா? ஆனால், இன்னைக்கு அனைவருக்கும் சுசித்ரா என்றால் யார் என்று தெரிகிறது. இந்த பெயர் வரவேண்டும், எப்படியாவது பிரபலமாக வேண்டும் என்பதற்காக கொடுத்த இன்டர்வியூ தான் அது. அந்த பேட்டியில் பல நடிகர் நடிகைகளை பற்றி பேசி இருக்கிறார். அவங்களை பற்றி எல்லாம் தெரிகிறது என்றால், அவர்கள் அனைவருடனும் சுசித்ரா பழகி இருக்கிறார். அதனால் தான் அவர்கள் பற்றி நன்றாக தெரிகிறது. அதிலும் குறிப்பாக தனுஷூடன் ஸ்பெஷலாக பழகி இருக்கிறார். தனுஷ் அனைவருடனும் நன்றாக பழகக்கூடியவர், அவரின் வாழ்க்கை விரிசலுக்கே அதுதான் காரணம் என்று ஆங்காங்கே கிசுகிசுக்கப்படும் நிலையில், சுசித்ராவும் இப்படி சொல்வதால், தனுஷ் அந்த விஷயத்தில் வீக்கானவராக இருப்பார் என்று தோன்றுகிறது.
சினிமாவில் பார்ட்டி இருக்கும்: கமல்ஹாசன் போதை விருந்து கொடுத்ததாகவும், அதில் பல நடிகர்கள் கலந்து கொண்டதாகவும், இதுவரை யாரும் சொல்லாததை எல்லாம் சொல்லி இருக்கிறார் என்றால், சுசித்ராவும் எல்லா விருந்திலும் கலந்து கொண்டார் என்று தான் அர்த்தம். சினிமாவில் பார்ட்டி கொடுப்பது என்பது சாதாரணமான விஷயம். ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சி நடந்தது என்றால், பெரிய தயாரிப்பாளர் பார்ட்டி கொடுப்பார். அதில், மது விருந்து இருக்கும், ஆனால், இந்த அம்மா சொல்வது போல போதை பொருள் இருக்காது. அது படம் முடிந்த மகிழ்ச்சியில் கொடுப்பது இதில் எந்த தவறும் இல்லை.
தவறான செயல்: இந்த விஷயத்தை ஒரு விஷயமாக சொல்லி, அதன் மூலம் புகழ் பெற வேண்டும் என்று சுசித்ரா இதை சொல்லி இருக்காங்க. அவர் கண்ட கனவு பலித்து விட்டது. அனைத்து மீடியாக்களும், சுசித்ரா பெயரைத்தான் சொல்லுகிறார்கள். இது ஒரு தவறான முன் உதாரணம். இதை நினைக்கும் போது ரொம்ப வருத்தமாக இருக்கிறது. இப்படி சிலர் கிளம்பினால், மக்கள் சினிமாவை பற்றி மிகவும் கேவலமாக நினைத்துவிடுவார்கள் என்று தயாரிப்பாளர் கே ராஜன் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.


Click it and Unblock the Notifications











