சொந்த அண்ணன் மரணத்துக்கு காரணம் மணிரத்னமா?.. தயாரிப்பாளர் சொன்ன ஷாக் தகவல்
சென்னை: லெஜெண்ட் இயக்குநர்களில் ஒருவர் மணிரத்னம் என்று ரசிகர்கள் எப்போதும் கூறுவதுண்டு. அவர் எடுக்கும் படங்களும் அதை நிரூபிக்கும் விதமாகவே இருக்கும். கடந்த பல வருடங்களாக இயக்குநராக இயங்கிவரும் மணிரத்னம் ஏராளமான ட்ரெண்ட் செட்டர் படங்களை கொடுத்திருக்கிறார். கடைசியாக அவரது இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாவது பாகம் வெளியானது. தற்போது கமலை வைத்து தக் லைஃப் படத்தை இயக்கிவருகிறார். இந்தச் சூழலில் அவர் குறித்து தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் அதிர்ச்சி கிளப்பும் விஷயத்தை பேசியிருக்கிறார்.
இந்தியாவின் மிகச்சிறந்த இயக்குநர்களில் ஒருவர் மணிரத்னம். அவர் இயக்கிய மௌன ராகம், உயிரே, பம்பாய், நாயகன், அலைபாயுதே உள்ளிட்ட படங்கள் கல்ட் க்ளாசிக் வரிசையில் இடம்பிடித்திருப்பவை. முக்கியமாக நாயகன் திரைப்படம் அனைவராலும் இன்றுவரை கொண்டாடப்படக்கூடியது. அதுமட்டுமின்றி எந்த டான் படம் வந்தாலும் அதற்கு நாயகன் படம் பெரிய இன்ஸ்பிரேஷனாக இருந்திருக்கிறது. மணிரத்னத்தின் இயக்கத்தில் கடைசியாக பொன்னியின் செல்வன் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது.

தக் லைஃப்: இப்போது அவர் கமல் ஹாசனை வைத்து தக் லைஃப் படத்தை இயக்கிவருகிறார். ஏற்கனவே இவர்கள் இரண்டு பேரும் இணைந்த நாயகன் திரைப்படம் பெரிய முத்திரையாக இருப்பதால் இந்தப் படத்தின் மீதும் பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருக்கிறது. இதற்கிடையே மணிரத்னத்தின் அண்ணன் ஜி.வியும் திரைத்துறையில் பெரும் தயாரிப்பாளராக வலம் வந்தவர். தமிழன் உள்ளிட்ட ஏராளமான படங்களை தயாரித்திருக்கிறார். ஆனால் சில காரணங்களால் அவர் தற்கொலை செய்துகொண்டார். இந்தச் சூழலில் மணிரத்னம் குறித்து தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் பேசியிருக்கும் விஷயம் அதிர்ச்சியை கிளப்புவதாக இருக்கிறது.
மாணிக்கம் நாராயணன் பேட்டி: அவர் அளித்த பேட்டி ஒன்றில், "மணிரத்னத்தின் அண்ணன் ஜிவி என்னை பார்க்க அடிக்கடி வருவார். அவர் தயாரிப்பாளராக இருந்தபோது ஏகப்பட்ட பிரச்னைகளுடன் இருந்தார். ஒருமுறை திடீரென இரண்டு நாட்கள் அவரை காணவில்லை. பிறகு என்னுடைய வீட்டுக்கு வந்து நான் தற்கொலை செய்துகொள்ள நினைத்தேன் என்று கூறினார். அப்படி அவர் கூறியதும், 'நான் உங்கள் பண பிரச்னையை பார்த்துக்கொள்கிறேன். அதுபற்றி பலரிடம் பேசிக்கொண்டிருக்கிறேன். எனவே வேறு எதுவும் யோசிக்க வேண்டாம்' என்று சத்தம் போட்டு சொன்னேன்.
அன்புச்செழியன் டார்ச்சர்: அப்போது அவர், அன்புச்செழியன் பணம் விஷயமாக என்னை ரொம்பவே டார்ச்சர் செய்கிறார். அவரை ஆஃப் செய்வதற்கு 60 லட்சம் ரூபாய் கொடுங்கள் என்று என்னிடம் கேட்டார். நான் அதற்கு, என்னிடம் அக்கவுண்ட்டில் பணம் இல்லை என்று சொன்னேன். அதற்கு அவரோ, 60 லட்சம் ரூபாய் எழுதிக்கொடுங்கள். இரண்டு நாட்கள் சமாளித்துக்கொள்கிறேன் என்று சொல்லி செக்கை வாங்கி சென்றார்.
ஜிவியின் தற்கொலை: அதற்கு பிறகு ஜிவியை தொடர்புகொள்ள நினைத்து அவரது வீட்டுக்கு ஃபோன் செய்தேன். அப்போது அவர்கள், ஜிவி கோலாலம்பூருக்கு ஒரு நிகழ்ச்சிக்காக சென்றிருப்பதாக சொன்னார்கள். அந்த நாளில்தான் அவர் தற்கொலையும் செய்துகொண்டார். இதற்கிடையே ஜிவி உயிரோடு இருந்தபோது அவரிடம் நான், 'உங்கள் தம்பி மணிரத்னம் இருக்கிறாரே. அவரை ஒரு படம் எடுத்து தர சொல்லுங்கள். அதன் மூலம் கடனை அடைத்துவிடலாமே என்று கேட்டேன்.
அவன்லாம் ஒரு மனுஷனா: அதற்கு அவர் கோபமாக, அவன் எல்லாம் ஒரு மனுஷனா அவன பத்தி பேசாத என்று கடிந்துகொண்டார். அண்ணனின் பண பிரச்னையில் எந்தவித உதவியும் செய்யாமல் இருந்த மணிரத்னம் அந்த உதவியை செய்திருந்தால் ஜிவியை காப்பாற்றியிருக்கலாம். ஜிவி குடும்பத்துடன் சந்தோஷமாக இருந்திருப்பார். எல்லோரும் மணிரத்னத்தை கொண்டாடுகிறார்கள். ஆனால் அவர்தான் அவருடைய அண்ணனின் தற்கொலைக்கு ஒரு காரணமாக இருந்திருக்கிறார்" என்றார்.


Click it and Unblock the Notifications