Leo Lalit Kumar - என்னது லியோ வசூலில் பொய் சொன்னேனா?.. தயாரிப்பாளர் லலித்குமார் தரமான பதிலடி

சென்னை: Leo Collection (லியோ வசூல்) லியோ படத்தின் வசூலில் தயாரிப்பாளர் லலித்குமார் பொய் சொல்கிறார் என கூறப்பட்டதற்கு அவர் தற்போது பதிலடி கொடுத்திருக்கிறார்.

Producer Lalit Kumar Talks about Leo Collection Reports

விஜய் நடிப்பில் கடந்த 19ஆம் தேதி லியோ படம் வெளியானது. விஜய் ரசிகர்களை படம் திருப்திப்படுத்தினாலும் பொதுவான ரசிகர்களிடம் போதுமான வரவேற்பை பெறவில்லை. குறிப்பாக ரஜினிக்கு போட்டி விஜய்தான் என அவரது ரசிகர்கள் தொடர்ந்து கூறிவந்ததால் இந்தப் படத்தின் ரிசல்ட்டை ரொம்பவே எதிர்பார்த்திருந்தார்கள் விஜய்யும், விஜய்யின் ரசிகர்களும்.

வசூலில் நல்ல ரெஸ்பான்ஸ்: படத்துக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தாலும் வசூலில் பெரும் ரெஸ்பான்ஸை அள்ளியிருக்கிறது. முதல் வாரத்தின் முடிவில் 460 கோடி ரூபாயை லியோ வசூலித்துவிட்டதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. இது ஜெயிலர் படத்தின் முதல் வார வசூலைவிட அதிகம் என கூறப்படுகிறது.

எல்லாம் ஃபேக்?: மேலும் கண்டிப்பாக லியோ படம் ஜெயிலர் படத்தின் வசூல் சாதனையை அசால்ட்டாக முறியடித்துவிடும் என்று கூறிவருகிறார்கள். ஆனால் ரஜினி ரசிகர்களோ லியோ படக்குழு ஃபேக்காக ஒரு கலெக்‌ஷன் ரிப்போர்ட்டை சொல்கிறது என சமூக வலைதளங்களில் குரல்கள் பலமாக ஒலிக்க ஆரம்பித்திருக்கின்றன.

திருப்பூர் சுப்ரமணியம்: அதேபோல் தமிழ்நாடு திரையரங்க சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியன் அளித்த ஒரு பேட்டியில், லியோ படத்தை உருவாக்குவதற்கு லலித்குமார் என்னிடம்தான் வட்டிக்கு பணம் வாங்கினார். காஷ்மீரில் இருந்தபடி லியோ பட ஷூட்டிங்கிற்காக இரண்டரை கோடி ரூபாய் பணம் வேண்டுமென கேட்டார். அதனையடுத்து 24 சதவீத வட்டிக்கு பணம் கொடுத்தேன் என்றார். மேலும் லியோ படத்தால் எந்த லாபமும் இல்லை என்றும் ஒரே போடாக போட்டார்.

பொய் சொல்லவில்லை: இந்நிலையில் லியோ கலெக்‌ஷன் ரிப்போர்ட் ஃபேக் என்று எழுந்திருக்கும் கருத்துக்கு தயாரிப்பாளர் லலித்குமார் தற்போது பதிலடி கொடுத்திருக்கிறார். அவர் கொடுத்த பேட்டி ஒன்றில், "லியோ படத்தின் வசூலில் பொய் சொல்ல வேண்டுமென்ற எந்த அவசியமும் இல்லை. உண்மையான வசூலைத்தான் நான் அறிவித்திருக்கிறேன்.

Producer Lalit Kumar Talks about Leo Collection Reports

ஐமேக்ஸில் வசூல்: தமிழ்நாட்டி ஐமேக்ஸில் மூன்று திரையரங்குகள்தான் இருக்கின்றன. ஆனால் உலகம் முழுவதும் அதிக எண்ணிக்கையில் இருக்கின்றன. அவைகளை தமிழ் தயாரிப்பாளர்கள் டார்கெட் செய்ய வேண்டும். அவர்களுக்கு 15 நாட்களுக்கு முன்னதாகவே கன்டென்ட்டை கொடுத்துவிட வேண்டும். அப்போதுதா சரியான நேரத்தில் ரிலீஸ் செய்ய முடியும். லியோ திரைப்படம் ஐமேக்ஸில் மட்டும் 40 கோடி ரூபாய் வசூலித்திருக்கிறது. அது மிகப்பெரிய தொகை" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X