Vijay - தயாரிப்பாளரை கெஞ்சவிட்டு அழ வைத்த விஜய்.. என்ன நடந்தது தெரியுமா?
சென்னை: Vijay (விஜய்) தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் விஜய் குறித்து பேசியிருக்கும் விஷயம் இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.
கோலிவுட்டின் முன்னணி நடிகரான விஜய் இப்போது லியோ படத்தில் நடித்துவருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படமானது அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் லியோ நிச்சயம் ஹிட்டாகிவிடும் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் இருக்கின்றனர். இந்தப் படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கிறார் விஜய். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

அரசியல் பக்கம் விஜய்: இதற்கிடையே விஜய் அரசியலுக்கு வருவார் என்று பல வருடங்களாகவே கணிக்கப்பட்டுவருகிறது. சூழல் இப்படி இருக்க அவரது சமீபத்திய நடவடிக்கைகள் அனைத்துமே விஜய்யின் அரசியல் என்ட்ரியை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றன. மேலும் பலருக்கு தனது மக்கள் இயக்கம் மூலம் நலத்திட்ட உதவிகள் செய்வதால் நிச்சயம் விஜய் அரசியலுக்கு வந்தால் மவுசு இருக்கும் என்கின்றனர் தளபதி ரசிகர்கள்.
மாணிக்கம் நாராயணன் பேட்டி: இந்நிலையில் மாணிக்கம் நாராயணன் விஜய் குறித்து அளித்திருக்கும் பேட்டி இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. அந்தப் பேட்டியில் பேசிய அவர், "வடிவேலுவை வைத்து இந்திரலோகத்தில் நா.அழகப்பன் படத்தை தயாரித்தேன். அந்த ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு விஜய்யை சிறப்பு விருந்தினராக அழைத்தேன். விஜய்யும் வருவதற்கு ஒத்துக்கொண்டார்.
சூர்யா: விஜய் வருவதால் அதனை வைத்து சூர்யாவையும் அழைத்தேன். அவரும் வருவதற்கு ஒத்துக்கொண்டுவிட்டார். விழா நாள் நெருங்கும் சமயத்தில் விஜய் ஃபோன் செய்து என்னால் வர முடியாது. வேறு ஒரு வேலை இருக்கிறது என கூறிவிட்டார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த நான் உடனடியாக விஜய்யை நேராடியாக் சந்தித்து வருமாறு கெஞ்சினேன். அதுமட்டுமின்றி நீங்கள் வருகிறீர்கள் என்று சொல்லித்தான் சூர்யாவையும் அழைத்தேன் என கூறினேன். ஆனால் விஜய்யோ வரவே முடியாது என சொல்லிவிட்டார்.
ஒத்துக்கொண்ட சூர்யா: இருந்தாலும் சூர்யாவோ யார் வந்தாலும் சரி வராவிட்டாலும் சரி நான் வருகிறேன் என கூறிவிட்டார். நானும் விஜய்க்கு பதிலாக சிம்புவை அழைத்தேன். அவரும் வந்துவிட்டார். விழா தொடங்கி நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது விஜய் வந்துவிட்டார். அதை பார்த்ததும் எனக்கு அழுகை வந்துவிட்டது. அதனை கவனித்துவிட்ட விஜய்யோ மேடைக்கு வந்து கட்டி அணைத்து ஏன் எமோஷனல் ஆகுறீங்க? நான் வந்துட்டேன்ல என கூறி தேற்றினார்" என்றார்.
அஜித்தை கிழித்த மாணிக்கம்: மாணிக்கம் நாராயணன் வேட்டையாடு விளையாடு உள்ளிட்ட படங்களை தயாரித்தவர். இவர் அளித்திருந்த மற்றொரு பேட்டியில் அஜித் தன்னிடம் பணத்தை வாங்கிவிட்டு ஏமாற்றிவிட்டார் என்றும் அதற்கான ஆதாரம் தன்னிடம் இருக்கிறது. எனவே அந்தப் பணத்தை அஜித் கொடுக்க வேண்டும் என்றும் கேட்டிருந்தார். அதேபோல் அஜித் நல்ல மனிதனே கிடையாது என கூறியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











