வரி ஏய்ப்பா? வரியை ஏய்க்கவும் இல்ல மேய்க்கவும் இல்ல.. சேனல்கள் மீது பாய்ந்த தயாரிப்பாளர் வொய்ஃப்!
சென்னை: எக்மோர் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது தொடர்பாக செய்தி வெளியிட்ட சேனல்களை தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவின் மனைவி விளாசியிருக்கிறார்.
பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும் நடிகர் சூரியாவின் உறவினருமான ஞானவேல்ராஜா, தனது வருமானத்தை மறைத்து, வரி ஏய்ப்பு செய்ததாக வருமான வரித்துறை சார்பில் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் விசாரணை முடிந்து, குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்வதற்காக கேள்விகளை கேட்டு பதிவு செய்யும் நடைமுறைக்காக ஞானவேல்ராஜாவை ஆஜராக எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

கோரிக்கை
பலமுறை வாய்ப்பளித்தும் ஞானவேல்ராஜா ஆஜராகாததால், அவருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்க வேண்டும் என வருமானவரித் துறை தரப்பு வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார்.

பிடிவாரண்ட்
இதை ஏற்றுக் கொண்ட எழும்பூர் நீதிமன்றம் கடந்த திங்கள் கிழமை ஞானவேல்ராஜாவுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டது. இதுதொடர்பான செய்திகள் அனைத்து ஊடகங்களிலும் வெளியானது.
வரி ஏய்ப்பு புகாரா?
இந்நிலையில் இதுகுறித்து செய்தி வெளியிட்ட ஊடகங்களை கடுமையாக விமர்சித்திருக்கிறார் ஞானவேல் ராஜாவின் மனைவி நேகா. இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், வரி ஏய்ப்பு புகாரா? வரியை ஏய்க்கவும் இல்ல.. மேய்க்கவும் இல்ல.. அரைவேக்காட்டுத்தனமான செய்தித் தொலைக்காட்சிகள் மற்றும் அவற்றைக் குருட்டுத்தனமாகப் பின்பற்றுபவர்கள். இதுல பிடிவாரண்ட் வேற.. ஸ்ப்பா.. முடியல என பதிவிட்டிருக்கிறார்.
வேண்டும் என்றே..
அவரின் இந்த டிவிட்டை பார்த்த ரசிகர்கள் சிலர் சூர்யாவுடன் தொடர்புடையவர்களை ட்ரோல் செய்ய இதுபோன்று செய்கிறார்கள். இதை வேண்டுமென்றே செய்கிறார்கள் என கூறியுள்ளனர்.
ஏன் கோர்ட்டுக்கு வந்தார்?
அதே நேரத்தில் அவர் ஏன் கோர்ட்டில் ஆஜாரானார் என்றும் சில நெட்டிசன்கள் ஞானவேல் ராஜாவின் மனைவியை கேட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











