Thanu: மிஷ்கினை இனி நான் மிஸ் செய்ய மாட்டேன்.. ட்ரெயின் பட தயாரிப்பாளர் தாணு உறுதி!
சென்னை: நடிகர் விஜய் சேதுபதி அடுத்தடுத்து முன்னணி இயக்குநர்களுடன் இணைந்து சிறப்பான படங்களை கொடுத்து வருகிறார்.. அவரது அடுத்தடுத்த மகாராஜா, விடுதலை 2 படங்கள் ரசிகர்களின் கவனத்தைப் பெற்று வெற்றி படங்களாக மாறியுள்ள நிலையில் அடுத்ததாக மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வரும் ட்ரெயின் படம் நிறைவு கட்டத்தை எட்டியுள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி S தாணு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது சமீபத்திய பேட்டியில் பேசியுள்ள நிலையில், ட்ரெயின் படத்தின் கதைக்களம் டிரெயினில் நடப்பது போன்று எடுக்கப்பட்டுள்ள நிலையில் அதற்காக எட்டு கம்பார்ட்மெண்ட்களை செட்டாக போட்டு மிஷ்கின் சூட்டிங் மேற்கொண்டதாகவும், ஆனால் அவை செட் என தெரியாத அளவில் மிகவும் தத்ரூபமாக அமைந்துள்ளதாகவும் தாணு தெரிவித்துள்ளார்.

தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு: இயக்குநர் மிஷ்கின் அடுத்தடுத்து படங்களை இயக்கியும் நடித்தும் வருகிறார். அவரது இயக்கத்தில் விஜய் சேதுபதி இணைந்துள்ள ட்ரெயின் படத்தின் ஷூட்டிங் ஏறக்குறைய நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது. இந்த படத்தின் கதைக்களம் டிரெயினில் நடப்பதாக அமைந்துள்ள நிலையில் இந்த படத்தின் பல காட்சிகளை ட்ரெயினில் எடுத்துள்ள மிஷ்கின் பிரம்மாண்டமான வகையில் ட்ரெயின் செட்டையும் போட்டு அதில் படப்பிடிப்பை மேற்கொண்டுள்ளார். இதற்காக 8 கம்பார்ட்மெண்ட்களை செட்டாக அமைத்து ஷூட்டிங்கை எடுத்துள்ளார். இந்த படத்தின் சூட்டிங் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் துவங்கப்பட்ட நிலையில் ஒரு ஆண்டாக இந்த படத்தின் சூட்டிங் நடந்து வருகிறது.
மிஷ்கின் -விஜய் சேதுபதி கூட்டணி: சவாலான கேரக்டர்களை எடுத்து நடித்து வரும் விஜய் சேதுபதி மிஷ்கினுடன் ட்ரெயின் படத்தில் கைகோர்த்துள்ளது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரித்து வருகிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மாஸாக அமைந்த நிலையில் படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக தாணு தனது பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். ரயிலில் நிகழும் சம்பவமாக இந்த படம் உருவாகி வருவதாக கூறப்பட்டுள்ள நிலையில், சென்னை உள்ளிட்ட பல இடங்களில் இந்த படத்தின் ஷூட்டிங் சிறப்பாக நடந்து வருகிறது.
மிஷ்கினை மிஸ் செய்ய மாட்டேன்: படத்தில் விஜய் சேதுபதியுடன் வினய் ராய், பாவனா சம்பத்ராஜ், பப்லு பிரித்விராஜ், கேஎஸ் ரவிக்குமார், கணேஷ் வெங்கட்ராமன், கனிகா சிங்கம் புலி, ஸ்ரீரஞ்சனி, அஜய், அருண் ஆகியோர் லீட் கேரக்டர்களில் நடித்து வருகின்றனர். இந்நிலையில் இயக்குநர் மிஷ்கின் மிகச்சிறந்த படைப்பாளி என்று தாணு தனது பேட்டியில் பாராட்டு தெரிவித்துள்ளார். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னதாக அவரை தான் சந்தித்ததாகவும் ஆனால் தான் அவரை மிஸ் செய்தேனா அல்லது அவர் தன்னை மிஸ் செய்தாரா என்று தெரியவில்லை என்று தாணு தெரிவித்துள்ளார். இனி இருவரும் ஒருவரை ஒருவர் மிஸ் செய்து கொள்ள மாட்டோம் என்றும் அவர் உறுதியாக பேசியுள்ளார்.
உச்சி முகரும்படியான படம்: அந்த அளவிற்கு தான் ட்ரெயின் படம் மூலம் மகிழ்ச்சியில் உள்ளதாகவும் தாணு தெரிவித்துள்ளார். அந்த அளவிற்கு அவரது உழைப்பு, இன்வால்வ்மெண்ட் மற்றும் தான் அவர் மீது வைத்துள்ள அன்பு ஆகியவை எண்ணில் அடங்காது என்றும் தாணு குறிப்பிட்டுள்ளார். உச்சி முகரும் படியான ஒரு பிரமாதமான படத்தை மிஷ்கின் கொடுத்துள்ளதாகவும் தாணு பாராட்டு தெரிவித்துள்ளார். இந்தப் படத்தைப் பார்க்கும் ரசிகர்கள் அனைவரும் சீட் நுனியில் உட்கார்ந்து தான் பார்ப்பார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் படத்திற்காக போடப்பட்ட ட்ரெயின் செட் உண்மையில் செட் போலவே தெரியாத அளவிற்கு மிஷ்கின் மிகச் சிறப்பாக கொடுத்துள்ளதாகவும் தாணு பாராட்டு தெரிவித்துள்ளார். எப்போதுமே தன்னுடைய படங்களில் கதைக்களத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து படங்களை கொடுப்பவர் மிஷ்கின். அந்த வகையில் ட்ரெயின் படம் அவருக்கும் விஜய் சேதுபதிக்கும் மிகப்பெரிய வரவேற்பை சினிமாவில் பெற்றுக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











