Ajith - அஜித் அரசியலுக்கு வந்தால் அவர்தான் அடுத்த எம்ஜிஆர்.. தயாரிப்பாளர் அதிரடி
சென்னை: நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கியிருக்கிறார். தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய விண்ணப்பித்திருக்கும் அவர் நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழகம் போட்டியிடாது என்றும்; சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் என்றும் அறிவித்திருக்கிறார். விஜய்யின் இந்த அதிரடி அரசியல் எண்ட்ரி அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தியிருக்கிறது. இந்தச் சூழலில் அஜித் பற்றி தயாரிப்பாளர் ராஜன் பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.
இந்திய சினிமாவில் அஜித்தும், விஜய்யும் டாப் ஹீரோக்கள் லிஸ்ட்டில் இருக்கின்றனர். இருவரும் ஒரேகாலகட்டத்தில் நடிக்க வந்தவர்கள். அதேபோல் தங்களது ஆரம்பகாலத்தில் நிலையான இடத்தை பிடிப்பதற்கு கடுமையாக போராடியவர்கள். விஜய் உருவ கேலியை சந்தித்தார் என்றால்; ஒழுங்காக தமிழே பேசவரவில்லை, எமோஷன் காட்சிகளில் நடிக்க தெரியவில்லை, நடனம் தெரியவில்லை போன்ற விமர்சனங்களையும் கேலிகளையும் அஜித் சந்தித்தார்.

ராஜாவின் பார்வையிலே: இரண்டு பேரும் இப்போது இருக்கும் இடம் சாதாரணமாக அவர்களுக்கு கிடைக்கவில்லை. அயராது உழைத்து, தங்களது திறமைகளை வளர்த்துக்கொண்டனர். அதன் பிரதிபலனாக இருவருமே இப்போது சூப்பர் ஸ்டார்களாக இருக்கின்றனர். 90களில் நடிக்க வந்த அஜித்தும், விஜய்யும் ஆரம்பத்தில் ராஜாவின் பார்வையிலே படத்தில் இணைந்து நடித்தனர். அதற்கு பிறகு அவர்கள் இணைந்து நடிக்கவே இல்லை.
அஜித் Vs விஜய்: அதற்கு பிறகு இருவரையும் சேர்த்து படம் எடுக்க யாருமே முயற்சிக்கக்கூடவில்லை. அதேசமயம் இருவரும் தங்களது பாதையில் சிறப்பாக செல்ல் இருவருமே உயர்ந்த இடத்துக்கு சென்றனர். இதனால் ரஜினி - கமல் என்பது போல் அஜித் - விஜய் என உருவானது. இருவருக்குமே ரசிகர்கள் பெருக இரண்டு பேரின் படமும் ஒரே நாளில் ரிலீஸானால் கூட்டம் அலைமோத ஆரம்பித்தது. அதுமட்டுமின்றி ரசிகர்களுக்குள்ளும் மோதல் ஆரம்பித்தது. கடைசியாக விஜய்யின் வாரிசு படமும் அஜித்தின் துணிவு படமும் வெளியானது.
விஜய்யின் அரசியல்: அஜித் இப்போது விடாமுயற்சி படத்தில் நடித்துவருகிறார். விஜய் GOAT படத்தில் நடித்துவருகிறார். சூழல் இப்படி இருக்க விஜய் இன்று அதிரடியான ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி அவர் தமிழக வெற்றி கழகம் என்று அரசியல் கட்சியை ஆரம்பித்து தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய விண்ணப்பித்திருக்கிறார். அதுமட்டுமின்றி 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழ்க வெற்றி கழகம் போட்டியிடவும் செய்கிறது. விஜய்யின் இந்த அரசியல் எண்ட்ரி அவரது ரசிகர்களை மிகப்பெரிய உற்சாகத்தை கொடுத்தது.
ராஜன் பேட்டி: விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்ததை அடுத்து அதுதொடர்பான பேச்சுதான் இன்று டாக் ஆஃப் தி இண்ட்டெர்நெட்டாக இருக்கிறது. இந்நிலையில் அஜித் அரசியலுக்கு வந்தால் எப்படி இருக்கும் என்று தயாரிப்பாளர் கே.ராஜன் பேசிய வீடியோ ஒன்று திடீரென்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. அந்தப் பேட்டியில் அவர், "விஜய்க்கு அரசியல் ஆசை உண்டு. அஜித்துக்கு அப்படி இல்லை. அதேசமயம் அஜித்துக்கு உள்ள தகுதிக்கு அவர் மட்டும் வந்து மக்களை சந்தித்தது அதிகம் உதவினால் அவர்தான் அடுத்த எம்ஜிஆர்.
தகுதி இருக்கு: அந்தத் தகுதி அஜித்துக்கு நிறையவே இருக்கிறது. ஏனெனில் அவரது பெயரில் ஒரு சர்ச்சைக்கூட இல்லை. அவரது குடும்பத்தை பற்றி ஏதேனும் தவறான செய்தி வந்திருக்கிறதா. பெற்றோர்களை அவ்வளவு அற்புதமாக பார்த்துக்கொள்ளும் அருமையான மகன், பிள்ளைகளுக்கு நல்ல தகப்பனாக இருக்கிறார். அதனால்தாதான் அஜித் அரசியலுக்கு வருவதற்கு தகுதியானவர்" என்றார்.


Click it and Unblock the Notifications











