அஜித் மீது தொடர் தாக்குதல்.. விட்டு விளாசிய தயாரிப்பாளர்.. இன்னுமா காண்டு தீரல

சென்னை: அஜித் நடிப்பில் விடாமுயற்சி, குட் பேட் அக்லி ஆகிய திரைப்படங்கள் அடுத்ததாக வரவிருக்கின்றன. விடாமுயற்சி படம் தொடங்கி ஒரு வருடம் நிறைவடைந்துவிட்டது. இருந்தாலும் படத்தின் ஷூட்டிங் இன்னும் முடிந்தபாடில்லை. மகிழ் திருமேனியின் இயக்கம் என்பதால் இப்படத்தின் மீது நல்ல எதிர்பார்ப்பு நிலவிவருகிறது. அதேபோல் குட் பேட் அக்லி படத்தின் மீதும் ரசிகர்களுக்கு ஆவல் அதிகரித்திருக்கிறது. இந்தச் சூழலில் பிரபல தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் அஜித் குறித்து பேசியிருக்கும் விஷயம் ட்ரெண்டாகியிருக்கிறது.

தமிழ் சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவர் அஜித்குமார். சினிமா பின்னணி எதுவும் இல்லாமல் இந்தத் துறைக்குள் வந்து தன்னை நிரூபித்து தனக்கென தனி சிம்மாசனத்தை உருவாக்கி வைத்திருக்கிறார் அவர். அவரது நடிப்பில் கடைசியாக வெளியான துணிவு திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்ததாக மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்துவருகிறார் அவர். அனிருத் இசையமைக்க திரிஷா, ஆரவ், அர்ஜுன், ரெஜினா உள்ளிட்டோ நடித்துவருகிறார்கள்.

ajith manickam narayanan vidaamuyarchi

என்னதான் ஆச்சு: படத்தின் ஷூட்டிங் கிட்டத்தட்ட ஒரு வருடத்துக்கும் மேல் ஆகிவிட்டது. அஜர்பைஜானில் சில ஷெட்யூல்கள் ஷூட்டிங் முடிந்தன. ஆனால் அதற்கு பிறகு படத்துக்கு என்ன ஆனது என்றே தெரியவில்லை. இடையில் லைகா நிறுவனத்துக்கு நிதி நெருக்கடியால் படம் ட்ராப்பாகிவிட்டது என்றெல்லாம் சொன்னார்கள். ஆனால் அப்படியெல்லாம் எதுவும் இல்லை படம் கண்டிப்பாக ரிலீஸாகும் என்று அஜித் தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது. மேலும் படத்தின் ஸ்டண்ட் மாஸ்டரும் கூறியிருக்கிறார்.

லைகாவை காப்பாற்றுவாரா அஜித்?: அதேபோல் லைகா நிறுவனம் சமீபத்தில் தயாரித்த வேட்டையன், இந்தியன் 2, லால் சலாம் ஆகிய படங்களில் வேட்டையன் மட்டுமே சுமாரான வரவேற்பை பெற்றது. இந்தியன் 2, லால் சலாம் படங்கள் பெரும் தோல்வியை சந்தித்தன. இதன் காரணமாக அந்த நிறுவனம் கவலையில் தத்தளிப்பதாக கூறப்படுகிறது. சூழல் இப்படி இருக்க லைகா நிறுவனத்தை அஜித்தின் விடாமுயற்சிதான் காப்பாற்ற வேண்டும் என்று திரைத்துறையில் பேச்சு எழுந்திருக்கிறது.

குட் பேட் அக்லி: இதற்கிடையே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்திலும் நடிக்க கமிட்டாகியிருக்கிறார் அஜித்குமார். அந்தப் படத்தின் ஷூட்டிங்கும், விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங்கும் ஒரே நேரத்தில் நடந்துவருகிறது. அந்த இரண்டு படங்களிலுமே அஜித் மும்முரமாக நடித்துவருகிறார். பல வருடங்கள் கழித்து அஜித் இப்படி நடிப்பதாக அவரது பி.ஆர்.ஓ சுரேஷ் சந்திரா தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக அஜித்தின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

மாணிக்கம் நாராயணன் பேட்டி: இந்நிலையில் வேட்டையாடு விளையாடு உள்ளிட்ட படங்களை தயாரித்த மாணிக்கம் நாராயணன் தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் அஜித் குறித்து பேசுகையில், "அஜித்தை நான் மனிதனாகவே நினைப்பதில்லை. அவர் கடவுள் ரேஞ்சில் இருக்கிறார். அவரை நான் மதிக்கவே மாட்டேன். படத்தின் ப்ரோமோஷனுக்கெல்லாம் அவர் வரமாட்டார். விடாமுயற்சி படத்தை பொறுத்தவரை அஜித்தும் சரி, மகிழ் திருமேனியும் சரி இரண்டு பேருக்குமே மூளை என்பது இல்லை.

அந்தப் படம் ஹிட் ஆக வேண்டுமென்றுதான் நான் ஆசைப்படுகிறேன். அப்படி ஹிட் ஆனால் லைகா நிறுவனத்தினர் சந்தோஷப்படுவார்கள்தானே. அதனால் நமக்கு என்ன நஷ்டம் வந்துவிடப்போகிறது" என்றார். முன்னதாக கடந்த சில வருடங்களாகவே அஜித் மீது மாணிக்கம் நாராயணன் தொடர் வார்த்தை தாக்குதலில் ஈடுபட்டுவருகிறார். அதற்கு, 'அஜித் தன்னிடம் பணத்தை வாங்கிக்கொண்டு ஏமாற்றிவிட்டார்' என்று காரணம் கூறுவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X