Vijay: விஜய்க்கு பிடித்த உணவு என்ன தெரியுமா.. தயாரிப்பாளர் பகிர்ந்த தகவல்!
சென்னை: நடிகர் விஜய், த்ரிஷா உள்ளிட்டவர்கள் நடிப்பில் லியோ படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சூட்டிங் இம்மாதத்துடன் நிறைவடையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகர் விஜய் லியோ படத்தில் இருவேறு கெட்டப்பில் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த இரு கெட்டப்புகளின் போஸ்டர்கள், வீடியோக்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றன.
படம் வரும் அக்டோபர் 19ம் தேதி சர்வதேச அளவில் வெளியாகவுள்ள நிலையில், வரும் மாதத்தில் இருந்து படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் முடுக்கி விடப்பட உள்ளன.

விஜய்க்கு பிடித்தமான உணவு குறித்து சீக்ரெட் பகிர்ந்த லலித்குமார்: நடிகர்கள் விஜய், த்ரிஷா, கௌதம் மேனன், மிஷ்கின், சஞ்சய் தத், அர்ஜூன், பிரியா ஆனந்த் என மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே இணைந்துள்ள படம் லியோ. விக்ரம் படத்தின் மிகபெரிய இன்டஸ்ட்ரியல் ஹிட்டை தொடர்ந்து லியோ படத்தை இயக்கி வருகிறார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். இந்தப் படத்தில் 14 ஆண்டுகளுக்கு பிறகு சூப்பர் ஹிட் ஜோடியான விஜய் -த்ரிஷா இணைந்துள்ளனர். படத்தின் சூட்டிங் காஷ்மீர், சென்னை என அடுத்தடுத்து நடைபெற்று வருகிறது.
நடிகர் விஜய் இந்தப் படத்தில் வயதான கேங்ஸ்டராக நடித்து வருவதாக கூறப்பட்டுள்ளது. இதற்கான கெட்டப்பில் அவர் காணப்படுகிறார். இதனிடையே, இளவயது லுக்கிலும் விஜய் காணப்படுகிறார். இந்தப் படத்தின் சூட்டிங், இந்த மாதத்துடன் நிறைவடைந்து, அடுத்ததாக போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளை படக்குழு துவங்கவுள்ளது. தொடர்ந்து படம் வரும் அக்டோபர் 19ம் தேதி சர்வதேச அளவில் திரையிடப்பட உள்ளது.
இந்தப் படத்தின் சூட்டிங் கடந்த பிப்ரவரி மாதத்தில் டைட்டில் உள்ளிட்டவற்றின் அறிவிப்புடன் துவங்கியது. தொடர்ந்து அடுத்தடுத்த வீடியோக்கள் வெளியாகி ரசிகர்களை திணறடித்தது. தொடர்ந்து காஷ்மீரில் 52 நாட்கள் படத்தின் சூட்டிங் நடத்தப்பட்டது. இந்த சூட்டிங்கின்போது 20 டிகிரி குளிரில் படக்குழுவினர் பணியாற்றியதாக தகவல்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தன. தொடர்ந்து காஷ்மீர் சூட்டிங்கின் வீடியோக்களும் வெளியாகி ட்ரெண்டாகின.
இந்நிலையில் தற்போது நிகழ்ச்சி ஒன்றில் பேசிய படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார், படத்தின் பல்வேறு விஷயங்களை பகிர்ந்துக் கொண்டார். காஷ்மீர் சூட்டிங்கின்போது அங்கு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், வேறொரு ஹோட்டலில் தங்கியிருந்த விஜய், உடனடியாக தனக்கு மெசேஜ் செய்து, அனைவரும் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்துக் கொண்டதாகவும் லலித்குமார் பாராட்டு தெரிவித்துள்ளார்.
மேலும் செட்டில் உள்ள மற்றவர்கள் வெளியில் இருந்து உணவுகளை ஆர்டர் செய்து சாப்பிட்ட நிலையில், விஜய் மட்டும் எப்போதும் புரொடக்ஷன் உணவுகளை மட்டுமே சாப்பிட்டதாகவும் லலித்குமார் தெரிவித்துள்ளார். மற்றவர்கள் சாப்பிட்ட அதே உணவை விஜய்யும் சாப்பிடுவார் என்றும் ஆனால் அவருக்கு பிடித்தமான தோசை அந்த உணவில் இருப்பதை உறுதி செய்துக் கொள்வார் என்றும் லலித்குமார் கூறியுள்ளார். இதன்மூலம் விஜய்க்கு பிடித்தமான உணவு தோசை என்பதை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.


Click it and Unblock the Notifications











