முதலமைச்சராகணுமா?.. மக்கள் மறந்துடுவாங்க விஜய்.. தயாரிப்பாளர் கொடுத்த அட்வைஸ்

சென்னை: நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியிருக்கிறார். 2026ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் அந்தக் கட்சி களமிறங்குகிறது. பாஜகவும், திமுகவும்தான் தன்னுடைய அரசியல் எதிரி என்பதை கட்சியின் முதல் மாநாட்டில் தெளிவுப்படுத்திவிட்டார் அவர். இப்போது ஜன நாயகன் படத்தில் நடித்திருக்கும் அவர் தேர்தல் முடிவுகளை பொறுத்து சினிமாவில் நடிக்கலாமா வேண்டமா என முடிவெடுக்கவிருக்கிறார்.

சினிமாவில் மும்முரமாக நடித்துவந்த விஜய் தற்போது தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியிருக்கிறார். இனி முழுக்க முழுக்க அரசியல்வாதியாக மாறப்போகும் விஜய் அதன் காரணமாக இன்னும் ஒரே ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். அந்தப் படத்தை ஹெச்.வினோத் இயக்கிவருகிறார். படத்துக்கு ஜன நாயகன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் மும்முரமாக நடந்துவருகிறது. அடுத்த வருடம் ஜனவரி 9ஆம் தேதி அத்திரைப்படம் ரிலீஸாகும் என்று அறிவிப்பும் வந்துவிட்டது.

விமர்சன விஜய்: அரசியலுக்கு வந்திருக்கும் அவர் தன்னுடைய எதிரியாக திமுகவையும் பாஜகவையும் தேர்ந்தெடுத்திருக்கிறார். மேடைக்கு மேடை திமுக மீது காட்டமான விமர்சனங்களை முன்வைத்துவருகிறார். விஜய்யின் இந்த விமர்சனத்தை பார்த்த திமுகவினரோ விஜய்யின் அரசியல் அஜெண்டாவை பார்த்தால் பாஜகவின் பி டீம் போல் தெரிகிறார். கண்டிப்பாக இவரால் தமிழ்நாட்டுக்கு எந்த பிரயோஜனும் வரப்போவதில்லை என்றும் ஓபனாகவே பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.

Producer K Rajan Talks about Vijay s Political Entry
Photo Credit:

திமுகவின் பதிலடி: அதுமட்டுமின்றி விஜய்யின் பேசுச்க்கு பதிலடியும் கொடுத்துவருகிறார்கள். அதாவது ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விஜய் நிவாரண உதவிகளை வழங்கினார். ஆனால் பனையூரில் இருக்கும் தனது அலுவலகத்துக்கு மக்களை வரவழைத்து அதனை செய்தார். அது பெரும் விமர்சனத்தை சந்தித்தது. முக்கியமாக, 'அரசியலில் விஜய் Work From Home செய்கிறார்' என்றும் கிண்டல் செய்தார்கள். அதேபோல் விஜய்யின் பேச்சுக்களை வைத்தும் கடுமையாக திமுகவினர் ட்ரோல் செய்துவருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதற்கு தவெகவினரும் தகுந்த பதிலடியை கொடுத்துதான் வருகிறார்கள்.

புகழும் திரைத்துறை: விஜய்யின் அரசியல் வருகையை ஒருதரப்பினர் விமர்சனம் செய்தாலும்; திரைத்துறையிலிருந்து அவருக்கு சில ஆதரவு குரல்களும் எழத்தான் செய்கின்றன. அதாவது இப்போது விஜய்தான் கோலிவுட்டின் டாப் கமர்ஷியல் ஹீரோக்களில் ஒருவர் என்பது அனைவருக்குமே தெரியும். அவரது ஒவ்வொரு படமும் அசால்ட்டாக 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலிக்கிறது. மேலும் அவருக்கு கிட்டத்தட்ட 150 கோடி ரூபாய்வரை ஒரு படத்துக்கு சம்பளம் வாங்குகிறார் என்ற பேச்சுக்களும் ஓட ஆரம்பித்தன.

ராஜன் பேச்சு: இந்நிலையில் விஜய்யின் அரசியல் வருகை குறித்து தயாரிப்பாளர் ராஜன் பேசியிருக்கும் விஷயம் ட்ரெண்டாகியிருக்கிறது. அவர் பேசுகையில், "நடிகர்கள் எல்லாம் அரசியலுக்கு வந்தவுடனேயே முதலமைச்சராக வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். இவர்கள் எல்லாம் பெரிய எம்ஜிஆர?. எம்ஜிஆர் செய்ததில் 25 சதவீதமாவது நல்லது செய்தால் மட்டுமே எம்ஜிஆராக மாற முடியும். அவர் எத்தனை பேருக்கு தெரியுமா உதவி செய்திருக்கிறார். அள்ளி அள்ளி கொடுத்திருக்கிறார்.

மக்கள் மறந்திடுவார்கள்: எம்ஜிஆராக நினைத்து அரசியலுக்கு வரக்கூடாது. விஜய் அரசியலுக்கு வந்திருக்கிறார். அது அவரது உரிமை. ஆனால் இன்னும் ஒரு படத்தில் மட்டும்தான் நடிப்பதாக கூறியிருக்கிறார். அவர் வருடத்துக்கு ஒரு படமாவது நடிக்க வேண்டும். இல்லையென்றால் மக்கள் அவரை கண்டிப்பாக மறந்துவிடுவார்கள்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X