பிரம்மாண்டமாக.. பான் இந்திய படமாக ரெடியாகுது ஜென்டில்மேன் 2.. தயாரிப்பாளர் அதிரடி அறிவிப்பு!

சென்னை: ஷங்கர் இயக்கத்தில் அர்ஜுன் நடிப்பில் வெளியான ஜென்டில்மேன் படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது.

சுமார் 27 வருடங்களுக்கு பிறகு அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை பிரம்மாண்டமாக உருவாக்க, அந்த படத்தின் தயாரிப்பாளர் கே.டி. குஞ்சுமோன் முடிவு செய்துள்ளார்.

ஜென்டில்மேன் எனும் புதிய தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்கி உள்ள அவர், தற்போது பான் இந்திய படமாக ஜென்டில்மேன் 2 படம் உருவாகப் போகும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

ஷங்கரின் முதல் படம்

ஷங்கரின் முதல் படம்

பிரம்மாண்ட இயக்குநர் என பெயர் எடுத்துள்ள ஷங்கரின் முதல் பிரம்மண்ட படம் ஜென்டில்மேன் தான். ராபின் ஹுட் கதையை கல்வியை மையமாக வைத்து, நடிகர் அர்ஜுன், மதுபாலா, கவுண்டமணி, செந்தில் நடிப்பில் 1993ம் ஆண்டு வெளியான படம் ஜென்டில்மேன். ஏ.ஆர். ரஹ்மான் இசையில் பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தன.

175 நாட்கள்

175 நாட்கள்

ஷங்கர் இயக்கத்தில் அர்ஜுன் நடிப்பில் ஆக்‌ஷன் திரில்லர் படமாக வெளியான ஜென்டில்மேன் படம் அப்பவே 175 நாட்கள் திரையில் வெற்றிகரமாக ஓடி சாதனை படைத்தது. மேலும், சிறந்த இயக்குநர், சிறந்த இசையமைப்பாளர், சிறந்த நடிகர் உள்ளிட்ட 4 மாநில விருதுகளையும் அந்த படம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

தயாரிப்பு

தயாரிப்பு

பிரபல மலையாள தயாரிப்பாளரான கே.டி. குஞ்சுமோன், வசந்தகால பறவை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக அறிமுகமானார். அதன் பிறகு சரத்குமாரின் சூரியன், அர்ஜுனின் ஜென்டில்மேன், பிரபுதேவாவின் காதலன், காதல் தேசம், ரட்சகன் மற்றும் என்றென்றும் காதல் உள்ளிட்ட ஏகப்பட்ட நல்ல நல்ல படங்களை தயாரித்துள்ளார்.

5 மொழிகளில்

5 மொழிகளில்

இந்நிலையில், தற்போது மீண்டும் தயாரிப்பு பணியை தொடங்கியுள்ள குஞ்சுமோன், ஜென்டில்மேன் பிலிம் இன்டர்நேஷனல் எனும் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி உள்ளார். மேலும், ஜென்டில்மேன் 2 படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் பான் இந்திய மொழிப் படமாக பிரம்மாண்டமாக உருவாக்க உள்ளார்.

ஹீரோ, இயக்குநர்

ஹீரோ, இயக்குநர்

கே.டி. குஞ்சுமோன் தயாரிப்பில் ஜென்டில்மேன் 2 படம் உருவாகவுள்ள நிலையில், இந்த படத்தில் ஹீரோவாக நடிக்கப் போவது யார்? இயக்கப் போவது யார் என்ற கேள்விகள் எழுந்துள்ளன. இந்தியன் 2 படத்தை இயக்கி வரும் ஷங்கர் இந்த படத்தை இயக்குவாரா? அர்ஜுன் மீண்டும் இந்த படத்தில் நடிப்பாரா என்ற எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளன. விரைவில் அது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X