ஐயப்பனும் கோஷியும் தமிழ் ரீமேக்.. இயக்கப் போவது யார் தெரியுமா?
சென்னை : சென்ற ஆண்டு வெளியான ஐயப்பனும் கோஷியும் படம் மாபெரும் வெற்றி பெற்று வசூலை அள்ளியது.
அதைத் தொடர்ந்து தெலுங்கு மற்றும் தமிழ் என இரு மொழிகளிலும் இந்த படம் ரீமேக் செய்யப்போவதாக பேச்சுவார்த்தைகள் அப்போதே நடைபெற்று வந்தது.
தெலுங்கு ரீமேக் பணிகள் ஏற்கனவே தொடங்கிய நிலையில் தமிழில் பிரபல இயக்குனர் ஒருவர் இந்த படத்தை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

பவன்கல்யாண் மற்றும் ராணா
மலையாள படங்களின் ரீமேக் பட்டியல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் சென்ற ஆண்டு இயக்குனர் சாச்சி இயக்கத்தில் பிரித்விராஜ் மற்றும் பிஜூ மேனன் ஆகியோரின் மிரட்டலான நடிப்பில் வெளியான ஐயப்பனும் கோஷியும் திரைப்படம் தெலுங்கு மற்றும் தமிழ் என இரு மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட உள்ளது உறுதி செய்யப்பட்டது. அதில் தெலுங்கு ரீமேக்கில் நடிகர்கள் பவன்கல்யாண் மற்றும் ராணா நடிக்க இருப்பது உறுதி செய்யப்பட்டு அதன் படப்பிடிப்பு பணிகள் முழுவீச்சில் தொடங்கப்பட்டு நடந்து வருகிறது.

தமிழ் ரீமேக்
இந்த நிலையில் தமிழ் ரீமேக் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வரை வெளியாகாமல் இருக்க ஆரம்பத்தில் இதில் சசிகுமார் பிரித்திவிராஜ் கதாபாத்திரத்திலும் பார்த்திபன் பிஜுமேனன் கதாபாத்திரத்திலும் நடிக்க இருப்பதாக தகவல்கள் உலா வந்தன ஆனால் அதை நடிகர் பார்த்திபன் அதை மறுத்திருந்தார். மேலும் இதில் கார்த்தி மற்றும் சரத்குமார் நடிக்க இருப்பதாகவும் சொல்லப்பட்டது.

இயக்குனராக அறிமுகம்
ஐயப்பனும் கோஷியும் தமிழ் ரீமேக் உரிமையை பிரபல தயாரிப்பாளரான பைவ் ஸ்டார் கதிரேசன் வாங்கி இருக்க இப்பொழுது அவரே என்ற படத்தை தயாரித்து இயக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. தயாரிப்பாளராக பல வெற்றிப் படங்களை தயாரித்துள்ள கதிரேசன் இப்பொழுது ராகவா லாரன்ஸ் நடித்து வரும் ருத்ரன் படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமாகிறார்.

இயக்க உள்ளதாக
ருத்ரன் படத்தை தொடர்ந்து கைவசம் இருக்கும் ஐயப்பனும் கோஷியும் தமிழ் ரீமேக்கையும் இவரே இயக்க உள்ளதாகவும் கூறப்படும் நிலையில் விரைவில் இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் நடிகர் நடிகைகளின் விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











