அஜித் கண்கலங்கி நின்றார்... அவருக்கு அப்படி நடந்திருக்கக் கூடாது... மிக அதிர்ச்சியான ப்ளாஷ்பேக்!
சென்னை: கோலிவுட்டில் இன்று டாப் ஹீரோவாக கலக்கி வரும் அஜித், தற்போது ஏகே 62 படத்தில் கமிட் ஆகியுள்ளார்.
துணிவு படம் கொடுத்த வெற்றியால் அஜித்தின் ஏகே 62 மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், ஆரம்ப கால சினிமா பயணத்தில் தயாரிப்பாளர் ஒருவர் அஜித்தை கடுமையாக திட்டியதால் அவர் ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே அழுததாக ரோஜா கம்பைன்ஸ் காஜா மைதீன் மனம் திறந்துள்ளார்.
மேலும், 199ம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான ஆனந்த பூங்காற்றே படத்தில், அஜித் ஹீரோவாக நடித்ததற்கான காரணம் குறித்தும் அவர் வெளிப்படையாக கூறியுள்ளார்.

ரோஜா கம்பைன்ஸ் காஜா மைதீன்
கோபாலா கோபாலா, பொற்காலம், பூந்தோட்டம், ஆனந்த பூங்காற்றே, சந்தித்த வேளை, பெண்ணின் மனதை தொட்டு, சமாதானம், ஜனா, தேவதையை கண்டேன் உள்ளிட்ட படங்களை தயாரித்தவர் ரோஜா கம்பைன்ஸ் காஜா மைதீன். லோ பட்ஜெட்டில் மினிமம் கியாரண்டி படங்களை தயாரித்து பிரபலமானார். அதேநேரம் 2005ம் ஆண்டு தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கும் முயன்றார். காஜா மைதீன் தயாரித்த படங்கள் தோல்வியடைந்ததே இதற்கு காரணம் என சொல்லப்பட்டது.

அஜித் நடிப்பில் ஆனந்த பூங்காற்றே
காஜா மைதீன் தயாரிப்பில் ஓரளவு லாபம் கொடுத்த படம் என்றால் அது அஜித்தின் ஆனந்த பூங்காற்றே தான். ராஜ்கபூர் இயக்கத்தில் அஜித், மீனா, கார்த்திக், மணிவண்ணன் ஆகியோர் நடிப்பில் 1999ம் ஆண்டு வெளியானது. இந்தப் படத்தில் அஜித் - மீனா இருவருக்குமான லவ் ஸ்டோரி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதேபோல் தேவாவின் இசையில் பாடல்களும் பட்டையைக் கிளப்பின. இந்நிலையில், இந்தப் படத்தில் அஜித் கமிட் ஆனது எப்படியென்று தயாரிப்பாளர் காஜா மைதீன் தனது நினைவுகளை மனம்விட்டுக் கூறியுள்ளார்.

படப்பிடிப்பில் அழுத அஜித்
சமீபத்தில் பிரபல யூடியூப் சேனலுக்கு பேட்டிக் கொடுத்த காஜா மைதீன், ராஜ்கபூர் வந்து என்னிடம் சொன்ன கதை நன்றாக இருந்தது, அதுதான் ஆனந்த பூங்காற்றே. அவரிடம் நான் யாரை வைத்து பண்ணலாம் என்று கேட்டபோது அவர் அஜித் பெயரை சொன்னார். அப்போது அஜித் அப்கம்மிங் ஆக்டர், சரியென்று இருவரும் அவர் நடித்துக் கொண்டிருந்த இன்னொரு படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் சென்று பார்த்தோம். ஆனால், நாங்கள் போன நேரம், அவர் நடித்துக் கொண்டிருந்த படத்தின் தயாரிப்பாளர், அஜித்தை நிற்கவைத்து திட்டிக் கொண்டிருந்தார். அஜித் எதுவும் பேசாமல் அப்படியே கண்கலங்கி நின்றார்.

