Leo Update - லியோ இடைவேளை காட்சி கூஸ்பம்ப்ஸ்தான்.. தயாரிப்பாளர் சொன்ன அப்டேட்

சென்னை: Leo Update (லியோ அப்டேட்) லியோ படத்தின் இடைவேளை காட்சி கூஸ்பம்பஸ் ஏற்படுத்தும் என்று தயாரிப்பாளர் லலித்குமார் தெரிவித்திருக்கிறார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்திருக்கிறார் விஜய்.அடுத்த சூப்பர் ஸ்டார் ரேஸில் அவரை அவரது ரசிகர்கள் நிறுத்தியிருப்பதாலும், பீஸ்ட், வாரிசு படங்களின் தோல்வியாலும் லியோ படத்தின் வெற்றி அவருக்கு இப்போது அவசியப்படுகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்குவதால் நிச்சயம் இந்தப் படம் வெற்றி பெறும் என விஜய் ரசிகர்கள் நம்புகின்றனர்.

Producer Lalith Kumar Opens up about Leo Movie Interval Scene

லியோ ரிலீஸ்: படமானது அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸாகிறது. ஷூட்டிங் சமீபத்தில்தான் முடிவடைந்ததாக லோகேஷ் கனகராஜ் அறிவித்தார். மேலும் வெளிநாட்டில் ஓய்வில் இருக்கும் விஜய் விரைவில் இந்தியாவுக்கு திரும்பி லியோ படத்தில் தன்னுடைய போர்ஷனுக்கான டப்பிங்கை முடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா அடுத்த மாதம் நடக்கலாம் என தெரிகிறது.

ஆடியோ ரிலீஸ் எங்கே?: திருச்சி, மதுரை, கோயம்புத்தூர் ஆகிய ஊர்களில் ஏதேனும் ஒன்றில் ஆடியோ வெளியீட்டு விழா நடக்கலாம் என கூறப்பட்டது. ஆனால் சில காரணங்களால் தற்போது மலேசியாவில் ஆடியோ வெளியீட்டு விழா நடப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் என்று தகவல் வெளியானது. ஆனால் வெளிநாட்டில் நடத்தினால் தமிழ் ரசிகர்களிடம் நெகட்டிவ் தாட் எழுந்துவிடும் என படக்குழு எண்ணுவதாகவும் அதன் காரணமாக தமிழ்நாட்டில் நடத்தும் முடிவுக்கு படக்குழு இப்போது வந்திருப்பதாக கூறப்படுகிறது.

லியோ க்ளிம்ப்ஸ்: லியோ படத்தில் பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது. சஞ்சய் தத்தான் படத்தில் முக்கியமான வில்லன் என்றும் கூறப்படுகிறது. இந்தச் சூழலில் அவரது பிறந்தநாளை முன்னிட்டு கடந்த மாதம் அவர் தொடர்பான க்ளிம்ப்ஸ் காட்சிகள் வெளியிடப்பட்டன. அதில் படுமாஸாக தோன்றினார் சஞ்சய்.

Producer Lalith Kumar Opens up about Leo Movie Interval Scene

மேலும் அவர் ஆண்டனி தாஸ் என்ற கதாபாத்திரத்தை படத்தில் ஏற்றிருப்பது க்ளிம்ப்ஸ் மூலம் உறுதியாகியிருக்கிறது. அதேபோல் கடந்த 15ஆம் தேதி அர்ஜுன் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு தொடர்பான க்ளிம்ப்ஸும் வெளியிடப்பட்டது. ஹரோல்டு தாஸ் என்ற கதாபாத்திரத்தை அர்ஜுன் ஏற்றிருக்கிறார்.

இடைவேளை காட்சி எப்படி இருக்கும்: இந்நிலையி படத்தின் இடைவேளை காட்சி குறித்து தயாரிப்பாளர் லலித்குமார் பேசியிருக்கிறார். சமீபத்தில் பேசிய அவர், "விஜய்யின் நடிப்பு கரியரிலேயே லியோ படம் பெஸ்ட்டாக இருக்கும். அதேபோல் இடைவேளை காட்சி அனைவருக்கும் கூஸ்பம்ப்ஸை ஏற்படுத்தும். குறிப்பாக இடைவேளை காட்சிக்கு முந்தைய 8 நிமிடங்கள் வேறு லெவலில் இருக்கும்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X