அஜித்தே ஏமாத்துராரு ஞானவேல் ராஜா ஏமாத்த மாட்டாரா? சினிமால நன்றியே இல்ல.. தயாரிப்பாளர் பளீச்!

சென்னை: அமீர் மற்றும் ஞானவேல் ராஜா பிரச்சனை குறித்து பேசி உள்ள தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன், சினிமாவில் யாருக்கும் நன்றியே இல்லை என்று கூறியுள்ளார்.

பருத்திவீரன் படம் வெளியான போதே, இயக்குனர் அமீருக்கும் ஞானவேல் ராஜாவுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. இது பல ஆண்டுகளுக்கு பிறகு தற்போது பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது.

Producer Manickam Narayanan talks about ameer gnanavel raja issue

அதற்கு காரணம் ஞானவேல் ராஜா அமீரை பற்றி கடுமையாக தாக்கி பேசியதும், கணக்கு விஷயத்தில் தன்னை ஏமாற்றி விட்டதாக குற்றம் சாட்டி இருந்தார்.

ஞானவேல் ராஜா அறிக்கை: ஞானவேல் ராஜா இப்படி பேசியதை சினிமா வட்டாரத்தில் பெரும் புயலை கிளப்பியதை அடுத்து, சசிகுமார், சமுத்திரக்கனி, சினேகன், பாரதிராஜா, கரு. பழனியப்பன் உள்ளிட்ட பலரும் அறிக்கை வெளியிட்டு ஞானவேல் ராஜாவை கண்டித்தனர். பிரச்சனை பெரிதாகியதை அடுத்து, வருத்தம் தெரிவித்து ஞானவேல் ராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

Producer Manickam Narayanan talks about ameer gnanavel raja issue

இது மன்னிப்பா: இந்த சீனெல்லாம் இங்க செல்லாது வருத்தம் தெரிவிப்பது எல்லாம் பெரிய விஷயம் இல்லை, பொது இடத்தில் எப்படி அமீரை அவமதித்தாரோ அதே போல பொது வெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற சமுத்திரக்கனி கூறியிருந்தார். இதே கருத்தை சசிக்குமாரும் கூறியிருந்தார்.

மாணிக்கம் நாராயணன்: யூடியூப் சேனல் ஒன்று இந்த பிரச்சனை குறித்து பேட்டி அளித்துள்ள தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன், பத்து பேர் முன்னாடி அடித்துவிட்டு, தனியாக வந்து மன்னித்துவிடு என்றால் என்ன அர்த்தம்,எப்போதும் வார்த்தைகளை பார்த்து நாம் பயன்படுத்த வேண்டும், வார்த்தையை விட்டுவிட்டால் அள்ள முடியாது.

Producer Manickam Narayanan talks about ameer gnanavel raja issue

ஓவர் திமிரு: ஆனால், ஞானவேல் ராஜா எப்போதும் திமிர பேசக்கூடிய ஆள் தான், சின்ன வயதில் திமிர் இருப்பதில் தவறு இல்லை. ஆனால், அவரின் கைக்குள் சூர்யா,கார்த்தி போன்ற நடிகர்கள் இருப்பதால், அவருக்கு அந்த ஆணவம் அதிகமாக இருக்கிறது. வாழ்க்கையில் வெற்றி பெற்ற பிறகு, பக்குவம் வரவேண்டும்.

சினிமால நன்றி இல்ல: இந்த பிரச்சனையில் கார்த்தி இதுவரை வாய் திறக்காமல் இருக்கிறார். அவரை அழைத்து இந்த பிரச்சனை என்ன என்று உங்களுக்கு தெரியுமா என்று பேசினால் தான் உண்மை தெரியும். அவராக வந்து குரல்கொடுப்பார் பேசுவார் என்று நினைத்தால், அது நடக்காது சினிமாவில் யாருக்கும் நன்றியே இல்லை. அஜித்தே ஏமாத்துராரு ஞானவேல் ராஜா ஏமாத்த மாட்டாரா? என்று மாணிக்கம் நாராயணன் அந்த பேட்டியில் பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X