twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தியேட்டர்கள் திறந்தாலும் விஜய்யின் 'மாஸ்டர்' ரிலீஸை ஒத்தி வைக்கவேண்டும்..தயாரிப்பாளர் வேண்டுகோள்!

    By
    |

    சென்னை: தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும் விஜய்யின் 'மாஸ்டர்' பட வெளியீட்டை ஒத்திவைக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் கேயார் முதலமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம், மாஸ்டர். விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார்.

    மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ் உட்பட பலர் நடிக்கின்றனர். சேவியர் பிரிட்டோவின் எக்ஸ்பி பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசை அமைத்துள்ளார். லாக்டவுன் காரணமாக இந்தப் படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

    இம்மாத இறுதிக்குள் நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம்? தீயாய் பரவும் தகவல்!இம்மாத இறுதிக்குள் நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம்? தீயாய் பரவும் தகவல்!

    தியேட்டர்கள்

    தியேட்டர்கள்

    இந்நிலையில் தயாரிப்பாளர் சங்கத்தின் முன்னாள் தலைவரும் இயக்குநருமான கேயார், தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும் 'மாஸ்டர்' வெளியீட்டை ஒத்திவைக்க வேண்டும் என்று முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கூறியிருப்பதாவது: 75 நாட்களுக்கும் மேலாக மூடிக்கிடக்கும் திரையரங்குகளை திறக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துக் கொண்டிருக்கும் நிலையில், முதல்படமாக 'மாஸ்டரை திரையிட வேண்டும் என்று திரையரங்கு உரிமையாளர்கள் திட்டமிட்டிருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன்.

     கொரோனோ

    கொரோனோ

    பெரிய நடிகர்களின் படங்கள் திரைக்கு வந்தால்தான் திரையரங்குகளில் கூட்டம் வரும் என்று அவர்கள் நினைப்பதில் தவறு இல்லை. ஆனால் கொரோனோவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வரும் இந்தச் சூழ்நிலையில் முதல் படமாக, 'மாஸ்டர்' திரையிடப்பட்டால் விஜய்க்கு மட்டுமல்ல, அவர் ரசிகர்களுக்கும் அது கெட்ட பெயரை ஏற்படுத்திவிடும்.

     சாதாரண விஷயமல்ல

    சாதாரண விஷயமல்ல

    சாதாரண சலூன் கடைக்கு செல்வதற்கே ஆதார் கார்டு உட்பட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துக் கொண்டிருக்கும் நிலையில், ஆயிரக்கணக்கான மக்கள் கூடும் திரையரங்குகளுக்கு கட்டுப்பாடுகளை விதிப்பதும் அதை அமல்படுத்துவதும் சாதாரண விஷயமல்ல. டிக்கெட் கவுண்டரில் கூடுவது, இடைவேளையில் கேன்டீன்களில் முண்டியடிப்பது என்று எங்கும் ரசிகர்களை கட்டுப்படுத்த முடியாமல் போய்விடும். வந்தவர்களில் ஒருவருக்கோ இருவருக்கோ நோய்த்தொற்று இருந்தால் கூட அது மற்றவர்களுக்கும் பரவிவிடும் பேராபத்து இருக்கிறது.

     அரபு நாடுகள்

    அரபு நாடுகள்

    அதுமட்டுமல்லாமல் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான விஜய் நடிக்கும் படங்கள் தமிழ்நாடு மட்டுமல்லாமல் உலகம் முழுவதுமே வசூலில் சாதனை செய்து வருகின்றன. மாஸ்டர் படம் வெளிநாட்டு உரிமை மட்டும் சுமார் 30 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது. தற்போது அரபு நாடுகளில் மட்டுமே திரையரங்குகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

     அனுமதிக்காது

    அனுமதிக்காது

    அதிலும் 30 சதவீத பார்வையாளர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. உலகம் முழுவதும் வசூலை குவிக்கக்கூடிய ஒரு படத்திற்கு வெளிநாட்டில் வசூலை எடுக்க முடியாத நிலை ஏற்படும். அதேபோல இந்தியாவிலும் திரையரங்குகள் திறக்கப்பட்டவுடன் நிச்சயமாக 100 சதவீதம் பார்வையாளர்களை அரசாங்கம் அனுமதிக்காது.

     சிந்தித்து முடிவு

    சிந்தித்து முடிவு

    அப்படி இருக்கும்போது எல்லா வகையிலும் இந்தப் படத்திற்கான வசூல் பாதிக்கப்படும். அது மற்ற ஹீரோக்களின் வியாபாரத்தையும் பாதிக்கும். எனவே பல கோணங்களில் சிந்தித்து முடிவு எடுக்க வேண்டும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் தமிழக அரசு தியேட்டர்களை திறக்க அனுமதிக்கும் போது, 150 திரைகளுக்கு மிகாமல் ரிலீஸ் செய்யும் படங்களை மட்டுமே திரையிட அனுமதிக்க வேண்டும். மூன்று மாதங்களுக்கு இந்த திட்டம் அமல்படுத்தப்பட வேண்டும்.

     கேளிக்கை வரி

    கேளிக்கை வரி

    இதன் மூலம் அதிக படங்கள் வெளிவருவதற்கு வாய்ப்புகள் உருவாகும். அத்துடன் திரையரங்கில் ரசிகர்கள் கூட்டம் கட்டுப்படுத்தப்படுவதால் தயாரிப்பாளருக்கு ஏற்படும் வருமான இழப்பை சரி செய்ய மத்திய மாநில அரசுகள் விதிக்கும் 26 சதவீத ஜிஎஸ்டி மற்றும் கேளிக்கை வரியை முழுமையாக மூன்று மாதங்களுக்கு ரத்து செய்து, கஷ்டத்தில் நஷ்டத்திலும் இருக்கும் தமிழ் திரையுலகைக் காப்பாற்ற வேண்டும்.

     அமல்படுத்த முடியும்

    அமல்படுத்த முடியும்

    இவ்வாறு செய்வதன் மூலம் சிறிய படங்களுக்கு வரப்போகும் கூட்டத்தைக் கட்டுப்படுத்துவது திரையரங்குகளுக்கு எளிதாக இருக்கும். ரசிகர்களுக்கும் விதிமுறைகளை பின்பற்றுவது பழக்கப்பட்டு விடும். அதன்பிறகு பெரிய படங்கள் ரிலீஸ் செய்யப்படும்போது அதிக ரசிகர்கள் வந்தாலும் தியேட்டர்காரர்களால் மத்திய மாநில அரசுகள் விதிக்கும் கட்டுப்பாடுகளை முறைப்படி அமல்படுத்த முடியும்.

    Recommended Video

    Actress Vaibhavi Shandilya | சூர்யா-ஜோதிகா காதல் எனக்கு ரொம்ப புடிக்கும் |V-Connect |Filmibeat Tamil
     தள்ளிப் போடுவது

    தள்ளிப் போடுவது

    ஒருவேளை தமிழக அரசு தியேட்டர்களில் குளிர்சாதன வசதியை பயன்படுத்த கூடாது என்று நிபந்தனை விதிக்கும் சூழ்நிலை ஏற்பட்டால், அதைவிட தியேட்டர்கள் திறப்பதை தள்ளிப் போடுவதே சாலச்சிறந்தது. எனவே தமிழக முதல்வர், திரையரங்குகள் திறப்பது தொடர்பான அறிவிப்பை வெளியிடும் போது, பொருளாதார சிக்கல்களை காட்டிலும் பொதுமக்களின் உயிர் பாதுகாப்பை கருத்தில் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    English summary
    Producer Keyar statement about Actor Vijay's 'Master' release
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X