சுசித்ரா பேசுவது ரொம்ப சங்கடமா இருக்கு.. தயாரிப்பாளர் ராஜன் ஓபன் டாக்
சென்னை: பின்னணி பாடகி சுசித்ரா கடந்த சில நாட்களாகவே கோலிவுட்டில் பெரும் புயலை கிளப்பிவருகிறார். தனுஷ், ஐஸ்வர்யா, கார்த்திக் குமார் உள்ளிட்டோர் குறித்து சரமாரி குற்றச்சாட்டுக்களை வைத்துவரும் சுசித்ரா திரிஷாவையும் விட்டுவைக்கவில்லை. அவர் முதலில் திரிஷா மீது குற்றச்சாட்டை வைத்த சூழலில் தயாரிப்பாளர் கே.ராஜன் சுசித்ரா விவகாரம் குறித்து பேசியிருக்கிறார்.
வானொலியில் ஆர்ஜே, பத்திரிகையாளர், பின்னணி பாடகி என பல முகங்களை கொண்டவர் சுசித்ரா. முக்கியமாக பின்னணி பாடகியாக வெகு பிரபலமானவர் சுசித்ரா. ஜேஜே படத்தில் இடம்பெற்ற மே மாசம் 98ல், வல்லவன் படத்தில் இடம்பெற்ற எம்மாடி ஆத்தாடி, மங்காத்தாவில் இடம்பெற்ற வாடா பின்லேடா உள்ளிட்ட பல பாடல்களை பாடிய சுசித்ரா கடந்த 2016ஆம் ஆண்டு தலைப்பு செய்தியாக மாறினார். அவரது ட்விட்டர் அக்கவுண்ட்டிலிருந்து சுச்சி லீக்ஸ் என்ற பெயரில் பிரபலங்களின் அந்தரங்க புகைப்படங்கள் வெளியாகின. அது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

விவாகரத்து: அவர் கார்த்திக் குமாரை திருமணம் செய்துகொண்டார். சுச்சி லீக்ஸ் சமயத்தில் சுசித்ராவுக்கு மனநலம் பாதிக்கப்பட்டதாகவும்; அதனால்தான் அவர் அப்படி நடந்துகொண்டார் என்றும் கார்த்திக் கூறியிருந்தார். அதற்கு பிறகு சுசித்ராவை காணவில்லை. அதேசமயம் கார்த்திக் குமாரை விவாகரத்து செய்துகொண்டு இப்போது இன்னொருவரை திருமணம் செய்து வாழ்ந்துவருகிறார் சுசித்ரா.
சுசித்ராவின் பேட்டி: கிட்டத்தட்ட 8 வருடங்கள்வரை எங்கிருந்தார் என்று தெரியாத சுசித்ரா இப்போது மீண்டும் பேட்டி கொடுக்க ஆரம்பித்திருக்கிறார். பிரபல யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தனுஷ், திரிஷா உள்ளிட்டோர் குறித்து பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார். மேலும் சுச்சி லீக்ஸ் என்பதே தனுஷ், திரிஷா உள்ளிட்டோர் செய்த பிராங்க்தான். முக்கியமாக அந்தப் புகைப்படங்களை திரிஷாதான் வெளியிட்டார் என்று சொல்லி பகீர் கிளப்பினார் சுசித்ரா.
திரிஷாவின் பதிலடி: மேலும் கார்த்திக் குமார் ஒரு தன் பாலின ஈர்ப்பாளர் என்றும்; அவரும் தனுஷும் ஒரே அறையில் இருந்தார்கள் என்றும் கூறியிருந்தார். சூழல் இப்படி இருக்க சுசித்ராவின் குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்த நடிகை திரிஷா, "நான் சரியாக இருந்தாலும் இந்த உலகம் குறை கூறுகிறது. உண்மையை திரித்து பேசுகிறது' என்று குறிப்பிட்டிருந்தார். இந்தச் சூழலில் மற்றொரு யூட்யூப் சேனலுக்கு சுசித்ரா அளித்த பேட்டியில் திரையுலகத்தை சேர்ந்த முன்னணி பிரபலங்கள் குறித்து பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்.
ராஜன் பேட்டி: இந்நிலையில் சுசித்ரா விவகாரம் குறித்து பேட்டியளித்த தயாரிப்பாளர் கே.ராஜன், 'சினிமாவில் சில சகோதரிகள் சில தவறுகளை செய்கிறார்கள்தான். இதனை மறுக்கவே முடியாது. அங்கு நடப்பதை ஏன் வெளிப்படுத்த வேண்டும். இத்தனை ஆண்டுகள் இல்லாமல் எதற்காக சுசித்ரா இதை இப்போது சொல்கிறார். விளம்பரம் தேடுகிறாரா தெரியவில்லை. இதை நான் வரவேற்கவும் இல்லை.
ரொம்ப சங்கடம்: ஷாருக்கான் வரை அவர் பேசுகிறார் என்றால் எப்படி இருப்பார். ரொம்ப சங்கடமா இருக்கு. பாடகி சின்மயி திடீரென வைரமுத்து பற்றி பேசுகிறார். அவர் சொல்லும் குற்றச்சாட்டு 15 வருடங்களுக்கு முன்னர் நடந்ததாக சொல்கிறார். ஆனால் அவருடைய கல்யாணத்துக்கு வைரமுத்து வருகிறார். சின்மயி குற்றம் நடந்தபோதே புகார் கொடுத்திருக்கலாம்' என்றார்.


Click it and Unblock the Notifications