லியோ படம் பார்த்த ரஜினி என்ன சொன்னார் தெரியுமா? மனம் திறந்த லலித்!
சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ படத்தை பார்த்த ரஜினிகாந்த் வியந்து பாராட்டினார் என்று தயாரிப்பாளர் லலித்குமார் தெரிவித்துள்ளார்.
செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் லியோ.

இப்படம் வெளியான முதல் நாளிலேயே ரூ.148.5 கோடி வசூலித்துள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
லலித்குமார் பேட்டி: இந்நிலையில் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்த தயாரிப்பாளர் லலித்குமார், லியோ படத்தை பார்த்த ரஜினிகாந்த், படம் ரொம்ப நல்லா வந்து இருக்கு ப்ரோடக்ஷன் வால்யூ ரொம்ப சூப்பரா வந்து இருக்கு என்று போன் பண்ணி சொல்கிறார் என்றால், அது எனக்கு பெருமை தான். தயாரிப்பு நன்றாக இருக்கும் என்பதுதான் அனைவர் மனதிலும் பதியும் அதுவும் நல்லது தானே. இதே போல படம் ஆரம்பிக்கும் போது பட்ஜெட் என்ன என்று தீர்மானிக்கவில்லை, ஆனால், படத்தின் ஷூட்டிங் நடக்கும் போது என்னால் முடிந்த வரை சில செலவுகளை குறைத்தேன்.
விஜய்கே தெரியாது: மேலும், மற்ற மாநிலத்தில் லியோ படம் 4 மணிக்கு வெளியாகாததால், படத்தைப் பார்க்க தமிழ்நாட்டிலிருந்து 2 லட்சம் பேர் வெளிமாநிலங்களுக்கு சென்றனர். இதை தவிர்ப்பதற்காகத்தான் நீதிமன்றம் சென்றேன். நான் நீதிமன்றம் போனது விஜய்கே தெரியாது. செய்தியை பார்த்துவிட்டுத்தான் தொலைபேசியில் கேட்டு தெரிந்து கொண்டார். அவரும் லியோ படத்தின் வெற்றியால் மகிழ்ச்சியில் இருக்கிறார்.
கிப்ட் வேண்டாம்: தொடர்ந்து பேசிய தயாரிப்பாளர் லலித்குமார், மாஸ்டர் படம் கொரோனா காலத்தில் வெளியான போது ரொம்ப பதற்றமாக இருந்தது. அப்போது, விஜய் நான் பாத்துகிறேன் என்று நம்பிக்கை கொடுத்தார். ஆனால், படம் எதிர்பார்த்ததை விட வெற்றி பெற்றது. மாஸ்டர் வெற்றிக்குப் பிறகு விஜய்க்கு கார் ஒன்றை பரிசளிக்க விரும்பினேன். இதனை அவரிடம் சொன்னபோது, எதுக்கு பரிசு அதான் சம்பளம் கொடுத்துட்டல அது போதும் என்றார். அதே போல இப்பவும் கேட்பேன் சார் எடுக்கும் முடிவு தான் என்று தயாரிப்பாளர் லலித்குமார் பேட்டியில் பல விஷயங்களை பேசி உள்ளார்.'


Click it and Unblock the Notifications











