'ரஜினியை ஏமாற்றப் பார்க்கிறார்கள்..' - 'கபாலி' நஷ்ட சர்ச்சை குறித்து தாணு விளக்கம்
Recommended Video

சென்னை : ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'கபாலி' படத்தால் நஷ்டம் என்றும், அதற்கு ரஜினிகாந்த் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என்றும் சமீபத்தில் ஒரு தகவல் பரவியது.
இந்த விவகாரத்திற்கு 'கபாலி' படத்தின் தயாரிப்பாளர் எஸ்.தாணு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
'கபாலி' படம் நஷ்டம் என்று குரல் கொடுப்பவர் யார், அவருக்கும் இந்தப் படத்திற்கும் என்ன சம்பந்தம் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

கபாலி நஷ்டம்?
ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'கபாலி' படத்தால் நஷ்டம் என்றும், அதற்கு ரஜினிகாந்த் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என்றும் சமீபத்தில் ஒரு தகவல் பரவியது. ஜி.பி.செந்தில்குமார் என்பவர் இது தொடர்பான குற்றச்சாட்டை முன்வைத்தார். இந்த விஷயம் திரையுலகில் சர்ச்சைகளை ஏற்படுத்தியது.

எஸ்.தாணு விளக்கம்
நேற்று பத்திரிகையாளர்களைச் சந்தித்த 'கபாலி' படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, இந்தப் படம் நஷ்டம் என்று குரல் கொடுப்பவர் யார், அவருக்கும் இந்தப் படத்திற்கும் என்ன சம்பந்தம் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

நேர்மையான வியாபாரம்
ஜி.பி.செல்வகுமாருக்கும், கபாலி படத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. செல்வகுமார் கபாலி படத்தை வாங்கவில்லை. விநியோகஸ்தர் வேணுகோபாலுக்கு சாட்சி கையெழுத்து போட வந்தவர் தான் செல்வக்குமார். அவருக்கும் எனக்குமான பணபரிவர்த்தனைகள் வெளிப்படையாகவும் ,நேர்மையாகவும் நடந்து வந்திருக்கின்றன.

முற்றிலும் பொய்
கபாலி படம் நஷ்டம் என கூறுவது முற்றிலும் பொய். கபாலி மாபெரும் வெற்றி படம், சென்னையில் மட்டுமே 13 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது." எனக் கூறி கபாலி படத்தால் நஷ்டம் என்று வெளியான தகவலுக்கு தயாரிப்பாளர் எஸ்.தாணு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

காலா வரவிருப்பதால்
யாருக்காவது ஒரு கஷ்டம் என்றால் அவர்களை அழைத்து பிரச்னையை கேட்டு உதவி செய்வது சூப்பர்ஸ்டார் ரஜினியின் பழக்கம். அதை பயன்படுத்தி ரஜினியை ஏமாற்றத்தான் தான் கபாலி நஷ்டமென்று சர்ச்சைகளை உருவாக்குகிறார்கள். தற்போது காலா படம் வெளியாகவிருப்பதை முன்னிட்டுத் தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்துகிறார்கள். கடைசியில் நீதியே வெல்லும்." என கலைப்புலி எஸ்.தாணு கூறினார்.


Click it and Unblock the Notifications











