லோகேஷ் கனகராஜை சுத்தமா பிடிக்கல.. அவருக்கு பணம் சம்பாதிப்பது தான் நோக்கமா? தயாரிப்பாளர் அதிரடி!
சென்னை: கூலி திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளரான மாணிக்கம் நாராயணன், மாண்புமிகு மாணவன், வேட்டையாடு விளையாடு, இந்திரலோகத்தில் நா அழகப்பன் போன்ற ஹிட் திரைப்படங்களை தயாரித்துள்ளார். தற்போது சினிமாவில் இருந்து ஒதுங்கி இருக்கும் இவர், லோகேஷ் கனகராஜை சுத்தமா பிடிக்கல, அவர் குழப்புகிறார் என்றார்.
தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பாளராக ஒரு காலத்தில் திகழ்ந்தவர் செவன்த் சேனல் மாணிக்கம் நாராயணன். இந்திரலோகத்தில் நா அழகப்பன் படத்தால் நான் அனைத்து படத்தையும் இழந்து ரொம்ப கஷ்டப்பட்டேன் என்றார். மேலும், நடிகர் அஜித் குறித்தும், இயக்குநர் மணிரத்னம் பற்றியும் பல கருத்துக்களை தைரியமாக பேசி வருகிறார்.

அவருக்கு நிகர் அவர் தான்: படங்கள் தயாரிப்பதில் இருந்து ஒதுங்கி இருக்கும் மாணிக்கம் நாராயணன், யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், இளையராஜாவின் காப்பி ரைட்ஸ் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், இளையராஜாவை அனைவரும் திமிர்பிடித்தவர் என்று சொல்கிறார்கள், என்னை பொருத்தவரை அவரிடம் ஒரு சதவீதம் கூட திமிர் இல்லை. அவருடைய சாதனைக்கு அருகில் யாராலும் போகக்கூட முடியாது. அவரின் சாதனையை முறியடிக்க முடியாத, ஒன்னுமே தெரியாத துக்கடா பையன் ஏன் அவரை பற்றி பேச வேண்டும். இளையராஜாவிற்கு நிகர் இளையராஜா தான் என்றார்.
லோகேஷை பிடிக்காது: அதையடுத்து செய்தியாளர், இன்றைய தலைமுறை இயக்குநர்களில் யாரை உங்களுக்கு மிகவும் பிடித்து இருக்கு என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த அவர், இப்போது இருக்கும் இயக்குநர்களில் லோகேஷ் கனகராஜ் வளர்ந்து வரும் நடிகராக இருக்கிறார். அவர் என்னை மிகவும் குழப்புகிறார். ஆனால், அவரை எனக்கு பிடிக்கவில்லை. அவரின் படங்களில் வன்முறை அதிகமாக இருக்கிறது. வயலன்ஸ் மட்டும் வாழ்க்கை கிடையாது, நாம் புத்தராக இருக்க வேண்டாம், இதற்காக வயலன்சாகவும் இருக்க வேண்டாம்.
ஏதாவது நல்லது செய்யனும்: நாம் பவர் புல்லான ஒரு மீடியாவில் இருக்கிறோம், அப்படி இருக்கும் போது இந்த சமூதாயத்திற்கு ஏதாவது நல்லது செய்ய முடியுமா என்று பார்க்க வேண்டும். நாம ஜெயிக்க வேண்டும், காசு சம்பாதிக்க வேண்டும் என்று அஜித் போல இருக்கக்கூடாது. இதற்காக பணம் சம்பாதிக்க கூடாது என்று நான் சொல்லவில்லை. என்னை பொறுத்தவரை நல்லவனாக வாழ வேண்டும், முடிந்தால் நல்லது செய்யுங்கள். ஆனால் நம்பிக்கையை மட்டும் விட்டுவிடாதீர்கள் இது தான் இளைய இளம் தலைமுறையினருக்கு நான் சொல்லும் அறிவுரை என்றார்.


Click it and Unblock the Notifications











