துரைமுருகன் வீட்டு சம்பந்தி ஆகிறார் தயாரிப்பாளர் கண்ணன் ரவி.. பிரம்மாண்டமாக நடந்த நிச்சயதார்த்தாம்

சென்னை: இந்த ஆண்டு ஜீவா நடிப்பில் வெளியான 'தலைவர் தம்பி தலைமையில்' மற்றும் நட்டி நட்ராஜ் நடிப்பில் வெளியாகி சர்ச்சைகளை கிளப்பிய TN2026 தங்கநட்சத்திரம் உள்ளிட்ட படங்களை தயாரித்த தொழிலதிபர் கண்ணன் ரவியின் மகன் நிச்சயதார்த்தம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது.

இதில், ஹைலைட் என்னவென்றால், முன்னாள் திமுக அமைச்சர் மற்றும் திமுகவின் பொதுச்செயலாளரான துரைமுருகனின் பேத்தியை தான் கண்ணன் ரவி மகனுக்கு நிச்சயம் செய்துள்ளனர். கூடிய விரைவில் திருமணமும் நடைபெறவுள்ளது.

Producer Kannan Ravi Son engaged with DMK Ex MLA Duraimurugan Grand Daughter

தலைவர் தம்பி தலைமையில் திரைப்படம் இந்த ஆண்டு கண்ணன் ரவிக்கு மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்தது. ஆனால், நட்டி நட்ராஜ் நடித்த டிஎன் 2026 திரைப்படத்தில் விஜய் மற்றும் ரஜினிகாந்தை கிண்டல் செய்து படத்தை எடுத்தனர் என சர்ச்சைகள் வெடித்தன.

தயாரிப்பாளர் கண்ணன் ரவி: சாந்தனு நடிப்பில் வெளியான ராவண கோட்டம் படத்தை தயாரித்து தயாரிப்பாளர் ஆனவர் தான் கண்ணன் ரவி. இந்த ஆண்டு ஜீவா நடிப்பில் வெளியான தலைவர் தம்பி தலைமையில் திரைப்படம் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு 40 கோடி வரை வசூல் ஈட்டித் தந்தது. நட்டி நட்ராஜ், தம்பி ராமையா நடிப்பில் தம்பி ராமையாவின் மகன் உமாபதி இயக்கிய டிஎன் 2026 திரைப்படம் பெரிதாக ஓடவில்லை. தொடர்ந்து தமிழில் படங்களை தயாரித்து வரும் கண்ணன் ரவி தனது மகன் தீபக் ரவியின் திருமண நிச்சயதார்த்தத்தை நேற்று கோலாகலமாக நடத்தியுள்ளார்.

Producer Kannan Ravi Son engaged with DMK Ex MLA Duraimurugan Grand Daughter

துரைமுருகன் வீட்டு சம்பந்தி: திமுகவின் பொதுச்செயலாளரும் முன்னாள் அமைச்சருமான துரைமுருகன் பேத்தியும்,வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்தின் மகளான செந்தாமரையுடன் தான் தற்போது கண்ணன் ரவியின் மகன் தீபக் ரவிக்கு நிச்சயமானது. விரைவில் இருவரும் இல்வாழ்க்கையில் இணைய போகின்றனர். வேலூர், காட்பாடியில் உள்ள கிங்ஸ்டன் கல்லூரியில் நேற்று திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போது நிச்சயதார்த்த போட்டோக்கள் வெளியாகி உள்ள நிலையில், பலரும் அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். கண்ணன் ரவி தயாரிக்கும் படங்களை அவரது மகன் தீபக் ரவி துணை தயாரிப்பாளராக இருந்து அனைத்து வேலைகளையும் கவனித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Producer Kannan Ravi Son engaged with DMK Ex MLA Duraimurugan Grand Daughter

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X