என்னது டிஸ்கஷன் மட்டும் 2 வருடங்களா?.. சூர்யா - கார்த்திக் சுப்புராஜ் ரகசியத்தை சொன்ன தயாரிப்பாளர்
சென்னை: சூர்யா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர். தமிழில் மட்டும் கவனம் செலுத்தி வந்த சூர்யா தற்போது ஹிந்தி சினிமா பக்கமும் கவனத்தை திருப்பியிருக்கிறார். விரைவில் அவர் ஒரு ஹிந்தி படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனையொட்டிதான் தனது மனைவி ஜோதிகாவுடன் அவர் மும்பையிலேயே செட்டில் ஆகியிருப்பதாக கூறப்படுகிறது. இந்தச் சூழலில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனது 44ஆவது படத்தில் நடிக்கிறார் சூர்யா.
சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான எதற்கும் துணிந்தவன் திரைப்படம் தோல்வியையே சந்தித்தது. அதனையடுத்து வணங்கான், கங்குவா, வாடிவாசல், புறநானூறு ஆகிய படங்களில் கமிட்டானார். இவற்றில் வணங்கானிலிருந்து வெளியேறிய அவர் வாடிவாசலில் நடிக்கிறாரா இல்லையா என்பது குறித்து இன்னும் தெரியவில்லை. அதேசமயம் சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்து முடித்திருக்கிறார். ஞானவேல் ராஜா இந்தப் படத்தை தயாரிக்கிறார். திஷா பதானி ஹீரோயினாக நடித்திருக்கிறார்.

பல மொழிகளில்: சூர்யாவின் கரியரிலேயே கங்குவா படம்தான் ஹை பட்ஜெட் படம். 10க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாகவிருக்கும் இப்படம் 3டி தொழில்நுட்பத்திலும் உருவாக்கப்பட்டிருக்கிறது. சிவா கடைசியாக இயக்கிய அண்ணாத்த திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. எனவே இந்தப் படத்தின் மூலம் கம்பேக் கொடுப்பதற்காக அவரும் காத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
முடிந்த ஷூட்டிங்: படத்தின் ஷூட்டிங் சென்னை, கோவா, தாய்லாந்து, புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் நடந்து முடிந்தது. சமீபத்தில்தான் சூர்யா படத்தில் தன்னுடைய போர்ஷனுக்கான டப்பிங்கை கொடுத்து முடித்தார். அதுதொடர்பான புகைப்படங்கள் வெளியாகி ட்ரெண்டாகின. மேலும் இப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகும் என்றும்; இரண்டு பாகங்களுக்கான ஷூட்டிங்கையும் சிவா முடித்துவிட்டார் என்றும் ஒரு தகவல் அரசல் புரசலாக ஓடிக்கொண்டிருப்பது கவனிக்கத்தக்கது.
என்ன கதை: இந்தப் படமானது பீரியட் ஜானரில் வெளியாகும் என்று முதலில் சொல்லப்பட்டது. ஆனால் முழுக்க முழுக்க பீரியட் ஜானரில் கங்குவா வராது என்றும்; கதையின் பெரும்பாலான பகுதிகள் இந்தக் காலகட்டத்தில் நடப்பது மாதிரிதான் கதை அமைக்கப்பட்டிருப்பதாகவும்; குறிப்பிட்ட சில நிமிடங்கள்தான் பீரியட் ஜானரில் படம் நகரும் என்றும் படக்குழுவுக்கு நெருக்கமான வட்டாரம் தெரிகிறது.
அடுத்த படம்: இதற்கிடையே தமிழில் மட்டும் கவனம் செலுத்திவந்த சூர்யா இப்போது ஹிந்தியிலும் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார். விரைவில் அவர் ஒரு ஹிந்தி படத்தில் நடிக்கவிருக்கிறார். அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் விரைவில் வெளியாகும். அதேபோல் சுதா கொங்கராவின் இயக்கத்தில் புறநானூறு, வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் ஆகிய படங்களிலும் கமிட்டானார். இந்த இரண்டு படங்களில் வாடிவாசலில் நிலைமை என்னவானது என்று இதுவரை தெரியவில்லை.
கார்த்திக் சுப்புராஜுடன்: இந்தச் சூழலில் யாரும் எதிர்பார்க்காதவகையில் கார்த்திக் சுப்புராஜுடன் கூட்டணி அமைத்திருக்கிறார் சூர்யா. இந்தப் படம் அவரது 44ஆவது படமாக உருவாகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இந்நிலையில் இந்தப் படம் குறித்து தயாரிப்பாளர் கார்த்திகேயன் தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "கார்த்திக் சுப்புராஜ் - சூர்யா கூட்டணி குரித்த ரகசியத்தை பாதுகாப்பதை முக்கியமாக கருதினோம்.
தகவல் கசிவு: திரைத்துறையை சேர்ந்த தகவல்கள் முன்கூட்டியே அதிகளவில் கசிந்துவிடுகின்றன. அதனால் சரியான தருணம் வரும்வரை இந்தக் கூட்டணி தொடர்பான ரகசியத்தை பாதுகாத்துவந்தோம். இந்தப் படம் தொடர்பான டிஸ்கஷன் கார்த்திக் - சூர்யா இடையே கிட்டத்தட்ட 2 வருடங்களாக நடந்தது" என்றார்.


Click it and Unblock the Notifications











