இயக்குனராக மாறிய தனுஷ் பட தயாரிப்பாளர்.. ராகவா லாரன்ஸ் நடிக்கும் படத்தை இயக்குகிறார்!

By

சென்னை: பிரபல தயாரிப்பாளர் பைவ் ஸ்டார் கதிரேசன் இயக்குனராக மாறியிருக்கிறார்.

ராகவா லாரன்ஸ் நடிப்பில் கடைசியாக, கடந்த ஆண்டு காஞ்சனா 3 படம் வெளியானது.

அதன் பிறகு அவர் நடிக்க இருப்பதாக ருத்ரன், சந்திரமுகி 2 ஆகிய படங்கள் பற்றிய அறிவிப்பு வெளியானது.

காஞ்சனா இந்தி ரீமேக்

காஞ்சனா இந்தி ரீமேக்

இதற்கிடையே அவர் இயக்கி, தயாரித்து நடித்த காஞ்சனா படத்தை இந்தியில் ரீமேக் செய்தார். லக்ஷ்மி பாம் என்ற பெயரில் உருவான இந்தப் படத்தில் அக்ஷய் குமார், கியாரா அத்வானி உட்பட பலர் நடித்திருந்தனர். இந்திக்காக கதையில் சில மாற்றங்கள் செய்து இயக்கினார்.

ஜி.வி. பிரகாஷ் குமார்

ஜி.வி. பிரகாஷ் குமார்

கடந்த சில மாதங்களுக்கு முன் ஓடிடியில் வெளியான இந்தப் படம் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் அவர் அடுத்து ருத்ரன் படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் டைட்டிலை அக்டோபர் 29 ஆம் தேதி வெளியிட்டனர். ஜி,வி பிரகாஷ் இசையமைக்கிறார். அப்போது படத்தை யார் இயக்குகிறார் என்ற அறிவிப்பு வெளியாகவில்லை.

ஃபைவ் ஸ்டார் கதிரேசன்

ஃபைவ் ஸ்டார் கதிரேசன்

இந்நிலையில் இந்தப் படத்தை தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் கதிரேசனே இயக்குவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதுபற்றி அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது. கதிரேசன், வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த பொல்லாதவன், ஆடுகளம், கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ஜிகிர்தண்டா உட்பட சில படங்களைத் தயாரித்தவர்.

அய்யப்பனும் கோஷியும்

அய்யப்பனும் கோஷியும்

சில படங்களில் நடித்தும் இருக்கிறார். இப்போது மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான அய்யப்பனும் கோஷியும் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை அவர் பெற்றுள்ளார். இதில் சசிகுமார் நடிப்பது உறுதியாகி இருக்கிறது. வேறு யார் யார் நடிக்கிறார்கள் என்பது முடிவாகவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X