விஜயகாந்த் குடும்பத்தில் ஒரு டாக்டர் பொண்ணு ரெடி.. தயாரிப்பாளர் சுதீஷ் மகள் தூள் கிளப்புறாங்களே!
சென்னை: மறைந்த கேப்டன் விஜயகாந்தின் மச்சானும் தயாரிப்பாளருமான சுதீஷின் மகள் மருத்துவராக தேர்ச்சி பெற்று பட்டம் வாங்கியுள்ளார். குடும்பத்துடன் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் அவர் பட்டம் வாங்கிய புகைப்படங்களும் வெளியாகி உள்ளன.
விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடிப்பில் வெளியான படை தலைவன் படத்தையும் கேப்டன் சினி கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுதீஷ் தான் வாங்கி வெளியிட்டார்.

தேமுதிக தலைவர் பிரேமலதாவின் சகோதரரான சுதீஷ் குடும்பத்தில் இருந்து ஒரு மருத்துவர் உருவாகியிருப்பது கேப்டன் ரசிகர்களுக்கு சந்தோஷத்தை கொடுத்துள்ளது.
சினிமாவில் நடிக்காமல்: குடும்பத்தில் நடிகர்கள், தயாரிப்பாளர்கள், அரசியல் தலைவர்கள் என பலர் பிரபலமாக இருந்தாலும் அதையெல்லாம் விட்டு விட்டு நன்றாக படித்து சுதீஷின் மகள் ஜானு ஸ்ரீ டாக்டர் பட்டத்தை பெற்றுள்ளார். இயக்குநர் ஷங்கரின் மகளும் டாக்டராக படித்து பட்டம் பெற்றவர் தான். ஆனால், அதன் பிறகு மருத்துவராக செயல்படாமல் நடிகையாக மாறிவிட்டார். சினிமாவில் சாய் பல்லவி முதல் பல நடிகைகள் டாக்டருக்கு படித்து விட்டு நடிகைகளாக உள்ளனர் என்பது கூடுதல் தகவல்.

குடியரசு துணைத் தலைவரிடம் பட்டம்: தேமுதிகவின் பொருளாளரும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளருமான எல் கே சுதீஷ் மற்றும் பூர்ண ஜோதி அவர்களின் மூத்த மகள் ஜானு ஶ்ரீ இன்று சென்னை ஏசிஎஸ் மருத்துவ கல்லூரியில் MBBS MS OG (மகப்பேறு மற்றும் மகளிர் நல அறுவை சிகிச்சை முதுகலை) பட்டத்தை இந்திய குடியரசு துணைத் தலைவர் சி பி ராதாகிருஷ்ணன் அவரின் கரங்களால் பெற்றார்.

வாழ்த்தும் ரசிகர்கள்: கேப்டன் விஜயகாந்த் பலருக்கும் பிரதிபலன் பாராமல் உதவி செய்துள்ளார். அவரை போலவே அவரது குடும்பத்தை சேர்ந்த ஜானு ஸ்ரீ மக்களுக்கான சேவையை தாராளமாக செய்ய வேண்டும் என கேப்டன் ரசிகர்கள் மற்றும் தேமுதிக தொண்டர்கள் வாழ்த்தி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











