கேஜிஎப்... ஆர்ஆர்ஆர் படங்களுக்கு அப்புறமா இந்தப் படம்தான் இருக்கும் தாணு பாராட்டு எதுக்கு தெரியுமா?

சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் இணையவுள்ளார் நடிகர் சூர்யா. கடந்த ஆண்டிலேயே இந்தப் படத்தின் அறிவிப்பு மேற்கொள்ளப்பட்ட நிலையில் அடுத்தடுத்த படங்களில் இருவரும் பிசியாக உள்ளதால் இந்தப் படத்தின் சூட்டிங் தாமதமாகியுள்ளது. தற்போது பாலா இயக்கத்தில் இணைந்துள்ள சூர்யா, தொடர்ந்து இந்தப் படத்தின் சூட்டிங்கில் பங்கேற்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

நடிகர் சூர்யா

நடிகர் சூர்யா

நடிகர் சூர்யா சூரரைப் போற்று, ஜெய்பீம் மற்றும் எதற்கும் துணிந்தவன் என அடுத்தடுத்த வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார். இதில் சூரரைப் போற்று மற்றும் ஜெய்பீம் படங்கள் நேரடியாக ஓடிடியில் வெளியாகின. 3 ஆண்டுகளுக்கு பிறகு எதற்கும் துணிந்தவன் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் திரையரங்குகளில் ரிலீசாகி வெற்றிப் பெற்றுள்ளது.

சூர்யா 41 பட சூட்டிங்

சூர்யா 41 பட சூட்டிங்

இந்நிலையில் தற்போது பாலா இயக்கத்தில் சூர்யா41 படத்தின் முதல்கட்ட சூட்டிங்கை முடித்துள்ளார் சூர்யா. தொடர்ந்து இந்தப் படத்தின் முதல்கட்ட சூட்டிங் கன்னியாகுமரியில் 35 நாட்கள் நடந்து முடிந்துள்ளது. இதையடுத்து இரண்டாவது கட்ட சூட்டிங் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

சூர்யா தயாரிப்பு

சூர்யா தயாரிப்பு

இந்தப் படத்தை சூர்யாவே தயாரித்துவரும் நிலையில், இதற்கிடையில் சூரரைப் போற்று இந்தி ரீமேக்கையும் அவர் தயாரிக்கவுள்ளார். அக்ஷய் குமார் ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தின் சூட்டிங்கும் பூஜையுடன் துவங்கியுள்ளது. இதன் பூஜையில் சமீபத்தில் சூர்யா கலந்து கொண்டார். இதன் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின.

வாடிவாசல் படம்

வாடிவாசல் படம்

இந்நிலையில் பாலா படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்துவிட்டு வெற்றிமாறனின் வாடிவாசல் படத்தின் சூட்டிங்கில் இணையவுள்ளார் சூர்யா. வெற்றிமாறனும் தற்போது சூரி லீட் கதாபாத்திரத்தில் நடிக்கும் விடுதலை படத்தின் சூட்டிங்கில் பிசியாக உள்ளதால் அதை முடித்துவிட்டு வாடிவாசல் சூட்டிங்கை துவங்கவுள்ளார்.

வாடிவாசல் குறித்து தாணு அப்டேட்

வாடிவாசல் குறித்து தாணு அப்டேட்

இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு படம் குறித்த அப்டேட்டை தற்போது வெளியிட்டுள்ளார். இந்தப் படத்தின் முன் தயாரிப்புப் பணிகள் தற்போது துவங்கியுள்ளதாகவும் இந்தப் படம் இந்திய வரலாற்றில் கேஜிஎப், ஆர்ஆர்ஆர் படங்கள் ஏற்படுத்திய தாக்கத்தை தமிழில் ஏற்படுத்தும் என்றும் அவர் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X