மீனாவிடம் ஒரு விஷயம் கேட்டேன்.. தரம் தாழ்ந்து பேசுனாங்க.. மாணிக்கம் நாராயணன் பேட்டி!
சென்னை: பல வெற்றிப்படத்தை தயாரித்துள்ள தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன், ஒரு விஷயத்திற்காக மீனாவிடம் சென்றேன். ஆனால், அவர் தரம் தாழ்ந்து பேசினார் என்று பேட்டியில் கூறியுள்ளார். அவரின், இந்த பேட்டி இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், அவரின் பேச்சுக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன.
அண்மையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட பிரபல திரைப்பட தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன், நடிகர் விஜய் குறித்து பல விஷயத்தை பகிர்ந்து கொண்டார். மேலும், இயக்குநர் மணிரத்னம் குறித்து பேசிய அவர், மனுஷன் என்றால் கொஞ்சமாவது நல்லது செய்ய வேண்டும். அப்படி நல்லது செய்யாதவன் என்ன மனுஷன் போகும் போது, அப்படி என்னத்தை கொண்டு போகபோகிறோம் என்றார்.

தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன்: இதைத் தொடர்ந்து பேசிய மாணிக்கம் நாராயணன், நான் தயாரித்த எந்த படத்தின் கதையையும் கேட்டது இல்லை. வேட்டையாடு விளையாடு படத்தின் கதையை ஒருமுறையாவது கேளுங்க என்று, கௌதம் சொல்லிக்கொண்டே இருந்தார். ஆனால், அவரை நான் நம்பியதால், படம் வந்ததும் பார்த்துக்கொள்கிறேன் என்றேன். படம் வந்து சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. யாரை நம்பினாலும், முழுசா அவர்கள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். நான் கௌதம் மீது வைத்த நம்பிக்கையால், என்னை கோபுரத்தில் ஏற்றிவிட்டார்.
மரியாதைதான் முக்கியம்: அதே இந்த படம் நான்றாக ஓடும் என்று நான் முன்பே கணித்துவிடுவேன், அப்படி ஓடும் என்று சொல்லிய படங்கள் எல்லாம் நன்றாக ஓடின. ஆனால், இதுவரை எந்த படத்தையும் இயக்க வேண்டும் என்று யோசித்தது இல்லை. ஏன் என்றால், இதுவரை யாரை தேடி சென்று பார்த்தது இல்லை. கமல் ஆபிசுக்கு மட்டும் தான் செல்வேன். மற்றவர்கள் எல்லாம் என்னைத்தேடி என் அலுவலகத்திற்குத்தான வருவார்கள். அப்படியே ஒரு மரியாதையே நான் வாழ்ந்துவிட்டேன்.
என்னை தப்பா பேசினாங்க: ஒரு முறை ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்க, மீனாவை அழைத்தேன். அப்போது அவங்க, அம்மா என்னை ரொம்ப தப்பா பேசிட்டாங்க. நான் ஒரு தயாரிப்பாளர், மீனா கிட்ட ஒரு விஷயமே கேக்குறேன். ஆனால், அவங்க கிராக்கியா இருக்குறவங்க தானே. அவங்க தரம் தாழ்ந்து தான் பேசுவார்கள். எனக்கு ரொம்ப வேதனையா இருந்தது . அதில் இருந்து யார்கிட்டயும் எதுவும் கேட்பதில்லை. அதே போல எந்த நடிகையிடம் நான் பேசியது இல்லை. ஆனால், குஷ்பு, ரோஜா,சுஹசினி போன்றவர்கள் என் நண்பர்களாக இருக்கிறார்கள். அவர்கள் என் மகனின் திருமணத்தில் கலந்து கொண்டார்கள். அந்த மாதிரி சினிமாவில் இருக்கும் ஒரு சில நண்பர்கள் மட்டும் இருந்தால் போதும் என்று தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் அந்த பேட்டியில் கூறியுள்ளார். இந்த பேட்டி தற்போது இணையத்தில் டிரெண்டாகி வரும் நிலையில், நடிகை மீனாவை கிராக்கி என்று கூறியதை அவரது ரசிகர்கள் கண்டித்து வருகின்றனர்.
சின்னத்திரையில்: குழந்தை நட்சத்திரமாக சினிமபாவில் நடித்து வந்த நடிகை மீனா, ராஜ்கிரண் நடித்த என் ராசாவின் மனசிலே திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அவர் நடித்த முதல் படமே, ஹிட்டாக அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிய தொடங்கின. திருமணத்திற்கு பின் சினிமாவில் கொஞ்சம் விலகி இருந்த மீனா, தற்போது சில படங்களில் நடித்து வருகிறார். அவர், சின்னத்திரை நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











