குட் பேட் அக்லியால் 40 கோடி ரூபாய் நஷ்டம்.. அவர் பின் ஏன் ஓட வேண்டும்?.. அஜித்தை விளாசிய தயாரிப்பாளர்

சென்னை: அஜித்குமார் நடிப்பில் கடந்த வருடம் குட் பேட் அக்லி, விடாமுயற்சி ஆகிய இரண்டு படங்கள் வந்தன. இரண்டு படங்களுமே பெரிய வெற்றியை பெறவில்லை. அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில்தான் நடிக்க அஜித் கமிட்டாகியுள்ளார். இப்படிப்பட்ட சூழலில் பிரபல தயாரிப்பாளர் கேயார் அஜித் பற்றி பேசியிருக்கும் விஷயங்கள் திரைத்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றன.

அஜித் இப்போது கார் ரேஸில் கவனம் செலுத்திவருகிறார். துபாயில் முகாமிட்டிருக்கும் அவர் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகக் கமிட்டாகியுள்ளார். கடந்த வருடத்தில் வெளியான அஜித்தின் இரண்டு படங்களுமே சொல்லிக்கொள்ளும்படியான வெற்றியையும் பெறவில்லை; விமர்சனத்தையும் பெறவில்லை. எனவே அடுத்த படமாவது நன்றாக அமைய வேண்டும் என ஏகே ரசிகர்கள் ஆசைப்படுகிறார்கள். இந்நிலையில் பிரபல தயாரிப்பாளர் கேயார் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் அஜித் பற்றி பேசியிருக்கும் விஷயம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கேயார் பேட்டி: அவர் அளித்த பேட்டியில், "அஜித் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி திரைப்படம் 40 கோடி ரூபாய்வரை நஷ்டத்தை கொடுத்தது. இது பலருக்கும் தெரியாது. சினிமா வட்டாரத்தில் இருப்பவர்களுக்கு மட்டும்தான் தெரியும். சில ஏரியாக்களில் வியாபாரமே ஆகவில்லை என்பதால் அந்த நஷ்டம் வந்தது. ஆனால் அடிப்படையில் அஜித் நல்ல மனிதர். அவர் தனிப்பட்ட முறையில் பலருக்கும் பல உதவிகளை செய்து வருகிறார்.

Producer Keyaar s Comments on Ajith Kumar Spark Controversy in Tamil Cinema
Photo Credit:

தண்டையாக நினைக்கிறார்: ஆனால் சினிமாவை பொறுத்தவரை அவர் நினைக்கும் படம், அவர் நினைக்கும் தயாரிப்பாளர், அவர் விரும்பும் தொழில்நுட்ப கலைஞர்கள் எல்லாம் இங்கே இல்லவே இல்லை என்றுதான் நினைத்துக்கொண்டிருக்கிறார். அவர் சினிமாவில் நடிப்பதையே ஒரு தண்டனையாகத்தான் பார்க்கிறார். அவரது முதல் படமான அமராவதிக்கு நான்தான் விநியோகஸ்தர். அந்தப் படம் சரியாக போகவில்லை என்பதுதான் உண்மை.

விஜய்யை பார்த்து சம்பளம்: அஜித் நடிக்க வந்ததற்கு ஒரு வருடம் முன்னர் விஜய் சினிமாவுக்கு வந்தார். அஜித் எப்போதுமே தனது மார்க்கெட்டை வைத்து சம்பளத்தை முடிவு செய்யமாட்டார். மாறாக விஜய் என்ன வாங்குகிறாரோ அதில் ஒரு அளவை ஏற்றிக்கொண்டே வதார். அப்படித்தான் அஜித் உச்சத்துக்கு போய்விட்டார். கடந்த வருடம் வந்த விடாமுயற்சி படமும் சரியாக போகவில்லை. அந்தப் படத்தின் இயக்குநர் மகிழ் திருமேனி ஒரு பேட்டியில், 'நான் ஒரு கதை சொன்னேன். அதை எடுத்திருந்தால் ஹிட்டாகியிருக்கும். ஆனால் அஜிஹ் என்னை ஒரு ஆங்கில படம் பார்க்க பரிந்துரை செய்து விடாமுயற்சியாக பண்ண சொன்னதாக தெரிவித்தார். அது வீண் முயற்சிதான்.

ஏன் ஓட வேண்டும்: ஆனாலும் அவருக்கென்று ரசிகர்கள் இருக்கிறார்கள். படத்தின் பூஜை, ப்ரோமோஷன் என எதற்குமே அஜித் வரமாட்டார். அப்படி செய்யாதவர் பின் ஏன் தயாரிப்பாளர்கள் ஓட வேண்டும். கொஞ்சம் சுயமரியாதையோடு இருங்கள். தன்னை எது வாழ வைக்கிறதோ அதை அஜித் கண்டுகொள்ளமாட்டார். அதை தவிர்த்து மற்ற துறையில் எல்லாம் கவனம் செலுத்துவார்" என்றார். அவரது இந்தப் பேட்டியை பார்த்த ஏகே ரசிகர்கள், அஜித்துடன் அவருக்கு ஏற்கனவே கருத்து வேறுபாடு இருந்தது. அதையெல்லாம் மனதில் வைத்துதான் அவர் இப்படி பேசுகிறார் என கமெண்ட்ஸ் செய்து வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X