கேஜிஎப்-2 கொடுத்த சூப்பர் டூப்பர் வெற்றி...3-வது பாகம் பற்றி தயாரிப்பாளர் சொன்ன சூப்பர் தகவல் இதோ
ஐதராபாத் : நடிகர் யஷ் நடிப்பில் கடந்த 14ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது கேஜிஎப் சாப்டர் 2. இந்தப் படத்தின் முதல் பாகம் ஏற்படுத்திய தாக்கத்தில் இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமாக காணப்பட்டது. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து தற்போது வசூல் சாதனை செய்து வருகிறது கேஜிஎப்2.
Recommended Video

நடிகர் யஷ்
நடிகர் யஷ் மிரட்டலான நடிப்பில் கடந்த 2019ல் வெளியான கேஜிஎப் படம் சிறப்பான அனுபவத்தை ரசிகர்களுக்கு கொடுத்தது. கேங்ஸ்டர் படமாக ரத்தம், வன்முறை தெறிக்க வெளியானாலும் படத்தை ரசிகர்கள் கொண்டாடினர். சிறப்பான வெற்றியை படம் தந்தது. இதையடுத்து கன்னடத்தில் மட்டுமில்லாமல் சர்வதேச அளவில் யஷ் மற்றும் இயக்குநர் பிரஷாந்த் நீல் கவனிக்கப்பட்டனர்.

10,000 திரையரங்குகளில் ரிலீஸ்
இதனிடையே தற்போது படத்தின் இரண்டாவது பாகம் கடந்த 14ம் தேதி சர்வதேச அளவில் 10,000க்கும் அதிகமான திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என ஐந்து மொழிகளில் படம் ரிலீசானது. படத்திற்கான பிரமோஷனும் சிறப்பான வகையில் செய்யப்பட்டது.

அரங்கு கொள்ளாத காட்சிகள்
இந்நிலையில் படம் வெளியான திரையரங்குகளில் எல்லாம் அரங்கு கொள்ளாத காட்சிகளால் நிரம்பியுள்ளது. ஒரு சிறப்பான படத்திற்கு மொழி முக்கியமானதல்ல என்பதை மீண்டும் ரசிகர்கள் இந்தப் படத்தின் மூலம் நிரூபித்துள்ளனர். யஷ் இதன்மூலம் சர்வதேச அளவில் சிறப்பான நாயகனாக தன்னை நிலைநிறுத்தியுள்ளார்.

3வது பாகம் குறித்த எதிர்பார்ப்பு
இந்தப் படத்தையடுத்து இதன் மூன்றாவது பாகம் குறித்து ரசிகர்கள் தற்போதே எதிர்பார்க்க துவங்கியுள்ளனர். இதுகுறித்த அறிவிப்பும் முன்னதாகவே வெளியானது. இதனிடையே, இந்தப் படத்தின் பிரமோஷனுக்காக சமீபத்தில் பேசிய இயக்குநர் பிரஷாந்த் நீல், இந்தப் படத்தின் மூன்றாவது பாகம் ரிலீசாக 8 ஆண்டுகள் ஆகும் என்று தெரிவித்திருந்தார்.

3வது பாகம் -வேலைகள் துவக்கம்
இதனிடையே படத்தின் மூன்றாவது பாகத்திற்கான முதல்கட்ட வேலைகள் துவங்கிவிட்டதாக அதன் தயாரிப்பாளர் கார்த்திக் கௌடா தெரிவித்துள்ளார். விரைவில் படத்தில் நடிக்கவுள்ள நடிகர், நடிகைகள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் அவர் கூறியுள்ளார். படம் வெளியாக 8 ஆண்டுகள் ஆகும் என்று இயக்குநர் பிரஷாந்த் நீல் குறிப்பிட்டிருந்த நிலையில் தற்போது தயாரிப்பாளரின் இந்த அறிவிப்பு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











