Lalith kumar on Leo: லியோ 1000 கோடியை டச் பண்ணாது.. தயாரிப்பாளரே இப்படி சொல்லிட்டாரே!

சென்னை: நடிகர் விஜய்யின் லியோ படம் கடந்த 19ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது.

லோகேஷ் -விஜய் கூட்டணியில் வெளியாகியுள்ள இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ள போதிலும் வசூலை வாரிக்குவித்து வருகிறது.

ஆயினும் வட இந்தியாவில் இந்தப் படத்தின் வசூல் சொல்லிக் கொள்ளும் வகையில் அமையவில்லை.

Producer Lalith kumar says that Leo movie collections wont touch 1000 crores

லியோ படம் 1000 கோடி வசூலை நெருங்காது என லலித்குமார் திட்டவட்டம்: நடிகர் விஜய், த்ரிஷா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள லியோ படம் நேற்றைய தினம் சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது. இந்தப் படத்தில் மிஷ்கின், சாண்டி மாஸ்டர், கௌதம் மேனன், அர்ஜூன், சஞ்சய் தத், அனுராக் காஷ்யப், ஜனனி, பிரியா ஆனந்த் உள்ளிட்டவர்களும் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். இத்தனை நட்சத்திரங்களை வைத்து ஒரு படத்தில் அனைவருக்கும் சமமான கேரக்டர்களை கொடுத்து படமியக்கும் வித்தையை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் செய்து வருகிறார்.

விஜய் போன்ற பெரிய நடிகருடன் இணைந்து லியோ படத்தை கொடுத்துள்ளார் லோகேஷ் கனகராஜ். முந்தைய படமான மாஸ்டர் படம் சிறப்பாக அமைந்த நிலையில், தற்போது லியோ படத்திற்கு கலவையான விமர்சனங்களே கிடைத்துள்ளன. ஆயினும் படம் சர்வதேச அளவில் விஜய் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து அவர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. முதல் நாளிலேயே படத்தின் கலெக்ஷன் சர்வதேச பாக்ஸ் ஆபீசில் 148 கோடி ரூபாய்களை கடந்துள்ளதாக தயாரிப்புத் தரப்பு அறிவித்துள்ளது.

300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள இந்தப் படம் ரிலீசுக்கு முந்தைய வியாபாரத்திலேயே இந்த பட்ஜெட்டை பீட் செய்திருந்தது. டிஜிட்டல், சாட்டிலைட் உள்ளிட்ட உரிமைகள் 400 கோடி ரூபாய்களுக்கு மேல் வசூலித்திருந்தது குறிப்பிடத்தக்கது. விஜய்க்கு என்று மாஸான ரசிகர்கள் வட்டம் உள்ள நிலையில், லோகேஷ் கனகராஜூம் இந்திய அளவில் மிகச்சிறப்பான டைரக்டராக பார்க்கப்படுகிறார். இவர்கள் இருவரது கூட்டணி இணைந்து மேஜிக் செய்துள்ளது.

இருந்தபோதிலும் வில்லன்களை இன்னும் மிரட்டலாக கொடுத்திருக்கலாம் என்பதும் LCU வை சிறப்பாக பயன்படுத்தியிருக்கலாம் என்பதுமே ரசிகர்களின் குறையாக உள்ளது. இந்நிலையில் முன்னதாக வெளியான ஜெயிலர் படத்தின் முதல் நாள் வசூலை லியோ படம் ப்ரீ புக்கிங்கிலேயே பீட் செய்திருந்தது. ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி 700 கோடி ரூபாய் வசூலை தாண்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனிடையே ஜெயிலர் வசூலை முறியடித்து சர்வதேச பாக்ஸ் ஆபீசில் லியோ படம் 1000 கோடி ரூபாய் கலெக்ஷனை அள்ளும் என்பதே முந்தைய கணிப்பாக இருந்தது. இதனிடையே, படத்திற்கு கலவையான விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், இந்தக் கணிப்புகள் நிஜமாகுமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது. இதனிடையே லியோ படம் 1000 கோடி ரூபாய் வசூலை எட்டாது என்று படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார் தனது பேட்டியொன்றில் கூறியுள்ளார்.

Producer Lalith kumar says that Leo movie collections wont touch 1000 crores

வட இந்தியாவில் லியோ படத்திற்கான வசூல் சிறப்பாக இருக்காது என்பதால் படத்தின் வசூல் 1000 கோடியை எட்டாது என்று லலித்குமார் தெளிவுப்படுத்தியுள்ளார். மேலும் தமிழ்நாட்டிலிருந்து 2 லட்சம் ரசிகர்கள் சிறப்பு காட்சிகளை பார்ப்பதற்காக மற்ற மாநிலங்களுக்கு சென்றதை சுட்டிக் காட்டியுள்ள லலித்குமார், அதனால்தான் 4 மணி காட்சியை தமிழகத்தில் அனுமதிக்கக்கோரி நீதிமன்றத்தை நாடியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X