கதை கேட்கவில்லை பணம் மட்டும் தான்
அதன்பின், அஜித்திடம் ஆனந்த பூங்காற்றே படம் பண்ணலாம் என இருப்பதாகக் கூறினோம். அவர் கதை எதுவும் கேட்காமல், எனக்கு 25 லட்சம் ரூபாய் சம்பளம் வேண்டும், அது கொடுத்தால் கால்ஷீட் ஓக்கே என்றார். அந்த தயாரிப்பாளர் திட்டியதற்கு காரணம் 25 லட்சம் ரூபாய் பணம்தான் என புரிந்துகொண்டோம். மறுநாளே அவரை எனது ஆபிஸ்க்கு வரவைத்து 22 லட்சம் கொடுத்தேன். அப்படித்தான் அவர் ஆனந்த பூங்காற்றே படத்தில் இணைந்தார்.

மீண்டும் பிரச்சினை வந்தது
அதன்பிற்கு தான் கார்த்திக், மீனா, மணிவண்ணன் ஆகியோர் கமிட் ஆனார்கள். அதேநேரம் கார்த்திக்கும் சொல்லிவைத்தது போல, அஜித் கேட்ட அதே 22 லட்சம் வேண்டும் என்றார். அவருக்கும் ஒரே பேமெண்ட்டில் கொடுத்து படத்தை தொடங்கினோம். பாலக்காட்டில் செட் போட்டு ஷூட் எடுத்தோம். வழக்கம் போல, கார்த்திக் சார் 7வது நாளில் 'ரொம்ப வெயிலாக இருக்கு' என ஆரம்பித்துவிட்டார். இன்னும் இரண்டு நாள் தான் ஷூட் என அவரை சமாதானப்படுத்தி, பல இடங்களிலிருந்து ஏர் கூலர்களை வாங்கிவந்து ஷூட்டிங் நடத்தினேன்.

அஜித்துக்கு பதிலாக பிரசாந்த்
கார்த்திக் போர்ஷனை முடித்துவிட்டு அஜித் சீன் எடுக்கலாம் என அவரை சந்திக்கப் போனால், முதுகு வலியால் அவர் ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகிவிட்டார். அதனால் அவரை வைத்து வேறு படம் பண்ணிக்கலாம் என முடிவுசெய்துவிட்டு ஆனந்த பூங்காற்றே படத்துக்கு பிரசாந்தை புக் செய்தேன். அதற்கு பிரசாந்தின் அப்பா தியாகராஜன். "ஏற்கனவே ஒரு நடிகரை புக் செய்துவிட்டு, அதில் பிரசாந்த் நடிப்பது முறையாக இருக்காது என்றார்." அவரிடம் சூழ்நிலையை விளக்கி சொன்ன பிறகே, வேண்டாவெறுப்பாக ஒப்புக்கொண்டார்.

அஜித் அப்படி கேட்டுவிட்டார்
அதனையடுத்து பிரசாந்த், கார்த்திக், மீனாவை வைத்து அட்டை பட விளம்பரம் ஒன்று வந்துவிட்டது. இதனிடயே அஜித் உடல் நலம் பற்றி விசாரிக்கப் போனேன். அப்போது அஜித் அந்த அட்டை படத்தை காட்டி, நான் திரும்ப வரமாட்டேன்னு நினைச்சுட்டீங்களா என்று கேட்டார். அதை கேட்டதும் எனக்கு பயங்கர சங்கடம். அதைவிட அவர் என் கையை பிடித்துக் கொண்டார். அவர் கண்ணீர் என் கையில் விழுகிறது. நான் ஒரே வார்த்தை தான் சொன்னேன், "சார், நீங்க வந்து தான் இந்த கதையில் நடிக்கிறீங்க" என்று. முதல்நாளே சண்டைக்காட்சியில் நடித்தார். ஆனந்த பூங்காற்றே படமும் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது என தயாரிப்பாளர் தனது பழைய நினைவுகளை பகிர்ந்துள்ளார். அவரின் இந்த பேட்டியை அஜித் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











