“நெஞ்சம் மறப்பதில்லை“..படம் பார்த்த தயாரிப்பாளர் என்ன சொன்னார் தெரியுமா?
சென்னை: எஸ்.ஜே. சூரியா, ரெஜினா, நந்திதா உள்ளிட்டோர் நடிப்பில் பல நாட்களாக வெய்டிங்-ல் உள்ள படம் நெஞ்சம் மறப்பதில்லை.
இந்த படத்தை செல்வராகவன் திரைக்கதை எழுதி இயக்கி உள்ளார். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். கவுதம் மேனன் தயாரித்துள்ளார்.
2016-ல் எடுக்கப்பட்ட இந்த படமானது இன்னும் வெளிவராமல் வெய்டிங்-ல் உள்ளது குறிப்பிடத்தக்கது.

காத்திருப்பில் ரசிகர்கள்
செல்வராகவன் இயக்கத்தில் கடந்த வருடம் வெளியான என். ஜி. கே திரைப்படம் போதிய அளவில் ரசிகர்களை பூர்த்தி செய்யவில்லை. அவருடைய ஆயிரத்தில் ஒருவன் - 2, புதுப்பேட்டை - 2 என்று இன்னும் எடுக்கப்படாமல் இருக்கும் படத்திற்கு காத்திருப்பது போல் 2016-ல் எடுக்கப்பட்ட நெஞ்சம் மறப்பதில்லை படம் எப்பொழுது தான் வெளிவரும் என ஏங்கி காத்துள்ளனர் செல்வ ராகவனின் ரசிகர்கள்.

படம் வந்தா போதும்
ஏற்கனவே படத்தின் 4 ட்ரைலர்கள் வெளியாகியுள்ளது. சில மாதங்களுக்கு முன்னர் ஒரு போஸ்டர் வெளியானது. Psychological Thriller கதைகளத்தை கொண்ட படமாகும். 4 ட்ரைலர்களும் பார்க்கும் போதெல்லாம் எதிர்பார்ப்பை கிளப்பி கொண்டே இருக்கும் நிலையில் படம் வந்தால் மட்டும் போதும் என்ற நிலையில் உள்ளனர் ரசிகர்கள்.

தயாரிப்பு நிறுவனத்தால் தாமதம்
இந்த படத்தை இயக்குனர் கவுதம் மேனன் தயாரித்துள்ளார். அவரது தயாரிப்பில் என்னை நோக்கி பாயும் தோட்டா கடன் காரணமாக நீண்ட இடைவெளிக்கு பின் கடந்த வருடம் வெளியானது. அதை தவிர அவரது தயாரிப்பில் நெஞ்சம் மறப்பதில்லை, துருவ நட்சத்திரம், நரகாசூரன் என்று கடன் காரணமாக வரிசை கட்டி படங்கள் வெளி வராமல் காத்திருப்பில் உள்ளது. இவை அனைத்தும் 2021ல் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மகிழ்ச்சியில் ரசிகர்கள்
Rock Fort Entertainment ன் Creative Producer ஆன K. B. ஸ்ரீராம் நேற்று நெஞ்சம் மறப்பதில்லை படத்தை பார்த்ததாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அது மட்டுமன்றி படகுழுவினரை புகழ்ந்து பேசி, நிச்சயமாக படம் திரை அரங்கில் தான் வெளிவரும் என கூறி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளார்.


Click it and Unblock the Notifications











