Leo :லியோ படத்தோட பிசினஸ் தானா நடக்குது.. தயாரிப்பாளர் சொன்ன சூப்பர் தகவல்!

சென்னை : விஜய்யின் லியோ படத்தின் சூட்டிங் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. சென்னையில் தற்போது சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

விஜய்யுடன் த்ரிஷா, கௌதம் மேனன், மிஷ்கின் உள்ளிட்டவர்கள் இணைந்து நடித்துவரும் லியோ படம் கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் மாஸ்டர் படத்திற்கு பிறகு லோகேஷ் மற்றும் விஜய் கூட்டணி இணைந்துள்ளது படத்திற்கான எதிர்பார்ப்பை வெகுவாக அதிகரித்துள்ளது.

Producer Lalith kumar opens up about the business of Vijays Leo movie

லியோ படத்தின் வியாபாரம் குறித்து பேசிய லலித்குமார் :

நடிகர்கள் விஜய், த்ரிஷா, மிஷ்கின், கௌதம் மேனன், சஞ்சய் தத், அர்ஜுன், பிரியா ஆனந்த் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகி வருகிறது லியோ படம். இந்தப் படத்தின் டைட்டில் டீசர் மற்றும் போஸ்டர்கள், சூட்டிங் ஸ்பாட் வீடியோக்கள் உள்ளிட்டவை அவ்வப்போது வெளியாகி ரசிகர்களை தொடர்ந்து உற்சாகத்திற்கு உள்ளாக்கி வருகிறது. காஷ்மீரில் கடந்த பிப்ரவரி மாதத்தில் துவங்கப்பட்ட சூட்டிங், 50 நாட்களை கடந்து நடந்து முடிந்த நிலையில், தற்போது சென்னையில் பிரம்மாண்ட பாடல் காட்சிக்கான ஒத்திகை நடைபெற்று வருகிறது.

விஜய் இந்தப் படத்தில் கேங்ஸ்டராக நடித்துள்ளதாகவும் அவருடன் 6 வில்லன்கள் மோதவுள்ளதாகவும் முன்னதாக தகவல்கள் வெளியானது. இதனால் படத்திற்கான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. மேலும் 14 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் மற்றும் த்ரிஷா இந்தப் படத்தில் மீண்டும் ஜோடி சேர்ந்துள்ளதும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்தப் படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்டை லோகேஷ் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் எந்த அப்டேட்டையும் வெளியிடாமல் உள்ளார்.

படம் அக்டோபர் மாதத்தில் ரிலீசாக உள்ளது என்று முன்னதாகவே அறிவிக்கப்பட்டுள்ளதே ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஆறுதலாக உள்ளது. விஜய்யை பிகில் படத்தில் பார்த்ததை போல கேங்ஸ்டராக மிரட்டலாக, அதிலும் லோகேஷ் இயக்கத்தில் பார்க்கவே ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். அவர்களது ஆர்வத்தை இந்தப் படம் கண்டிப்பாக பூர்த்தி செய்யும் என்று எதிர்பார்க்கலாம். அதற்கேற்ற வகையில்தான் படத்தின் போஸ்டர்கள் உள்ளிட்டவை மிகச்சிறந்த உற்சாகத்தை ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறது.

Producer Lalith kumar opens up about the business of Vijays Leo movie

இதனிடையே இந்தப் படத்தை தயாரித்துவரும் லலித் குமார், படம் குறித்த சில தகவல்களை தன்னுடைய சமீபத்திய பேட்டியில் பகிர்ந்துக் கொண்டுள்ளார். விஜய் போன்ற ஒரு ஸ்டார் படத்தில் இருப்பதால் லியோ படத்தின் பிசினஸ் தானாகவே நடப்பதாக அவர் தெரிவித்துள்ளார். படத்தை சிறப்பான முறையில் முடிப்பது மட்டுமே நமது வேலையாக இருப்பதாகவும் கூறியுள்ள அவர், படத்தை ஆங்கிலத்தில் டப்பிங் செய்து வெளியிட திட்டமிட்டிருந்ததாகவும் ஆனால் காலநேரம் அதற்கு ஒத்துழைக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.

காஷ்மீர் ஷெட்யூலின் போதே அமெரிக்காவில் உள்ள திரையரங்குகளின் எண்ணிக்கையை தான் கணக்கிட்டதாகவும் அமெரிக்காவில் 3000 சென்டர்கள் உள்ளதாகவும், அதில் குறைந்தபட்சம் 1500 சென்டர்களிலாவது லியோ படத்தை வெளியிட தான் திட்டமிட்டுள்ளதாகவும் லலித் குமார் கூறியுள்ளார். சென்னை அல்லாத திருச்சி, கோவை அல்லது மதுரையில் படத்தின் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சியை நடத்த விஜய் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் அதற்கான வேலைகளில் தற்போது இறங்கியுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X