Vijay: ஏன்டா சூட்டிங் பண்ணுவீங்களா.. இல்ல பேக்கப்பா.. லியோ டீமிடம் விஜய் கேட்ட கேள்வி!
சென்னை: நடிகர் விஜய், த்ரிஷா, கௌதம் மேனன், சஞ்சய் தத், மிஷ்கின், அர்ஜூன், பிரியா ஆனந்த் என மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளத்தை இணைத்து லியோ படத்தை இயக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ்.
விஜய் -லோகேஷ் கூட்டணியில் மாஸ்டர் படத்தை தொடர்ந்து லியோ இரண்டாவதாக உருவாகி வருகிறது. படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே ஏற்படுத்தியுள்ளது.
விஜய் முதல்முறையாக கேங்ஸ்டர் வேடத்தில் நடித்துவரும் லியோ படம் ரசிகர்களுக்கு மிகப்பெரிய என்டர்டெயின்மெண்டை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

லியோ படத்தின் காஷ்மீர் ஷெட்யூல் குறித்து பேசிய லலித்குமார்: நடிகர்கள் விஜய், த்ரிஷா, கௌதம் மேனன், சஞ்சய் தத், மிஷ்கின், அர்ஜூன், பிரியா ஆனந்த் என மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளம் இணைந்துள்ள படம் லியோ. இந்தப் படத்தின் சூட்டிங் காஷ்மீர், சென்னை என அடுத்தடுத்து நடைபெற்றுவரும் சூழலில், தற்போது படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தப் படத்தின் பிரம்மாண்ட பாடலின் சூட்டிங் சமீபத்தில் நடந்து முடிந்துள்ளது. இந்தப் பாடல் வரும் 22ம் தேதி விஜய் பிறந்தநாளையொட்டி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக லியோ படத்தின் அறிவிப்பு டைட்டிலுடன் வெளியான நிலையில், உடனடியாக படக்குழுவினர் காஷ்மீருக்கு சூட்டிங்கிற்காக கிளம்பினர். அவர்கள் தனி விமானத்தில் சென்ற வீடியோக்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில், காஷ்மீரில் 52 நாட்கள் தொடர்ந்து சூட்டிங் நடத்தப்பட்டுள்ளது. 20 டிகிரி செல்சியஸ் குளிரில் அங்கு சூட்டிங் நடத்தப்பட்டதாக படக்குழுவினர் தெரிவித்தனர். அவர்கள் அங்கு சூட்டிங்கிற்காக பட்ட கஷ்டங்களையும் வீடியோவாக படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர்.
படம் வரும் அக்டோபர் 19ம் தேதி ரிலீசாகவுள்ள நிலையில், இந்த மாதத்திற்குள் சூட்டிங்கை நிறைவு செய்து, போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை முடுக்கிவிடவும் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இந்தப் படத்தில் கேங்ஸ்டர் வேடத்தில் விஜய் நடித்துள்ள நிலையில், அவரை இந்த அதிரடி கெட்டப்பில் பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர். முன்னதாக கமலின் விக்ரம் படத்தை சிறப்பான வகையில் கொடுத்துள்ளார் லோகேஷ். அதே போன்றதொரு மேக்கிங்கை லியோ படத்திலும் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
அவர்களின் எதிர்பார்ப்பை லியோ படம் பூர்த்தி செய்து, மிகப்பெரிய என்டர்டெயின்மெண்டை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார், படம் குறித்தும், விஜய் குறித்தும் காஷ்மீர் ஷெட்யூல் குறித்தும் பல விஷயங்களை தனது சமீபத்திய பேட்டியில் பகிர்ந்துக் கொண்டுள்ளார். காஷ்மீரில் 20 டிகிரி செல்சியசில் சூட்டிங் நடத்தப்பட்ட நிலையில், அனைவரும் ஸ்வெட்டர்களை அணிந்திருந்ததாகவும் ஆனால் விஜய் மட்டும் வெறும் டி-ஷர்ட்டை மட்டும் அணிந்து நடித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
சண்டை காட்சிகளிலும் வெறும டி-ஷர்ட்டை மட்டுமே அணிந்துக் கொண்டு, பனிக்கட்டியிலும் உருள வேண்டிய சூழல் அவருக்கு இருந்ததாகவும் ஆனால் டெடிகேஷனுடன் இதை அவர் எதிர்கொண்டதாகவும் லலித்குமார் கூறியுள்ளார். காஷ்மீரில் இறங்கியவுடன், எதிரில் இருந்த சாலைகூட கண்ணுக்கு தெரியாத நிலையில், அனைவரையும் பார்த்து, ஏண்டா, சூட்டிங் பண்ணுவீங்களா, இல்ல பேக்கப் பண்ணிட்டு போய்டுவோமா என்று விஜய் கேட்டதாகவும் லலித்குமார் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து காரில் ஹோட்டலுக்கு தாங்கள் பயணம் செய்த நிலையில், பனிக்கட்டியால் இடையில் சாலையில் பிளாக் ஏற்பட்டதாகவும் இதையடுத்து தங்களது காரை தள்ள விஜய்யும் உதவி செய்ததாகவும் இதை தொடர்ந்து தங்களது பயணம் சிறப்பாக தொடர்ந்ததாகவும் லலித்குமார் மேலும் குறிப்பிட்டுள்ளார். இந்தப் படம் வரும் அக்டோபர் 19ம் தேதி ரிலீசாகவுள்ள நிலையில் விரைவில் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.


Click it and Unblock the Notifications











