Actor Vijay on Mahaan movie: லியோ பட தயாரிப்பாளரை திட்டிய நடிகர் விஜய்.. அட இதுதான் காரணமா?
சென்னை: நடிகர் விஜய் -இயக்குநர் லோகேஷ் கனகராஜூடன் இணைந்து லியோ படத்தை தயாரித்துள்ளார் லலித்குமார்.
இந்தப் படம் பல்வேறு பிரச்சினைகள், சர்ச்சைகளை சந்தித்த நிலையில் அவற்றையெல்லாம் சந்தித்து படத்தை குறிப்பிட்ட நாளில் ரிலீஸ் செய்துள்ளார்.

படம் தற்போது 3 நாட்களில் 280 கோடிகளுக்கு மேல் வசூலித்துள்ளது. மேலும் அடுத்தடுத்து விடுமுறை நாட்களில் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தயாரிப்பாளர் லலித்குமாரை திட்டிய விஜய்: நடிகர் விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள படம் லியோ. மாஸ்டர் படத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாக இந்தப் படத்தில் விஜய் -லோகேஷ் கூட்டணி இணைந்துள்ளது. படம் கடந்த 19ம் தேதி சர்வதேச அளவில் ரிலீசாகியுள்ள நிலையில், கடந்த 3 நாட்களில் படத்தின் வசூல் 280 கோடி ரூபாய்களை தாண்டியுள்ளது. படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ள போதிலும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர்.
இந்தப் படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் அதிகமான பேட்டிகளை கொடுத்து வருகிறார் லலித்குமார். முன்னதாக படத்தின் ரிலீசையொட்டியும் இவரது பேட்டிகளை பார்க்க முடிந்தது. படம் குறித்த அதிகமான அப்டேட்களை இவர் வெளிப்படுத்தி வந்தார். இந்நிலையில் தற்போது கொடுத்துவரும் பேட்டிகளில் லியோ படம் குறித்தும், விஜய், லோகேஷ் கூட்டணி குறித்தும் பல தகவல்கள் லலித்குமார் பகிர்ந்து வருகிறார்.
அந்த வகையில் விஜய்யின் லியோ படத்தின் ஸ்கிரிப்ட் முதலில் வேறு மாதிரியாக இருந்ததாகவும் தானும் விஜய்யும் இணைந்துதான் படத்தின் ஸ்கிரிப்டை மாற்ற பரிந்துரைத்ததாகவும் லலித்குமார் தெரிவித்துள்ளார். மேலும் படத்தின் ஆக்ஷன் காட்சிகளை அதிகரிக்க சொன்னதாகவும் கூறியுள்ளார். இதனிடையே லோகேஷ் கனகராஜ் மற்றும் விஜய்யின் கூட்டணி மீண்டும் இணைய வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். முன்னதாக லியோ 2 படம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் முன்னதாக விஜய் தன்னை போன் செய்து திட்டியதாக லலித்குமார் தன்னுடைய பேட்டியில் கூறியுள்ளார். விக்ரம் -த்ருவ் விக்ரம் காம்பினேஷனில் ஓடிடியில் வெளியான மகான் படத்தை பார்த்துவிட்டுதான் விஜய், லலித்குமாரை திட்டியுள்ளார். இப்படி ஒரு படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்துவிட்டாயே, இந்தப் படம் கண்டிப்பாக தியேட்டரில் ரிலீசாகியிருக்க வேண்டும் என்று விஜய் தெரிவித்ததாக லலித்குமா கூறியுள்ளார்.
இதையடுத்து தான் தன்னுடைய தவறை தான் உணர்ந்ததாகவும் லலித்குமார் தனது பேட்டியில் கூறியுள்ளார். விக்ரம், த்ருவ் விக்ரம், சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா லீட் கேரக்டர்களில் நடித்து வெளியான படம் மகான். இந்தப் படம் மிகச்சிறந்த விமர்சனங்களை பெற்றிருந்தது. விக்ரம் -த்ருவ் விக்ரம் இந்தப் படத்தில் முதல்முறையாக இணைந்து நடித்திருந்த நிலையில், இருவருமே நடிப்பில் மிரட்டியிருந்தனர். ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு இந்தப் படம் உள்ளானது.


Click it and Unblock the Notifications











