KT Kunjumon: பிரபல தயாரிப்பாளரை கடுப்பாக்கிய சரத்குமார்.. என்ன விஷயம் தெரியுமா?

சென்னை: பிரபல தயாரிப்பாளர் கேடி குஞ்சுமோன் தயாரிப்பில் அடுத்ததாக உருவாகவுள்ள படம் ஜென்டில்மேன் 2.

கடந்த 1993ம் ஆண்டில் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்த ஜென்டில்மேன் படத்தின் இரண்டாவது பாகத்தைதான் தற்போது இத்தனை ஆண்டுகள் கழித்து தயாரிக்கவுள்ளார் குஞ்சுமோன்.

இந்தப் படத்தின் பூஜை கடந்த இரு தினங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் பல உருக்கமான விஷயங்களை குஞ்சுமோன் பகிர்ந்துக் கொண்டார்.

Producer KT Kunjumon upset on popular heros decision

தயாரிப்பாளர் கேடி குஞ்சுமோனை கடுப்பேற்றிய சரத்குமார்: நடிகர் அர்ஜூன், மதுபாலா, கவுண்டமணி, செந்தில், சரண்ராஜ் உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த 1993ம் ஆண்டில் வெளியானது ஜென்டில்மேன். இந்தப் படம் இயக்குநர் ஷங்கருக்கு சிறப்பான என்ட்ரியை கொடுத்தது. எப்போதும் புதுமுகங்களுக்கு சிறப்பான வாய்ப்புகளை கொடுப்பவர் கேடி குஞ்சுமோன். இவர் இந்தப் படத்தின்மூலம் அதிகமான வாய்ப்புகள் இல்லாமல் இருந்த அர்ஜூனுக்கும் சிறப்பான கேரியரை ஏற்படுத்திக் கொடுத்தார். இந்தப் படத்தில் ஏஆர் ரஹ்மான் இசையமைத்திருந்தார்.

ஏஆர் ரஹ்மானுக்கும் இந்தப் படம் சிறப்பாக அமைந்தது. அப்போதுதான் வளர்ந்துவந்த அவருக்கு இந்தப் படம் சிறப்பான இசையமைப்பாளர் என்ற பெயரை பெற்றுத் தந்தது. இவ்வாறு அர்ஜூன், ஷங்கர், ஏஆர் ரஹ்மான் என அனைவருக்கும் சிறப்பான கேரியரை ஜென்டில்மேன் படம் ஏற்படுத்திக் கொடுத்தது. மிகவும் பிரம்மாண்டமாக உருவான இந்தப் படம் வசூலிலும் சாதனை படைத்தது.

இந்நிலையில் தற்போது ஏறக்குறைய 30 ஆண்டுகள் கழித்து ஜென்டில்மேன் படத்தின் இரண்டாவது பார்ட்டை தற்போது தயாரிக்கவுள்ளார் கேடி குஞ்சுமோன். இந்தப் படத்தை ஏ கோகுல் கிருஷ்ணா இயக்கவுள்ளார். படத்தில் சேத்தன் சீனு, நயன்தாரா சக்ரவர்த்தி, சுதா ராணி, பிரியா லால், சுமன், ஸ்ரீரஞ்சனி, சித்தாரா, காளி வெங்கட் உள்ளிட்ட நடிகர்கள் நடிக்கிறார்கள். படத்தில் ஆஸ்கர் விருது பெற்ற எம்எம் கீரவாணி இசையமைக்கவுள்ளார். படத்தின் பூஜை கடந்த இரு தினங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியின்போது கீரவாணிக்கு பாராட்டு விழாவும் நடத்தப்பட்டது. தயாரிப்பாளர் ஆர்பி சவுத்ரி, இயக்குநர்கள் ஆர்வி உதயகுமார், பி வாசு உள்ளிட்டவர்கள் கலந்துக் கொண்டர். நிகழ்ச்சியில் தன்னால் அறிமுகம் செய்யப்பட்டு வாழ்வு பெற்ற இயக்குநர் ஷங்கர், இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான், அர்ஜூன் உள்ளிட்டவர்கள் கலந்துக் கொள்வார்கள் என்று கேடி குஞ்சுமோன் எதிர்பார்த்த நிலையில், அவர்கள் யாரும் பங்கேற்காதது ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் இந்தப் படத்தின் முக்கியமான கேமியோ ரோலில் சரத்குமார் நடிக்கவுள்ளதாக முன்னதாக தகவல்கள் வெளியாகின. முன்னதாக வில்லனாக நடித்துவந்த சரத்குமாருக்கு தனது தயாரிப்பில் வெளியான சூரியன் படத்தின்மூலம் ஹீரோ அந்தஸ்தை பெற்றுத் தந்தவர் கேடி குஞ்சுமோன். இந்நிலையில் தற்போது இந்தப்படத்தில் கேமியோ ரோலில் தான் நடிக்க மாட்டேன் என்று சரத்குமார் மறுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் அவர் லீட் ரோலில் நடித்து வெளியான போர்த்தொழில் படம் சிறப்பாக அமைந்த நிலையில், இனி சிறிய வேடங்களில் நடிக்க மாட்டேன் என்று சரத்குமார் கூறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால் கேடி குஞ்சுமோன் மிகுந்த கடுப்பில் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனிடையே ஜென்டில்மேன் 2 படத்தின் பூஜையில் பேசிய கேடி குஞ்சுமோன், தன்னுடைய பணிபுரிந்தவர்கள் எல்லாம் தற்போது பிசியாக உள்ளதாகவும் அதனால் புதியவர்களை வைத்து படத்தை இயக்கி வருவதாகவும் அதிகமாக சம்பாதித்ததாகவும் அதிகமாக இழந்து கடன்காரனாக மாறியதாகவும் பேசினார். அவரது இந்தப் பேச்சு அனைவரையும் நெகிழ்ச்சிக்குள்ளாக்கியது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X