Producer Lalithkumar: விஜய்யின் நம்பிக்கை மற்றும் வருத்தம்.. லலித்குமார் சொன்ன உண்மை!
சென்னை: நடிகர் விஜய்யின் லியோ படம் வரும் 19ம் தேதி சர்வதேச அளவில் ரிலீசாகவுள்ள நிலையில், படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் மரண மாஸ் வெயிட்டிங்கில் உள்ளனர்.
இந்தப் படம் சூட்டிங் துவங்கப்பட்டதில் இருந்தே பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறது. கடந்த பிப்ரவரியில் படத்தின் சூட்டிங் டைட்டில் அறிவிப்புடன் துவங்கியது.
தொடர்ந்து 52 நாட்கள் காஷ்மீரில் சூட்டிங் நடத்தப்பட்டது. இதையடுத்து சென்னை, தலக்கோணம் போன்ற இடங்களிலும் சூட்டிங் நடத்தப்பட்டது.

விஜய்யின் நம்பிக்கை மற்றும் வருத்தத்தை பகிர்ந்த லலித்குமார்: நடிகர் விஜய், த்ரிஷா, கௌதம் மேனன், மிஷ்கின், சஞ்சய் தத், பிரியா ஆனந்த், அர்ஜூன் என மாஸ் கூட்டணியுடன் லியோ படத்தில் களமிறங்கியுள்ளார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். முன்னதாக விஜய் -லோகேஷ் கூட்டணியில் வெளியான மாஸ்டர் படமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில், தற்போது லியோ படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. 6 வாரங்களுக்கு முன்னதாகவே வெளிநாடுகளில் இந்தப் படத்தின் புக்கிங் துவங்கப்பட்டு, அதிரடியாக டிக்கெட் விற்பனை நடந்துள்ளது.
படத்தில் விஜய் -த்ரிஷா ஜோடி 14 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணைந்துள்ளதும் படத்திற்கான எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது. மேலும் படத்தின் பிரமோஷன்களும் மிகச்சிறப்பான வகையில் முடுக்கி விடப்பட்டுள்ளன. கடந்த சில தினங்களாகவே லியோ திருவிழா என்று கூறும்படியாக தொடர்ந்து அடுத்தடுத்த போஸ்டர்கள், பாடல், ட்ரெயிலர் என மாஸ் காட்டி வருகிறது லியோ டீம். நேற்றைய தினம் வெளியாகியுள்ள படத்தின் ட்ரெயிலர் மிகப்பெரிய அளவில் ரீச்சாகியுள்ளது.
இந்த ட்ரெயிலரில் சில கெட்ட வார்த்தைகளும் இடம்பெற்றுள்ள நிலையில், சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் பிடித்தமான விஜய், எப்படி இதுபோன்ற கெட்ட வார்த்தைகளை பிரயோகிக்கலாம் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன. விஜய்யை அவரது ஸ்டைலை உடனடியாக பின்பற்றும் கொள்கையுடைய மாணவர்கள், இளைஞர்கள் ஏராளமானோர் உள்ள நிலையில், இது மோசமான முன் உதாரணமாக அமையும் என்று பல தரப்பினரும் கூறி வருகின்றனர்.
இந்தப் படம் குறித்து தொடர்ந்து பல பேட்டிகளை கொடுத்து வருகிறார் படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார். அந்த வகையில் அவர் தற்போது அளித்துள்ள பேட்டியில் இந்தப் படம் குறிப்பிட்ட தேதியில் கண்டிப்பாக ரிலீசாகும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். விஜய்யும் இதில் உறுதியாகவும் நம்பிக்கையுடனும் உள்ளதாகவும் அவர் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். மேலும் படத்தில் இடம்பெற்றுள்ள Hyana காட்சி உலகத்தரத்தில் அமைந்துள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
மேலும் படத்தின் மூன்றாவது பாடல் வரும் திங்கட்கிழமை ரிலீசாகவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அது குடும்ப பாடலாக வெளியாகவுள்ளதாகவும் கூறியுள்ளார். படத்தின் பிஜிஎம் மிகச்சிறப்பாக உருவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். படம் சர்வதேச அளவில் 25,000 முதல் 30,000 திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளதாகவும், கோலிவுட் படம் இத்தகைய அதிகமான திரையரங்குகளில் வெளியாவது சாதனையாக பார்க்கப்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் படத்திற்காக மிகப்பெரிய அளவில் யாரும் எதிர்பார்க்காத ஒரு ப்ரமோஷனை மேற்கொள்ளவுள்ளதாகவும் அது ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமையும் என்றும் லலித்குமார் கூறியுள்ளார். படத்தின் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சி ரத்தானதால் விஜய் மிகுந்த வருத்தத்தில் உள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், இதன்மூலம் ரசிகர்களை பார்க்க முடியாததே அவரது வருத்தத்திற்கு முக்கிய காரணம் என்றும் தெரிவித்துள்ளார். படத்தின் புக்கிங்குகள் வரும் 15ம் தேதி முதல் துவங்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











