அட்ஜஸ்ட்மெண்ட் இல்லை.. ஐஸ்வர்யா மீது கோபம்.. தனுஷ் மீது மகன்கள் பாசம்.. கொளுத்திப்போட்ட புரொடியூசர்
சென்னை: கோலிவுட்டின் முன்னணி நடிகரான தனுஷும், ரஜினிகாந்த்தின் மகள் ஐஸ்வர்யாவும் விவாகரத்து வேண்டி நீதிமன்றம் சென்றிருக்கிறார்கள். அவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். எப்படியாது தனுஷையும், ஐஸ்வர்யாவையும் சேர்த்து வைத்திட வேண்டும் என்று குடும்பத்தார் எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிந்துவிட்டதாக கூறுகிறார்கள். சூழல் இப்படி இருக்க இந்த விவகாரம் குறித்து தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் பேசியிருக்கும் விஷயம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
கோலிவுட்டில் கடந்த சில மாதங்களாகவே நட்சத்திர தம்பதிகளின் விவாகரத்து விவகாரம் தலைதூக்கியுள்ளது. முதலில் பிரிந்திருந்த தனுஷும், ஐஸ்வர்யாவும் இப்போது சட்டப்பூர்வமாக விவாகரத்து கேட்டிருக்கிறார்கள். அதேபோல் பல காலம் சேர்ந்து வாழ்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட ஜிவி பிரகாஷும், சைந்தவியும்கூட விவாகரத்து செய்யவிருக்கிறார்கள். இதனால் திரைத்துறையினரும், ரசிகர்களும் அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள். சூழல் இப்படி இருக்க தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் தனுஷ் - ஐஸ்வர்யா விவகாரம் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.

மாணிக்கம் நாராயணன் பேட்டி: தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், "அனைத்தையும் அனுபவிக்க வேண்டும் என்று பெண்கள் நினைக்கும்போதுதான் விவாகரத்து அதிகரிக்க ஆரம்பித்தது. தனுஷின் குழந்தைகள் தங்கள் தாய் ஐஸ்வர்யாவைவிடவும் அப்பா தனுஷுடன் நெருக்கமாக இருக்கிறார்கள். அதனால்தான் இரண்டு மகன்களும் தனுஷின் பாதுகாப்பில் வளர்கிறார்கள். இன்றைய பெண்கள் பணம் வரும்போது விஷயம் புரியாமல் நடந்துகொள்கிறார்கள்.
பெண்கள்தான் காரணம்: இப்போதெல்லாம் பெண்கள் தனித்து நிற்க வேண்டும் என்று முயன்றுகொண்டிருக்கிறார்கள். அந்த நடைமுறைதான் விவாகரத்துக்கள் நடப்பதற்கு காரணமாக நான் நினைக்கிறேன். நான் இப்படி சொல்வதால் என்னை பெண்கள் விமர்சித்தாலும், எப்படி பேசினாலும் எனக்கு அதை பற்றியெல்லாம் கவலை இல்லை. மனதில் பட்டதைத்தான் நான் பேசுகிறேன்.
சமாளிக்க வேண்டும்: ஜிவி பிரகாஷும், சைந்தவியும் விவாகரத்து செய்துகொள்ளப்போவதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின. அது எனக்கு ரொம்பவே வருத்தமாக இருந்தது. ஆண்கள் தவறு செய்யும்போது அதனை பெண்கள் சமாளிக்க வேண்டும். சில பெண்கள் கேள்வி கேட்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை பெண்கள் கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்துகொள்வதுதான் நல்லது என்று நான் நினைக்கிறேன்.
புரிந்துகொண்டு முன்னேற்ற வேண்டும்: வாழ்க்கையில் நடக்கும் சில தவறுகளை புரிந்துகொண்டு முன்னேறுவது நல்லது என்று நினைக்கிறேன். ஒரு குடும்பத்தில் இருவரும் விட்டுக்கொடுக்க தயாராக இருக்க வேண்டும். பெண்கள் கொஞ்சம் பொறுமையையும், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையையும் காட்ட வேண்டும். பெண்களுக்கு கொஞ்சம் தளர்வான மனப்பான்மையை ஆண்டவன் கொடுத்திருக்கிறார். பெண்கள் அனுசரித்து வாழ வேண்டும் என்பதுதான் எனது கருத்து ஆகும்.
அம்மா மீது பாசம் இல்லை: அது தவறாகக்கூட இருக்கலாம். ஆனால் அப்படி செய்வதால் முக்கால்வாசி பிரச்னைகள் தீர்ந்துவிடும். தனுஷ் - ஐஸ்வர்யா ஜோடியை பொறுத்தவரை; இரண்டு குழந்தைகளால் தனுஷ்தான் நேசிக்கப்படுகிறார் என்று கேள்விப்பட்டேன். அதேசமயம் ஐஸ்வர்யா மீது அவ்வளவாக மகன்களுக்கு பாசம் இல்லை என்றும் சொல்கிறார்கள். உங்கள் குழந்தைகளை நீங்கள் எப்படி நடத்துகிறீர்கள் என்பதை பொறுத்துதான் அவர்கள் உங்களை எந்த அளவு நேசிக்கிறார்கள் என்பது தெரியவரும்" என்றார்.


Click it and Unblock the Notifications











