திடீர் மாரடைப்பு.. 'திருடா திருடி', 'மன்மதன்' படத் தயாரிப்பாளர் மரணம்.. திரையுலகம் அதிர்ச்சி!

By

சென்னை: சிம்பு, தனுஷ் நடித்த படங்களை தயாரித்த பிரபல தயாரிப்பாளர் மரணமடைந்திருப்பது திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த கொரோனா காலகட்டத்தில் சினிமா துறையில் தொடர்ந்து பலர் உயிரிழந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாகவும் சினிமா பிரபலங்கள் பலர் உயிரிழந்து வருகின்றனர்.

எஸ்.பி.பாலசுப்ரமணியம்

எஸ்.பி.பாலசுப்ரமணியம்

கடந்த சில நாட்களுக்கு முன் குணசித்திர நடிகர் புளோரன்ட் பெரேரா, கொரோனா வைரஸுக்கு உயிரிழந்திருந்தார். இவர் கயல், தொடரி உள்பட பல படங்களில் நடித்தவர். இந்நிலையில், கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அட்மிட் ஆன, பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், 51 நாள் சிகிச்சைக்குப் பின் உயிரிழந்தார்.

கிருஷ்ணகாந்த்

கிருஷ்ணகாந்த்

இது திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. அந்த சோகம் மறைவதற்குள், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் கிருஷ்ணகாந்த், மாரடைப்பு காரணமாக நேற்று மரணமடைந்துள்ளார். இவர் தனுஷ், சாயாசிங் நடித்த திருடா திருடி படத்தைத் தயாரித்தவர். சுப்ரமணிய சிவா இயக்கிய இந்த படம் மாஸ் ஹிட்டானது.

சிம்புவின் மன்மதன்

சிம்புவின் மன்மதன்

சிம்பு, ஜோதிகா நடித்த மன்மதன், பிரபுசாலமன் இயக்கத்தில் விக்ரம் நடித்த கிங், துஷ்யந்த் நடித்த மச்சி, தனுஷின் புதுக்கோட்டையிலிருந்து சரவணன், விவேக் நடித்த சொல்லி அடிப்பேன் ஆகிய படங்களையும் தயாரித்துள்ளார்.

மருத்துவமனை

மருத்துவமனை

ஆரம்பத்தில் லட்சுமி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தில் பல படங்களுக்கு மானேஜராக பணியாற்றியவர் கிருஷ்ணகாந்த். இவருக்கு நேற்று திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அதற்கு முன்பே அவர் உயிரிழந்தார். அவருக்கு வயது 52.

திரையுலகம் அதிர்ச்சி

திரையுலகம் அதிர்ச்சி

இதையடுத்து திரையுலகம் அதிர்ச்சி அடைந்துள்ளது. அவர் மறைவுக்கு ஏராளமான திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மறைந்த கிருஷ்ணகாந்துக்கு லட்சுமி என்ற மனைவியும் சந்திரகாந்த், உதயகாந்த் என்ற இரண்டு மகன்களும் உள்ளனர். அவர் இறுதிச்சடங்கு இன்று மாலை ஏவி.எம் ஸ்டூடியோ பின்புறம் உள்ள இடுகாட்டில் நடக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X